“அரசியல் எல்லைகளை நதிகள் அறிவதில்லை”!. மாறிய மோதல் போக்கு!. டி.கே.சிவகுமாரிடம் ஏற்பட்ட மாற்றத்துக்கு என்ன காரணம்?.

cmvijaydksmeeting

சென்னையை அடுத்துள்ள கோவளத்தில் நடைபெற்ற 31-வது தென் மாநிலங்களின் முதலமைச்சர்கள் மாநாட்டில் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் கலந்துகொண்டு பேசினார். நதிநீர் விவகாரங்களில் மோதல் போக்கை மாற்றிவிட்டு, மாநிலங்களுக்கு இடையே ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டிய நேரம் இது என்று அவர் வலியுறுத்தினார்.


அரசியல் எல்லைகளை நதிகள் அறிவதில்லை எனக் குறிப்பிட்ட அவர், கர்நாடக அரசு மற்ற மாநிலங்களின் உரிமைகளை மதிக்கிறது என்றும், அதே நேரத்தில் கர்நாடகத்துக்கான சட்டப்பூர்வமான நீர் பங்கை மதிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

குறிப்பாக, பெரிதும் பேசப்பட்டு வரும் மேகதாது அணை திட்டம் கர்நாடகாவுக்கு மட்டுமல்லாமல், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கும் மிகவும் முக்கியமானதாகும் என்று சிவகுமார் குறிப்பிட்டார். இத்திட்டத்தின் மூலம் கிடைக்கும் ஒவ்வொரு நீர்த்துளியும் அண்டை மாநில விவசாயிகளுக்கும் நன்மை பயக்கும் என்று அவர் தெரிவித்தார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மற்றும் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் ஆகியோர் அருகருகே அமர்ந்து விவாதித்தது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser5

Next Post

காவிரி விவகாரம்..!! அமித்ஷா, டி.கே. சிவக்குமார் முன்பு பாயிண்டுகளை அடுக்கிய முதல்வர் விஜய்..!!

Thu Aug 20 , 2026
சென்னையை அடுத்த கோவளத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற 31-வது தென்மண்டல கவுன்சில் மாநாட்டில், நதிநீர் உரிமைகள், நியாயமான நிதிப்பகிர்வு, நீட் விலக்கு மற்றும் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மிக விரிவாகவும் ஆணித்தரமாகவும் தனது கருத்துக்களைப் பதிவு செய்தார். கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கேரள முதலமைச்சர் சதீசன், தெலங்கானா துணை முதலமைச்சர் […]
Vijay 2026 3

You May Like