தமிழ் சினிமா பலருக்கு கனவையும், சிலருக்கு கனத்த சுமையையும் கொடுத்துள்ளது. பிரபலங்களின் வாழ்க்கைக்குப் பின்னால், பல மறைக்கப்பட்ட சாயல்கள் உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மைதான். சினிமா துறையில் “அட்ஜஸ்மென்ட்” என்ற வார்த்தை, வாடிக்கையாக உலாவும் சூழலில், சிலர் அதை எதிர்த்து பேசுகிறார்கள். சிலர், நீதி தேடிக்கொண்டே இருக்கிறார்கள். அந்த வகையில், கோடம்பாக்கம் கதவுகளை தட்டி நுழைந்த ஒருவர், ஆரம்பத்தில் ஒரு உதவி இயக்குநராக தனது பயணத்தைத் தொடங்கினார். முதலில் […]

திரைப்படத்திற்காக பெற்ற 6 கோடி ரூபாய் முன் பணத்தை திருப்பி தருமாறு நடிகர் ரவி மோகனுக்கு உத்தரவிடக்கோரி, பாபி டச் கோல்டு யுனிவர்சல் பி.லிமிடெட் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. அந்த மனுவில், தங்களது நிறுவனத்தின் சார்பில் இரண்டு படங்களில் நடிப்பதற்காக நடிகர் ரவி மோகனுடன் கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும், முதல் படத்திற்கு ஆறு கோடி ரூபாய் முன்பணமாக கொடுக்கப்பட்டதாக […]

பிரபலங்களின் வீட்டு சமையல் என்றாலே அது மாதம்பட்டி ரங்கராஜ் என்று சொல்லும் அளவுக்கு அவர் பிரபலமாக இருக்கிறார். இவர், கடந்த 2019இல் வெளிவந்த ‘மெஹந்தி சர்கஸ்’ என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து, கேசினோ, மிஸ் மேகி, பெண்குயின் ஆகிய படங்களிலும் மாதம்பட்டி ரங்கராஜ் நடித்துள்ளார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி […]

ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்தவர் நடிகை சாவித்திரி. இவர் 1950களில் மிகவும் பிரபலமாகவும், அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாகவும் வலம் வந்தார். மேலும், “தெலுங்கு சினிமாவின் ராணி” என்று அழைக்கப்பட்ட இவர், நடிகர் திலகம் சிவாஜியை போல் நடிப்பாற்றல் கொண்டதால், அவரை நடிகையர் திலகம் என்றே ரசிகர்கள் அழைத்தனர். இவர், சுமார் 250-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகர் ஜெமினி கணேசனுக்கு ஏற்கனவே திருமணமாகி இருந்த நிலையில், சாவித்திரியையும் திருமணம் […]

இந்தியாவில் அதிக வரி செலுத்தும் பிரபலங்களின் பட்டியல் எப்போதும் சுவாரஸ்யமாக இருக்கும். ஏனெனில் இது அவர்களின் வருமானத்தை மட்டுமல்ல, நாட்டின் பொருளாதாரத்திற்கும் அவர்களின் பங்களிப்பையும் தெளிவாகக் காட்டுகிறது. 2024 நிதியாண்டிற்கான சமீபத்திய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் தொலைக்காட்சி பிரபலங்களும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். முதலாவதாக, 2022 ஆம் ஆண்டில் வருமான வரித் துறையிடமிருந்து “சம்மன் பத்ரா” விருதைப் பெற்ற பாலிவுட் நட்சத்திரம் அக்‌ஷய் குமார், […]

பழம்பெரும் பாலிவுட் நடிகர் அச்யுத் போட்தார் காலமானார்.. அவருக்கு வயது 91.. 3 இடியட்ஸ் என்ற மிகப்பெரிய வெற்றிப் படத்தில் கல்லூரிப் பேராசிரியராக நடித்ததன் மூலம் கவனம் பெற்ற பழம்பெரும் நடிகர் அச்யுத் போட்தார், மகாராஷ்டிராவின் தானேயில் நேற்று காலமானார். இவருக்கு வயது 91. அவர் உடல்நலக் குறைவு காரணமாக தானேயில் உள்ள ஜூபிடர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று நள்ளிரவு உயிரிழந்தார்.. அவரது மரணத்திற்கான […]

பாலிவுட்டில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் ஆமிர் கான்.. இவர் தனது சக்திவாய்ந்த நடிப்பின் மூலம் பாலிவுட் மட்டுமின்றி இந்தியா முழுவதும் கவனம் பெற்ற நடிகராக வலம் வருகிறார். அவரின் திரை வாழ்க்கை மட்டுமின்றி அவரது தனிப்பட்ட வாழ்க்கையும் கவனத்தை ஈர்த்துள்ளது. காரணம் ஆமிர் கானின் தம்பி வைத்த பகீர் குற்றச்சாட்டு தான்.. ஆமிர் கான் பிரிட்டிஷ் பத்திரிகையாளர் ஜெசிகா ஹைன்ஸுடன் திருமணத்தை மீறிய கள்ள உறவை கொண்டிருந்ததாகவும், […]