இந்தியாவில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தேஜர் போர் விமானம் இன்று துபாய் ஏர்ஷோவில் வானில் பறந்து கொண்டிருந்த போது கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. விமானம் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.10 மணிக்கு விமான சாகங்களை செய்து கொண்டிருந்தபோது இந்த போர் விமானம் திடீரென கீழே விழுந்து வெடித்து சிதறியது.. எனினும் விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்த விமானி பாராசூட் மூலம் உயிர் தப்பினாரா என்பது குறித்து உடனடி தகவல் எதுவும் வெளியாகவில்லை.. விபத்துக்குப் […]

ஜெய்ப்பூரில் உள்ள நீர்ஜா மோடி பள்ளியில் 9 வயது மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.. இதுகுறித்து சிபிஎஸ்இ (CBSE) விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விசாரணையில், பள்ளியின் பாதுகாப்பு விதிமுறைகளில் பெரும் அலட்சியம் இருந்தது தெரியவந்துள்ளது.. மேலும் இந்த சம்பவத்துக்கான உடனடி நடவடிக்கைகளிலும் கடுமையான குறைபாடுகள் இருந்தது என்பது கண்டறியப்பட்டுள்ளது.. உயிரிழந்த மாணவி தொடர்ந்து சக மாணவர்களின் கடுமையான துன்புறுத்தலுக்கு ஆளாகி […]

தமிழக வெற்றிக்கழக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. கரூர் சம்பவத்தை தொடர்ந்து, ஆதவ் அர்ஜுனா கடந்த செப்டம்பர் 30-ம் தேதி தனது எக்ஸ் பக்கத்தில் வன்முறையை தூண்டும் வகையில் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை போட்டிருந்தார்.. அவரின் பதிவில் “ ஆளும் வர்க்கத்தின் அடிவருடிகளாக காவல்துறை மாறி போனால் மீட்சிக்கு இளைஞர்களின் புரட்சி தான் ஒரே வழி என்றும், […]

அரசியல் கட்சிகளின் கூட்டங்கள், ரோடு ஷோவில் பங்கேற்கும் மக்களின் பாதுகாப்பிற்கு சம்மந்தப்பட்ட அரசியல் கட்சியினரே முழு பொறுப்பு என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அரசியல் கட்சிகளின் ரோடுஷோ பொதுக்கூட்டங்களுக்கான வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தது.. பொதுக்கூட்டங்களை நடத்துவதை முறைப்படுத்தவும், திட்டமிடவும் கண்காணிக்கவும் இந்த வழிகாட்டு நெறிமுறைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.. 5000 பேருக்கு மேலும் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கக்கூடிய பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள், […]

பஞ்சாப் மாகாணத்தின் பைசலாபாத் மாவட்டம் மாலிக்பூரில் உள்ள ஒரு ரசாயன தொழிற்சாலையில் இன்று காலை பாய்லர் வெடித்ததில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதிகாலையில் இந்த வெடிப்பு நிகழ்ந்ததால், தொழிற்சாலை கட்டிடங்களில் ஒன்று உட்பட அருகிலுள்ள கட்டமைப்புகள் இடிந்து விழுந்தன. மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்ற அச்சம் இருப்பதாகவும் பைசலாபாத் துணை ஆணையர் ராஜா […]