உத்தப்பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில், திருமணமாகி 3 ஆண்டுகளாக கள்ளக்காதலனுடன் உறவில் இருந்த பெண் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் நீலம் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். இவருக்கும் ரவி என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக காதல் உறவு நீடித்து வந்துள்ளது. நீலம் அடிக்கடி தனது காதலன் ரவியுடன் தங்குவதற்காக வீட்டை விட்டு வெளியேறி வந்துள்ளார். இந்நிலையில், 3 நாட்களுக்கு முன்பு நீலம் மீண்டும் […]

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் ஆண்டியோகுவா மாகாணத்தில், பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று மலைப்பாதையில் இருந்து பள்ளத்தில் கவிழ்ந்த கோர விபத்தில், 17 பேர் உயிரிழந்தனர் மற்றும் 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் எல் சிஸ்பெரோ என்ற கிராமப்புறப் பகுதியில் நடந்துள்ளது. ஆண்டியோகுவெனோ உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள், தங்கள் பள்ளிச் சுற்றுலாப் பயணத்தை முடித்துக்கொண்டு, டோலூவிலிருந்து மெடலினுக்குத் திரும்பி வந்துள்ளனர். அப்போது, […]

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் உள்ளாட்சி பகுதிகளிலுள்ள பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்ட செயலியில் ( App ) பதிவான மாணவர்களின் உணவு உட்கொள்ளும் பதிவுகள் சதவீதம் குறைவாக இருப்பது அறிவுறுத்துதல் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதல்வரின் காலை உணவு திட்டத்தை நாட்டிலேயே முதல்முறையாக, மதுரை ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் […]

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆதார் அட்டை வைத்திருக்கும் ஒட்டுமொத்தப் பயனாளிகளுக்கும் புதிய விதிகளை அமல்படுத்தியுள்ளது. இதன் மூலம், இனிமேல் ஆதார் மையங்களுக்குச் செல்லாமல், வீட்டிலிருந்தபடியே மொபைல் எண், முகவரி, பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரி போன்ற முக்கிய விவரங்களை மாற்றியமைக்க முடியும். இந்தச் சேவைக்காகப் பயனாளிகள் ரூ.75 கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய விதிகளின்படி, ஆதார் கார்டில் மொபைல் எண் அப்டேட் செய்யும் வசதி […]

தமிழ் மாதங்களில் மார்கழி மாதம் பெருமாள், சிவபெருமான் உள்ளிட்ட தெய்வங்களை வழிபாடு செய்வதற்குரிய மிகச் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது. இந்த முப்பது நாட்களும் தொடர்ந்து திருப்பாவை, திருவெம்பாவை பாடி இறைவனை வழிபடுவதன் மூலம், நினைத்த காரியங்கள் விரைவில் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மார்கழியில் தவிர்க்க வேண்டியவை : புதிய கட்டுமானங்கள் மற்றும் கிரகப்பிரவேசம் : புதிய வீட்டிற்குக் குடியேறுதல் (கிரகப்பிரவேசம்), வீடு கட்டும் பணிகளைத் துவங்குதல் போன்றவற்றைச் செய்யக்கூடாது. […]

தருமபுரி மாவட்டத்தில் டிசம்பர் 2025 வரை வட்டாரத்திற்கு 3 உயர் மருத்துவ சேவை முகாம்கள் வீதம் மொத்தம் 30 முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் 21.04.2025 அன்று உயர் மருத்துவ சேவைகள் வழங்க மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கடந்த 02.08.2025 […]

வீர, தீர செயல்களுக்கான அண்ணா பதக்கம் பெற விண்ணப்பிக்க இன்று என தமிழக அரசு அறிவித்துள்ளது. வீர, தீர செயல்களுக்கான ‘அண்ணா பதக்கம்’ ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவின்போது முதல்வரால் வழங்கப்படுகிறது. பொதுமக்களில் மூவருக்கும், அரசு ஊழியர்களில் மூவருக்கும் (சீருடைப் பணியாளர்கள் உட்பட) இந்த பதக்கங்கள் வழங்கப்படும். விண்ணப்பதாரர் தமிழகத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டியது அவசியம். வயது வரம்பு கிடையாது. 2026-ம் ஆண்டுக்கான ‘வீர தீர செயல்களுக்கான அண்ணா […]

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அ.தி.மு.க. அங்கம் வகித்துப் பலமான வியூகங்களை அமைத்து வருகிறது. இருப்பினும், கட்சியின் உட்கட்சிப் பூசல் தொடர்ந்து நீடிப்பதால், எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளின் குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன. அதிமுக-வை ஒருங்கிணைக்க வேண்டும் என்று குரல் கொடுப்பவர்கள் தொடர்ந்து கட்சியில் இருந்து நீக்கப்பட்டு வரும் சூழல் உள்ளது. சமீபத்தில், அதிமுகவின் மூத்த தலைவர் செங்கோட்டையன் […]

நமது பாரம்பரிய ஆன்மீக வழிபாட்டு முறைகள் மற்றும் சடங்குகளுக்கு பின்னால் ஆழமான அறிவியல் காரணங்கள் உள்ளன. மதம் மற்றும் அறிவியல் ஆகியவை ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்தவை என்பதற்கான பல சான்றுகளை நமது பாரம்பரிய பழக்கவழக்கங்கள் வழங்குகின்றன. நாம் இன்று கடைப்பிடிக்கும் பல மரபுகள், அன்றைய காலத்தின் நுட்பமான சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரப் புரிதலை மறைத்திருக்கின்றன. அத்தகைய முக்கியமான நடைமுறைகளில் ஒன்றுதான், கோயில் குளங்களில் நாணயங்களை வீசும் பழக்கம். இன்றைய […]

குடியரசுத் துணைத்தலைவர் சி பி ராதாகிருஷ்ணன், பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையரின் (சுவரன் மாறன்) நினைவு தபால்தலையை டெல்லியில் குடியரசுத் துணைத்தலைவர் இல்லத்தில் நேற்று (14.12.2025) வெளியிட்டார். நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசுத் துணைத்தலைவர், பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ், தமிழ் மொழி மற்றும் பண்பாட்டிற்கு மத்திய அரசு தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவு மற்றும் முக்கியத்துவத்தைப் பாராட்டினார். காசி தமிழ் சங்கமம் போன்ற முன்முயற்சிகளையும், இதுவரை உரிய […]