ஜார்ஜண்ட் மாநில உயர்கல்வி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சுதிவ்யா குமார் சோனு, திடீர் உடல்நலக்குறைவு காரணமாக கிரிடீ மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் நள்ளிரவில் காலமானார். அமைச்சரின் மறைவுக்கு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (JMM) கட்சி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது. “எங்களது அர்ப்பணிப்புமிக்க தோழரும், மாநில அமைச்சருமான சுதிவ்யா குமாரின் மறைவு ஜே.எம்.எம் குடும்பத்தையும், மாநில அரசையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது சேவை மற்றும் தியாகம் எப்போதும் நினைவுகூரப்படும்” […]

வீட்டிலிருந்தே வேலை செய்வது பலருக்குப் பிடித்தமான ஒன்றாக இருந்தாலும், தொடர்ந்து இரண்டு வாரங்கள் வீட்டில் இருந்தே வேலை பார்த்ததில் தனது மூளையே ‘செயலிழந்து நொந்துபோய்விட்டது’ என புனேவைச் சேர்ந்த பெண் ஒருவர் தெரிவித்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. புனேவைச் சேர்ந்த மோஹினி சவான் என்ற பெண், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில், தான் பணியாற்றும் நிறுவனத்தில் வழக்கமாக ‘ஹைப்ரிட்’ (Hybrid – சில நாட்கள் அலுவலகம், சில […]

தாய்லாந்தில் ஆணுறுப்பை பெரிதாக்கும் அழகுசாதன சிகிச்சை செய்துகொண்ட பிரிட்டன்-நைஜீரிய சமூக ஊடக பிரபலம் மற்றும் தொழிலதிபரான இகோ “டைனி” உபிரிகோ (43), சிகிச்சையில் ஏற்பட்ட பக்கவிளைவு காரணமாக உயிரிழந்தார். லண்டனைச் சேர்ந்த 43 வயதான இகோ உபிரிகோ, தனது மனைவியுடன் தாய்லாந்தின் பாங்காக் நகருக்குச் சுற்றுலா சென்றிருந்தபோது அங்குள்ள ஒரு கிளினிக்கில் 40 மில்லி லிட்டர் ஹைலூரோனிக் அமிலம் (Hyaluronic Acid) மற்றும் லிடோகைன் (Lidocaine) ஊசிகளைச் செலுத்திக்கொண்டார். சிகிச்சைக்குப் […]

எப்போது பேச வேண்டும், எப்போது அமைதியாக இருக்க வேண்டும் என்பதையும் தெரிந்திருப்பதே புத்திசாலித்தனம். வாழ்க்கையில் சில சூழ்நிலைகளில் நம்முடைய கருத்தை வெளிப்படுத்துவது பிரச்சனையை தீர்ப்பதற்கு பதிலாக மேலும் சிக்கலை உருவாக்கிவிடலாம். இதுபோன்ற சூழ்நிலைகளில் தேவையற்ற பேச்சை தவிர்ப்பது நல்லது என்ற கருத்தை சாணக்கியரின் நீதிகள் வலியுறுத்துகின்றன. அரசியல், நிர்வாகம் மற்றும் மனித இயல்பு குறித்து ஆழமாக சிந்தித்த சாணக்கியரின் கருத்துகள், “சாணக்கிய நீதி” என்ற பெயரில் இன்றும் பரவலாக பேசப்படுகின்றன. […]

உக்ரைன் தலைநகர் கீவ் மீதான தாக்குதல்களை 3 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தனது ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார். உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க பிரதிநிதிகளான ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் மாஸ்கோ சென்றுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க பிரதிநிதிகள் குழுவின் வருகையை முன்னிட்டு, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி முன்வைத்த தற்காலிக போர்நிறுத்த […]

வியட்நாமில் நேற்று (செப்டம்பர் 5) நடைபெற்ற பிரம்மாண்டமான 73-வது உலக அழகிப் போட்டியில் (Miss World 2026), டொமினிகன் குடியரசை சேர்ந்த ஜோஹெய்ரி மோலா (Joheirry Mola) வெற்றி பெற்று ‘மிஸ் வேர்ல்ட் 2026’ மகுடத்தைக் கைப்பற்றினார். இந்த நெகிழ்ச்சியான தருணத்தில், கடந்த ஆண்டின் உலக அழகியான தாய்லாந்தின் ஓபல் சுச்சாதா சுவாங்சஸ்ரீ அவருக்கு புதிய கிரீடத்தைச் சூட்டினார். இந்தப் போட்டியில் ஸ்பெயின் நாட்டின் எலிசபெத் ரெய்னஸ் முதல் ரன்னர்-அப் […]

குழந்தைக்கு எப்போது என்ன உணவு கொடுக்க வேண்டும் என்பதில் புதிய பெற்றோர்களுக்கு பல கேள்விகள் இருக்கும். அதில் சர்க்கரையை எப்போது அறிமுகப்படுத்தலாம் என்பதும் முக்கியமான ஒன்று. குழந்தைப் பருவத்தின் தொடக்கத்திலேயே அதிக சர்க்கரை பழக்கத்தை ஏற்படுத்தாமல் இருப்பது, எதிர்கால ஆரோக்கியத்திற்கு பல வகைகளில் உதவக்கூடும் என ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. குறிப்பாக குழந்தையின் வாழ்க்கையின் முதல் 1,000 நாட்கள் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான காலமாக பார்க்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் கிடைக்கும் உணவு […]

ஆசியக் கோப்பை 2026 மகளிர் டி20 தொடரில் பாகிஸ்தானை 55 ரன்களுக்கு சுருட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்தியா. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி தோல்வியே காணாமல் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியால் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களின் திறமையான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியவில்லை. டாஸ் வென்ற பாகிஸ்தான் […]

இந்திய இரயில்வேயின் 60 நாட்கள் முன்பதிவு விதிமுறைகளின்படி, 2026 தீபாவளி பண்டிகைக்கான (நவம்பர் 8) இரயில் பயணச் சீட்டு முன்பதிவு இன்று (செப்டம்பர் 6 ஆம் தேதி) முதல் தொடங்குகிறது. தினமும் காலை 8:00 மணிக்கு IRCTC இணையதளம் மற்றும் இரயில் நிலைய முன்பதிவு மையங்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கும். பண்டிகைக் காலத்தில் அதிக அளவில் பயணிகள் பயணிப்பார்கள் என்பதால், கடைசி நேர நெரிசலைத் தவிர்க்க பயணிகள் முன்கூட்டியே திட்டமிட்டு […]

தற்கால அவசர மற்றும் இயந்திர வாழ்க்கையில், குறிப்பாக பெங்களூரு போன்ற பெருநகரங்களில் உள்ள தகவல் தொழில்நுட்பம் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றும் இளைஞர்களுக்கு பணிச்சுமையால் மன அழுத்தம் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிவிட்டது. இந்த அழுத்தத்தில் இருந்து விடுபடவும், வார இறுதி விடுமுறை நாட்களை புத்துணர்ச்சியுடன் கழிக்கவும் பலரும் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களுக்கு மலையேற்றம் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில் மலையேற்ற பிரியர்களின் விருப்ப பட்டியலில் முதலிடம் பிடித்து […]