தமிழக அரசியல் வரலாற்றில் திராவிட கட்சிகள் தங்களின் கொள்கைகளை பரப்பவும், அரசியல் மாற்றங்களை நிகழ்த்தவும் ஊடகங்களை ஒரு பெரும் ஆயுதமாகப் பயன்படுத்தி வருகின்றன. அந்தப் பாரம்பரிய பாதையில் தற்போது நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ தனது முதல் அடியை எடுத்து வைக்கத் தயாராகி வருகிறது. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தவெக தனது அரசியல் நிலைப்பாடுகளையும், செயல்பாடுகளையும் மக்களிடம் சமரசமின்றி கொண்டு செல்ல சொந்தமாக ஒரு செய்தித் […]

சுதந்திர இந்தியாவின் நிதி வரலாற்றை எழுதும் போது, அதில் ஒரு தமிழரின் பெயர் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது அவசியம். பலரும் அறிந்திராத ஒரு சுவாரசியமான தகவல் என்னவென்றால், சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்த பெருமை ஒரு தமிழரையே சாரும். கோயம்புத்தூரின் மைந்தரான ஆர். கே. சண்முகம் செட்டி தான், 1947 நவம்பர் 26 அன்று விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் நிதி நிலை அறிக்கையை சமர்ப்பித்தார். அன்றைய […]

நிலம் அல்லது வீடு வாங்கும் ஒவ்வொருக்கும் பட்டா, சிட்டா என்பது அவசியமாகிறது. ஆனால், இவற்றின் உண்மையான அர்த்தம் மற்றும் முக்கியத்துவம் குறித்து பலருக்கு இன்னும் தெரிவதில்லை. இந்த ஆவணங்கள் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததால் தான், சொத்து விவகாரங்களில் பல மோசடிகள் அரங்கேறுகின்றன. எனவே, ஒரு சொத்தின் உரிமையாளராக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பட்டா, சிட்டா குறித்த தகவல்களை இந்தப் பதிவில் விரிவாக பார்ப்போம். பட்டா என்றால் என்ன..? […]

தமிழ்நாட்டின் முதுகெலும்பாக திகழும் விவசாயப் பெருமக்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ‘முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம்’ மாநில அரசு மூலம் மிக சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் மட்டுமின்றி, விவசாயத்தை சார்ந்திருக்கும் கூலித் தொழிலாளர்களும் பயன்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், தற்போது பல்வேறு நிதியுதவிகள் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் அடையாளமாக வழங்கப்படும் ‘மெரூன்’ நிறப் பாதுகாப்பு அட்டையை 18 முதல் 65 வயது […]

நாட்டின் முன்னணி பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL), தற்போது நாடு முழுவதும் காலியாக உள்ள 394 அப்ரண்டிஸ் (Apprentices) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும், ஆர்வமும் உள்ள இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி இந்தியன் ஆயில் நிறுவனத்தில் தங்களது தொழில்முறை பயணத்தை தொடங்கலாம். இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவோ அல்லது சம்பந்தப்பட்ட துறைகளில் டிப்ளமோ (Diploma), பட்டப்படிப்பு […]

தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் வியூகங்கள் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன. அந்த வகையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிரடியான ஒரு முடிவை அறிவித்துள்ளார். வரும் தேர்தலில் தான் நேரடியாக களம் காணப்போவதில்லை என்றும் தான் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்படுவதை விட, தனது கட்சியினரை வெற்றி பெறச் செய்து அவர்களை அமைச்சர்களாக பார்ப்பதே என்னுடைய தற்போதைய இலக்கு” என தனது […]

தமிழ்நாட்டில் டாஸ்மாக் விடுமுறை அறிவிப்பு வெளியாகும் போதெல்லாம், மதுபானங்களை முன்கூட்டியே கையிருப்பு வைப்பதில் மதுப்பிரியர்கள் காட்டும் ஆர்வம் வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. அந்த வகையில், 77-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு (ஜனவரி 26) மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு நேற்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஒரு நாள் இடைவெளியை சமாளிக்க, மதுப்பிரியர்கள் முந்தைய நாளே கடைகளில் அலைமோதியதால், தமிழகத்தின் மது விற்பனை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. […]

உடல்நலக் குறைபாடு ஏற்படும் போது அல்லது வழக்கமான பரிசோதனைகளின் போது மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மிக முக்கியமான ஒன்று இரத்த பரிசோதனை. ஆனால், ஒரு ஆய்வகத்திற்குச் சென்று இரத்தம் கொடுப்பதுடன் நமது கடமை முடிந்துவிடுவதில்லை. நாம் செய்யும் மிகச்சிறிய கவனக்குறைவான செயல்கள் கூட, பரிசோதனை முடிவுகளை தலைகீழாக மாற்றி தவறான சிகிச்சை முறைக்கு வழிவகுத்துவிடும். எனவே, இரத்தப் பரிசோதனைக்குத் தயாராகும் முன் ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டிய அத்தியாவசிய விதிமுறைகளை அறிந்து கொள்வது […]

தமிழ்நாட்டில் நிலவி வரும் போலிப் பத்திரப் பதிவு மற்றும் சொத்து மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தமிழக அரசு கொண்டு வந்த அதிரடி சட்ட திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தற்போது ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி, இனி அசையா சொத்துக்களைப் பதிவு செய்யும் போது அந்தச் சொத்தின் ‘அசல் ஆவணங்களை’ (Original Documents) சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒரே சொத்தை ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு விற்பனை செய்வது மற்றும் […]