குழந்தை பிறந்த பிறகு, பால் கொடுப்பது முதல் குழந்தையை தூங்க வைப்பது வரை ஒவ்வொரு விஷயத்திலும் பெற்றோருக்கு பல சந்தேகங்கள் இருக்கும். குறிப்பாக பால் குடித்த பிறகு குழந்தை அழுவது, உடலை நெளிப்பது அல்லது அமைதியின்றி இருப்பது ஏன் என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். பால் குடிக்கும் போது குழந்தையின் வயிற்றுக்குள் செல்லும் காற்றும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். அதனால், பால் கொடுத்த பிறகு குழந்தையை ஏப்பம் விடச் […]

டெல்லியின் முன்னாள் தலைமைச் செயலரும், முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் ஆட்சிக்காலத்தில் பணியாற்றியவருமான ராகேஷ் மேத்தா ஐ.ஏ.எஸ். (74), நொய்டாவில் உள்ள தனது இல்லத்தில் மனநல மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். செப்டம்பர் 6 அன்று நொய்டா செக்டார் 82-ல் உள்ள அவரது இல்லத்தில் சிலிங் ஃபேனில் தூக்கிட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட அவரது உடலின் அருகில், தற்கொலைக்குக் காரணமான மன மற்றும் உடல்நலப் பிரச்சினைகளைக் குறிப்பிடும் […]

சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் வெற்றி பெற்ற முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். அவரைத் தொடர்ந்து அதிமுக சார்பில் வெற்றி பெற்ற சி.விஜயபாஸ்கர் (விராலிமலை), எம்.ஆர்.விஜயபாஸ்கர் (கரூர்), மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்தியபாமா (தாராபுரம்), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்) ஆகிய 6 எம்.எல்.ஏ-க்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் […]

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 2024ம் ஆண்டு மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை குடித்த 67 பேர் இறந்தனர். இச்சம்பவம் பற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் விசாரணை அறிக்கை சட்டசபையில் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கையில், “கள்ளச்சாராயம் விற்பனைக்கு பெயர்போன இடங்களில் போலீஸ் மற்றும் வருவாய் அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்காததன் விளைவாக மரணங்கள் நிகழ்ந்துள்ளன. மதுவிலக்கு, வருவாய் மற்றும் காவல்துறை […]

சட்டப்பேரவை விதிகளை மீறி ஆதாரமற்ற அவதூறுகளைப் பேசியதாக முதலமைச்சர் விஜய் மீது திமுக துணை கொறடா கோவி. செழியன் சபாநாயகரிடம் உரிமை மீறல் புகார் அளித்துள்ளார். காவல்துறை மானியக் கோரிக்கை மீதான பதிலுரையின் போது முதலமைச்சர் விஜய் திமுக மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய பேரவைக் கூட்டத்தில் பேசிய திமுக கொறடா எ.வ.வேலு, “எனது நீண்ட சட்டமன்ற அனுபவத்தில் பல முதல்வர்களைப் பார்த்துள்ளேன்; அவர்கள் […]

சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான பதிலுரையின்போது தான் வெளிப்படுத்திய உடல்மொழி முற்றிலும் எதேச்சையானது என்றும், எந்தவொரு தனிநபரின் மனதையும் புண்படுத்தும் நோக்கம் தமக்கு இல்லை என்றும் முதலமைச்சர் விஜய் விளக்கம் அளித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மற்றும் மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு விவகாரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் விரிவான பதிலுரையாற்றினார். அப்போது, கடந்த கால திமுக ஆட்சி மற்றும் சர்க்காரியா ஆணைய விவகாரங்களை […]

உக்ரைன் மீதான போர் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு உள்நாட்டிலும் அரசியல் வட்டாரத்திலும் கடுமையான நெருக்கடிகள் எழுந்துள்ளதாக சர்வதேச ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பிரபல சர்வதேச இதழான The Economist மற்றும் புவிசார் அரசியல் ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, உக்ரைன் போரில் முழுமையான வெற்றியை ஈட்ட முடியாமல் பின்வாங்கினால், அது புதினின் சொந்த அரசியல் எதிர்காலத்திற்கே மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறும் என்ற […]

தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வரும் மிக முக்கியமான அத்தியாயம் சர்க்காரியா ஆணையத்தின் விசாரணை மற்றும் அதன் அறிக்கை குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். திமுகவில் இருந்தபோது அமைச்சர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த எம்.ஜி.ஆர், அதன் தொடர்ச்சியாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். பின்னர் அதிமுகவை தொடங்கிய அவர், திமுக அரசு மீது தீவிர ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கினார். இவருடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த […]

தெலங்கானா சட்டப்பேரவை வளாகத்தில், ஐஏஎஸ் அதிகாரி நவீன் மிட்டலின் தனிச் செயலாளர் திடீரென மயங்கி விழுந்த உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீர்ப்பாசனத் துறையின் முதன்மைச் செயலாளரான நவீன் மிட்டலிடம் தனிச் செயலாளராகப் பணியாற்றி வந்த ராஜு என்பவர், எதிர்பாராதவிதமாக மயங்கி விழுந்துள்ளார். அங்கு உடனிருந்த அமைச்சர் வக்கிட்டி ஸ்ரீஹரி (Vakiti Srihari), உடனடியாக நிலைமையைப் புரிந்து கொண்டு களத்தில் இறங்கினார். ராஜுவின் உயிரைக் காப்பாற்றும் முயற்சியாக அவருக்கு […]

உறவுகளில் நம்பிக்கையைவிட சந்தேகம் மேலோங்கும்போது, அதன் விளைவுகள் சில நேரங்களில் எதிர்பார்க்க முடியாத அளவுக்கு விபரீதமாக மாறிவிடுகின்றன. அசாம் மாநிலம் கவுகாத்தி அருகே திருமணமான சில மாதங்களிலேயே இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனைவியை கொலை செய்து, உடலை துண்டுகளாக வெட்டி வீட்டில் மறைத்து வைத்ததாக அவரது கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கவுகாத்தி அருகே உள்ள பசிஸ்தாபூர் பகுதியில் […]