சமீபத்தில் வெளியான ‘ஹூருன் இந்தியா பணக்காரர்கள் பட்டியல் 2026’-ல், பாலிவுட்டின் ‘பாட்ஷா’ ஷாருக்கான் மீண்டும் இந்தியாவின் மிகப்பணக்கார நடிகராக முதலிடத்தைப் பிடித்துள்ளார். கடந்த ஆண்டை விட இவரது சொத்து மதிப்பில் பெரும் சரிவு ஏற்பட்டபோதிலும், இந்திய திரையுலகின் மிகப்பணக்கார நடிகர் என்ற தனது இடத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டுள்ளார். கடந்த ஆண்டு ஷாருக்கானின் சொத்து மதிப்பு ரூ.12,490 கோடியாக இருந்த நிலையில், இந்த ஆண்டு அது ரூ.10,000 கோடியாகக் குறைந்துள்ளது. […]
பொழுதுபோக்கு
Cinema news| It provides latest Tamil cinema news, breaking news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7
1980-களில் தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகைகளாக வலம் வந்த சகோதரிகளான அம்பிகா மற்றும் ராதா இடையே தற்போது நிதிப் பிரச்சினை காரணமாக குடும்ப மோதல் ஏற்பட்டுள்ளது. தனது கையொப்பமிட்ட காசோலைகளைத் தவறாகப் பயன்படுத்தி ரூ. 46 கோடி பெற முயன்றதாகச் சகோதரி அம்பிகா மற்றும் சகோதரர் மல்லிகார்ஜுன குஞ்சன் நாயர் மீது சென்னை பெருநகரக் காவல் ஆணையரிடம் நடிகை ராதா புகார் அளித்துள்ளார். ராதா அளித்துள்ள புகாரின்படி, அவர் தனது […]
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 10 மேடையில் ‘தலைமைத்துவம்’ குறித்து தான் பேசிய வார்த்தைகள், சர்ச்சையான நிலையில், அதற்கு விஜய் சேதுபதி விளக்கம் அளித்துள்ளார். நடிகர் கமல்ஹாசனுக்குப் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் விஜய் சேதுபதி, சமீபத்திய வார இறுதி எபிசோடில் போட்டியாளர் ஒருவருக்கு ஆலோசனையும் அறிவுரையும் வழங்கினார். அப்போது, “தலைவன் என்றால் என்னவென்றே தெரியாமல், தலைமைப் பண்பைப் பற்றிப் புரிதலே இல்லாமல் வாய்க்கு வந்த […]
பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் போட்டியாளர் சாதிகாவுடன் விஜய் சேதுபதி நடத்திய உரையாடல் சமூக வலைத்தளங்களில் வைரலானது. தலைமைப் பண்பு மற்றும் எடுத்த முடிவில் உறுதியாக இருப்பது குறித்து அவர் பேசிய கருத்துகள், மறைமுகமாக தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான விஜய்யை குறிவைத்துச் சொல்லப்பட்டதாகப் பரவலாக விவாதிக்கப்பட்டது. இருப்பினும், விஜய் சேதுபதி தனது பேச்சில் விஜய் பற்றியோ அல்லது அவரது அரசியல் கட்சி பற்றியோ எதையும் […]
தமிழ் திரையுலகின் நட்சத்திர தம்பதிகளான சூர்யா மற்றும் ஜோதிகா, 1999-இல் வெளியான ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ திரைப்படத்தின் போது சந்தித்து, பின்னர் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தியா, தேவ் ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர். நடிப்பிலும் தயாரிப்பிலும் கலக்கி வரும் இத்தம்பதியின் மொத்த சொத்து மதிப்பு சுமார் ₹681 கோடி என ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சம்பளம் மற்றும் வருமானம்: சூர்யாவின் தனிப்பட்ட சொத்து மதிப்பு சுமார் ₹350 […]
ரன்பீர் கபூர், யாஷ் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘ராமாயணம்’ படத்தின் டிரெய்லர் கடந்த ஜூலை மாதம் பிரம்ம முகூர்த்தத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி திருநாளை முன்னிட்டு, இந்தப் புராணக் காவியத்தின் தயாரிப்பாளர்கள் ரசிகர்களுக்குச் சில சிறப்புப் பரிசுகளை வழங்கியுள்ளனர். அதன்படி, ரன்பீர் கபூர் ராமர் விறைவிலும், சாய் பல்லவி சீதையாகவும் தோன்றும் புதிய ‘சீதா ராம்’ போஸ்டரை இன்று காலை படக்குழு வெளியிட்டது. […]
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் அஜித்குமாரின் கார் பந்தய பயணத்தை மையமாக வைத்து உருவாகி வரும் ‘கிளாடியேட்டர்ஸ்’ என்ற ஆவணப் படத்தில், முதல்வர் விஜய் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில், ‘டாகு-டிராமா’ (Docu-drama) பாணியில் தயாராகி வரும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். சமீபத்தில் தமிழக திரையரங்குகளில் வெளியான இப்படத்தின் முன்னோட்டம் (டிரைலர்) ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தமிழகத்திற்கான […]
பிரபல நடிகர் யஷ் நடிப்பில் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவான ‘டாக்சிக்: ஏ ஃபேரிடேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்’ (Toxic: A Fairytale for Grown-Ups) திரைப்படம், இந்தியத் திரையுலக வரலாற்றிலேயே மிகப்பெரிய நிதி நெருக்கடியைச் சந்திக்கும் படமாக மாறி வருகிறது. இப்படம் உலகளவில் சுமார் ரூ. 300 கோடி வரை நஷ்டம் அடையக்கூடும் என வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே நேரத்தில் உருவாக்கப்பட்ட இப்படத்தின் ஆங்கிலப் […]
சமூக வலைதளங்களில் தற்போது 1980களின் ரெட்ரோ தோற்றத்தை அடிப்படையாகக் கொண்ட AI புகைப்பட டிரெண்ட் வேகமாக வைரலாகி வருகிறது. பழைய கால உடைகள், ஹேர் ஸ்டைல் மற்றும் விண்டேஜ் புகைப்படங்களின் தோற்றத்தைப் பிரதிபலிக்கும் வகையில் பலரும் தங்களது புகைப்படங்களை மாற்றி சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த டிரெண்டில் சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் ஆர்வத்துடன் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் லெஜண்ட் சரவணனும் தற்போது 80ஸ் ரெட்ரோ […]
இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர் மற்றும் யஷ் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்படும் பிரம்மாண்டமான புராணத் திரைப்படமான ‘ராமாயணம்: பாகம் 1’ (Ramayana: Part 1) குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. உலகளாவிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டிருந்தாலும், வெளிநாட்டு ரசிகர்களுக்கு ஒரு நாள் முன்பாகவே இப்படம் திரைக்கு வரவுள்ளது. ஆஸ்திரேலியாவில் முன்கூட்டியே ரிலீஸ்: தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா அறிவித்தபடி, இப்படம் இந்தியாவில் நவம்பர் 8-ம் தேதியும், உலகின் பிற […]

