கொச்சியில் இருந்து அபுதாபி நோக்கிச் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் போயிங் 737 (IX 415) விமானத்தின் என்ஜினில் எண்ணெய் அளவு திடீரென குறைந்ததை தொடர்ந்து, விமானம் பாதியிலேயே மீண்டும் கொச்சி விமான நிலையத்திற்கே திருப்பி அனுப்பப்பட்டது. வானில் 36,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்தின் 1-வது என்ஜினில் உள்ள இன்ஜின் ஆயில் அளவு வெகுவாகக் குறைந்து வருவதை விமானப் பணியாளர்கள் கண்டறிந்தனர். இதுகுறித்து முறையான விமானப் பாதுகாப்பு […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது, இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் ரசிகர்கள் இந்திய வீராங்கனை கிராந்தி கவுட் மீது பாலியல் ரீதியான மற்றும் பாலினத் தாக்குதல் கருத்துகளைத் தெரிவித்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ‘எக்ஸ்’ தளத்தில் பரவி வரும் அந்த வீடியோவில், பாகிஸ்தான் ரசிகர்களின் கூட்டத்திலிருந்து இந்திய வீராங்கனையின் பாலினம் மற்றும் தோற்றத்தைக் குறிவைத்து அவதூறான […]
உத்தரகண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டத்தில் பரவியுள்ள மர்ம காய்ச்சல் மற்றும் மஞ்சள் காமாலை நோய் காரணமாக ஒரு பெண் உயிரிழந்துள்ளதுடன், பத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜியோலிகோட் (Jeolikote) மற்றும் அதனைச் சுற்றியுள்ள 8 கிராமங்களில் குடிநீர் மாசுபாடு காரணமாக இந்த நோய் பரவியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இந்த திடீர் சுகாதார அவசரநிலையை அடுத்து, அப்பகுதியில் மருத்துவ முகாம்கள் அமைத்தல், குடிநீரைத் தூய்மைப்படுத்துதல் மற்றும் மாற்று […]
புற்றுநோய் என்றதுமே நம் நினைவுக்கு வருவது புகைப்பிடித்தல், மது அருந்துதல், அதிகப்படியான சூரிய ஒளி தாக்கம் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை போன்றவையே. ஆனால், இவற்றையெல்லாம் தாண்டி அனைவராலும் எதிர்கொள்ளப்படும், எவராலும் தவிர்க்க முடியாத ஒரு முக்கிய ஆபத்து காரணி உள்ளது. அதுதான் வயது முதிர்வு. புற்றுநோய் எந்த வயதினரையும் தாக்கலாம் என்றாலும், வயதாக ஆக பெரும்பான்மையான புற்றுநோய்கள் வருவதற்கான ஆபத்து கணிசமாக அதிகரிக்கிறது. இதுவே புற்றுநோய்க்கான மிக முக்கியமான […]
3 நாட்கள் விடுமுறைக்கு பின் இன்று மீண்டும் சட்டப்பேரவை கூடியது. அப்போது காவல்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் பதிலளித்தார். முதல்வர் பேச ஆரம்பித்தது முதலே எதிர்க்கட்சிகள் இருக்கையில் எழுந்து கூச்சலிட்டு அமளியில் ஈடுபட்டது. இருப்பினும் முதல்வர் ஆக்ரோசத்துடன் திமுகவை தாக்கி முதல்வர் பேசினார். அவர், பேசியதாவது, பேச்சுரிமை என்பது பெண்களைத் தரம் தாழ்த்திப் பேசுவதற்கோ அல்லது இரட்டை அர்த்தத்தில் பேசுவதற்கோ பயன்படுத்தப்படக் கூடாது […]
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரின் வாழ்க்கையை சில நொடிகளில் சிதைத்துள்ளது கேரளாவில் நடந்த கோர விபத்து. சாலையோரம் பைக்கை நிறுத்தி தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த கணவன், மனைவி மற்றும் 3 வயது மகன் மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில் மூவரும் உயிரிழந்தனர். திருச்சூர் மாவட்டம் குருவாயூர் – குன்னம்குளம் சாலையில் சனிக்கிழமை நள்ளிரவில் இந்த விபத்து நடந்தது. முனீர் (35), […]
ஹிமாச்சலப் பிரதேசத்தில் திருமணமான பெண் மருத்துவர் தொடர்பான கள்ளக்காதல் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவன் வீட்டில் இல்லாத நேரத்தைப் பயன்படுத்தி இரண்டு இளைஞர்களை வீட்டிற்கு வரவழைத்து அந்தப் பெண் ரகசியமாக சந்தித்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், கணவன் எதிர்பாராத நேரத்தில் வீடு திரும்பியபோது சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சம்பவத்தன்று வெளியே சென்றிருந்த கணவன், திட்டமிட்ட நேரத்துக்கு முன்பாகவே வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் கதவு உள்ளே பூட்டப்பட்டிருந்ததால் அவருக்கு […]
மூன்று நாள் இடைவெளிக்குப் பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடிய நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான தனிநபர் தீர்மானத்தை முன்வைப்பது முதல் திமுக ஆட்சிக்கால ஊழல் விவகாரங்கள் வரை அவையில் பல்வேறு அரசியல் விவாதங்கள் இடம்பெற்றன. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அளித்த கடிதம் தொடர்பாக ஏற்பட்ட அமளிக்கு இடையே, காவல்துறை மானியக் கோரிக்கை மீதான பதிலுரையில் முதலமைச்சர் விஜய் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்தார். சட்டப்பேரவை நடவடிக்கைகள் […]
பல ஆண்டுகளாக நீடித்த ‘கைலாசா’ நாட்டின் இருப்பிட மர்மத்துக்கு நித்தியானந்தா தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள கினியா-பிசாவ் அருகே, அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் கைலாசா அமைந்துள்ளதாக அவர் வெளியிட்ட புதிய வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். இதுவரை ரகசியமாக வைத்திருந்த கைலாசாவின் இருப்பிடத்தை அவர் தற்போது வெளிப்படுத்தியுள்ளார். இந்தியாவில் பல்வேறு வழக்குகளை எதிர்கொண்ட நித்தியானந்தா, கடந்த 2016ஆம் ஆண்டு தனது சீடர்களுடன் நாட்டை விட்டு வெளியேறினார். அதன் பின்னர் வெளிநாட்டில் […]
கள்ளக்காதல் தொடர்பு ஒரு குடும்பத்தில் ஏற்படுத்திய விபரீத முடிவு உத்தரப்பிரதேசத்தின் அமேதி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேறு ஒரு நபருடன் இருந்த தொடர்பு நாளடைவில் தீவிரமடைந்த நிலையில், கணவனை கொலை செய்ய மனைவியும் அவரது காதலனும் திட்டமிட்டதாக காவல்துறை விசாரணையில் தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவத்தன்று இரவு, கணவனுக்கு வழங்கிய உணவு அல்லது பானத்தில் மயக்க மருந்தைக் கலந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதை உட்கொண்ட அவர் ஆழ்ந்த உறக்கத்தில் சென்ற […]

