மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் பெல் நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே, தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இறுதிநாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனம் : Bharat Electronics Ltd (BEL) வகை : மத்திய அரசு மொத்த பணியிடங்கள் : 20 பணியின் பெயர் : இன்ஜினியர் (தரக்கட்டுப்பாடு), சூப்பர்வைசர் (தரக்கட்டுப்பாடு) கல்வித் தகுதி : * இன்ஜினியர் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
ஜூன் 2 ஆம் தேதியான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்தது. சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் – டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. சர்வதேச பங்குச் சந்தைகளில் கலவையான போக்கு நிலவுகிறது. இதனால், பாதுகாப்பு கருதி தங்கத்தின் முதலீடு செய்வது அதிகரிப்பதால், ஆபரணத் தங்கம் விலையிலும் சற்றே உயர்வு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பரஸ்பர வரி விதிப்பால், […]
கனடா மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை ஒரு பயங்கர காட்டுத்தீ தொடர்ந்து பரவி, காற்றின் தரத்தைப் பாதித்தது, இதனால் மனிடோபா, ஆல்பர்ட்டா மற்றும் சஸ்காட்செவன் ஆகிய மூன்று மாகாணங்களில் 25,000 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர். கனடாவின் மனிடோபா (Manitoba) மாநிலத்திலிருந்து சுமார் 17,000 பேர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். மாநிலத்தில் 12 இடங்களில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. தீயை அடுத்து மனிடோபாவில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. தீயால் […]
எதிரிகளின் ஆளில்லா விமானங்களை வெற்றிகரமாக சுட்டு வீழ்த்த லேசர் ஆயுதத்தைப் பயன்படுத்திய முதல் நாடாக இஸ்ரேல் மாறியுள்ளது, இது நவீன போரில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. காசாவில் நடந்து வரும் போரின் போது இந்த முன்னேற்றம் ஏற்பட்டது. இஸ்ரேலிய விமானப்படையின் வான்வழி பாதுகாப்பு அணி நேரடி போர்க்கள நிலைமைகளில் ஒரு முன்மாதிரி லேசர் வான் பாதுகாப்பு அமைப்பைப் பயன்படுத்தியது. இஸ்ரேலை தளமாகக் கொண்ட ரஃபேல் அட்வான்ஸ்டு டிஃபென்ஸ் சிஸ்டம்ஸ் […]
உத்தரப் பிரதேசத்தில் லட்டில் போதை மாத்திரை கலந்து கொடுத்து தடகள வீராங்கனையை ஆசிரம சாமியார் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் கோவிந்த் நகர் பகுதியில் உள்ள ஒரு ஆசிரமத்தில் 30 வயது தேசிய அளவிலான டேக்வாண்டோ தடகள வீராங்கனை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. புகாரின்படி, அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு முதியவர், ஆசிரமத்தில் ஒரு கடை அமைக்க […]
நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டியில் குகேஷிடம் தோல்வியடைந்த அதிருப்தியில் கார்ல்சன் மேஜையை கையால் ஓங்கி அடித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டி ஸ்டாவஞ்சர் நகரில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் இந்தியா சார்பில் உலக சாம்பியன் குகேஷ் மற்றும் அர்ஜூன் எரிகைசி ஆகியோர் பங்கேற்றுள்ளனர். அதேபோல, நார்வேவைச் சேர்ந்த 5 முறை உலக சாம்பியனான மாக்னஸ் கார்ல்சன் உள்பட மொத்தம் 6 பேர் […]
பொதுவாக, அனைத்து வங்கிகளிலும் ஒவ்வொரு வங்கிக் கணக்கிற்கும் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்க வேண்டும் என்பது வங்கியின் விதிமுறைகள் ஆகும். அப்படி, பராமரிக்காத பட்சத்தில் அதற்கு தனி அபராதம் விதிக்கப்படும். இந்த அபராதம் வங்கியை பொறுத்து மாறுபடும். இந்நிலையில் தான், தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை பொதுத்துறை வங்கியான கனரா வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி, இனி, கனரா வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள், குறைந்தபட்ச இருப்புத் தொகையை (மினிமம் […]
தமிழ்நாட்டில் ஒருவழியாக கோடை விடுமுறை முடிந்து மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு திரும்புகின்றனர். கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி இறுதி ஆண்டு தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை தொடங்கியது. கிட்டத்தட்ட 45 நாட்களாக மாணவர்கள் இந்த கோடை விடுமுறையை கொண்டாடி வந்தனர். மேலும் இதனால் ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலாத் தலங்களில் அதிகளவில் கூட்டம் கூடியது. இந்த சூழலில் தான், கோடை விடுமுறை முடிந்து இன்று முதல் தமிழ்நாட்டில் மீண்டும் பள்ளிகள் […]
ராமதாஸை தலைவராக ஏற்றுக்கொண்டால், அன்புமணிக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என வன்னியர் சங்க மாநிலத் தலைவர் பு.தா.அருள்மொழி கூறியுள்ளார். தந்தை ராமதாஸ் – மகன் அன்புமணி இடையே நீண்ட நாட்களாக புகைந்து கொண்டிருந்த பிரச்சனை கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெடித்தது. பாமக தலைவராக அன்புமணி தேர்வு செய்யப்பட்ட நிலையில், அவர் வகித்து வந்த இளைஞரணி தலைவர் பதவி, மகள் வழி பேரன் முகுந்தனுக்கு கொடுத்தார் ராமதாஸ். ஆனால், இதற்கு […]
மத்திய அரசுக்கு எதிரான திமுகவின் தீர்மானங்கள் அனைத்தும், உண்மையை எதிர்கொள்ள முடியாத ஒருதலைபட்ச அரசியலின் வெளிப்பாடு என பாஜக மாநில தலைவர் நயினார் விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தொடர்ந்து மத்திய அரசு நிதி விஷயத்தில் தமிழகத்தை வஞ்சிக்கிறது என்ற உண்மையற்ற பிரச்சாரத்தை திமுக வைத்துக் கொண்டே வருகிறது. கடந்த மக்களவைத் தேர்தலின்போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டதைப்போல 2014-ம் ஆண்டு முதல் வசூலிக்கப்பட்ட வரியைவிட […]