நடிகர் விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்காக சினிமா ஃபைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் ஃபிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற ரூ. 21.29 கோடி கடனை லைகா நிறுவனம் அவருக்குப் பதிலாக செலுத்தியிருந்தது. இந்தத் தொகையைத் திருப்பிச் செலுத்தும் வரை, விஷாலின் எதிர்கால படங்களின் டிஜிட்டல், ஒளிபரப்பு உள்ளிட்ட முதன்மை உரிமைகள் லைகாவுக்கு சொந்தமாக இருக்கும் என்று ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால், ஒப்பந்த நிபந்தனைகளை மீறி, சில பட உரிமைகளை மூன்றாம் […]

தமிழ்த்திரை உலகின் வரலாற்றில் எம்.கே. தியாகராஜ பாகவதருடன் இணைந்து முன்னணி நட்சத்திர ஜோடியாக விளங்கியவர், முதல் ‘சூப்பர் நடிகர்’ என்று ரசிகர்களால் புகழப்பட்ட பி.யு. சின்னப்பா. புதுக்கோட்டையில் பிறந்த இவர், வெறும் 6 வயதில் நாடக வாழ்க்கையை தொடங்கி, 12 வயதில் மாத சம்பளமாக ரூ.15 பெற்றார். இவரது அபார பாடும் திறமையால், மதுரை ஓரிஜினல் போர்ஸ் கம்பெனி சம்பளத்தை ஒரேயடியாக ரூ.75 ஆக உயர்த்தியது. நாடக மேடையில் ராஜபார்ட் […]

திரையுலகில் ஜொலிக்கும் பல நட்சத்திரங்கள் பின்னர் காணாமல் போய்விடுகின்றனர். ஒரு காலத்தில் தங்கள் நடிப்பாலும் அழகாலும் ரசிகர்களை கவர்ந்த கதாநாயகிகள்.. இப்போது எங்கே இருக்கிறார்கள்? என்ன செய்கிறார்கள்? ஒவ்வொரு திரைப்பட ரசிகரும் எப்போதும் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்பார்கள். ‘ஆட்டோகிராஃப்’ படத்தின் மூலம் ரசிகர்களின் ஃபேவரைட் நடிகையான கோபிகா அவர்களில் ஒருவர்… நீண்ட காலமாக வெள்ளித்திரையிலிருந்து விலகி இருந்த கோபிகா தற்போது என்ன செய்கிறார் தெரியுமா? கோபிகா தற்போது திரை […]

இந்தியா முழுவதும் உள்ள டாப் 10 ஹீரோக்களின் பட்டியலை ஆர்மாக்ஸ் மீடியா ஒவ்வொரு மாதமும் வெளியிடுகிறது. அக்டோபர் மாதத்திற்கான சமீபத்திய பட்டியல் வந்துவிட்டது. வழக்கம் போல், பிரபாஸ் முதலிடத்தில் இருக்கிறார். ஒவ்வொரு மாதமும் அவர் முதலிடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இமேஜ், படத்தின் வசூல், மார்க்கெட் மற்றும் சமூக ஊடகங்களில் விவாதம் ஆகியவற்றின் அடிப்படையில், பிரபாஸ் முதலிடத்திலேயே இருக்கிறார் கூறலாம். தமிழ் நடிகர் விஜய் 2-வது இடத்தில் உள்ளார். அவர் […]

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஜய் தனக்கென கோடிக்கணக்கான ரசிகர்களை உருவாக்கி வைத்திருக்கிறார் விஜய்.. அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராகவும் வலம் வருகிறார்.. விஜய் நடிப்பில் கடைசியாக கோட் படம் வெளியானது.. இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அவர் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார்.. அரசியல் தலைவராக மாறி உள்ள விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன் […]

சென்னையில் போதை பொருள் வழக்கில் நடிகர் சிம்புவின் முன்னாள் உதவியாளர் ஷர்புதின் உள்ளிட்ட 3 பேர் போதை பொருள் போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.. ஷர்புதின் சிம்புவின் உதவியாளராகவும் நெருங்கிய நண்பராகவும் இருந்தவர் என்று தகவல் வெளியாகி உள்ளது.. மேலும் சிம்புவின் ஈஸ்வரன் படத்தின் இணை தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் ஷர்புதீன் இருந்துள்ளார்.. போதை பொருள் விற்பனை தொடர்பான வழக்கில் கைதானவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் காவல்துறையினர் ஷர்புதின் உள்ளிட்ட 3 பேரை […]