ஒரு சவரன் தங்கம் 45 ஆயிரம் ரூபாயை நெருங்குவதால், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வரும் நிலையில், சென்னையில் இன்று தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 […]

விஜய்யின் லியோ திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது. இதனால் தமிழ் மட்டுமின்றி மற்ற மொழி ரசிகர்களும் லியோவை கொண்டாடி வருகின்றனர். இந்தப் படத்தின் அதிகாலை 4 மணி கட்சி, தமிழ்நாட்டைத் தவிர மற்ற மாநிலங்களில் திரையிடப்பட்டது. அதன்படி, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, பெங்களூரு போன்ற பல ஏரியாக்களில் லியோ FDFS அதிகாலை 4 மணிக்கு காட்சி தொடங்கியது. தற்போது இந்த படம் குறித்து பாசிட்டிவ் விமர்சனங்களே வந்து கொண்டு […]

கடந்த 2006ஆம் ஆண்டு வெளியான கலாபக் காதலன் திரைப்படத்தின் மூலம் கலை இயக்குனராக அறிமுகமானவர் மிலன். இவர் வேலாயுதம், வீரம், அண்ணாத்த உள்ளிட்ட படங்களில் கலை இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். இவர் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் கலை இயக்குனராக பணியாற்றி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கலை இயக்குனர் மிலன் அஜர்பைஜான் நாட்டில் மாரடைப்பு […]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் மேலும் சூடு பிடிக்கிறது. அதிலும், கமல் தொகுத்து வழங்கும் காட்சியை பார்ப்பதற்கென தனி ரசிகர் கூட்டமே காத்திருக்கும். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிராந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலத்தோடு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்கள் இந்த நிகழ்ச்சியில் […]

விஜய்யின் லியோ திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது. இதனால் தமிழ் மட்டுமின்றி மற்ற மொழி ரசிகர்களும் லியோவை கொண்டாடி வருகின்றனர். இந்தப் படத்தின் அதிகாலை 4 மணி ஷோ, தமிழ்நாட்டைத் தவிர மற்ற மாநிலங்களில் திரையிடப்பட்டது. அதன்படி, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, பெங்களூரு போன்ற பல ஏரியாக்களில் லியோ FDFS அதிகாலை 4 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில், லியோ ரிலீஸை முன்னிட்டு திரையரங்குகளின் முன்பு விஜய்யின் கட் அவுட்டை […]

தளபதி விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் தற்போது உலகம் முழுவதும் வெளியாகியுள்ள நிலையில், அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை 4 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது. அதேபோல கேரளாவில் 3.50-க்கு லியோ படத்தின் முதல் காட்சி பெருமளவில் திரையிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் LCU இல் இணைந்துள்ளது. ‘லியோ’ படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், கெளதம் மேனன், பிரியா ஆனந்த், அர்ஜுன், […]

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் வேங்கடராகவாபுரம் கிராமத்தில் வெங்கடரத்தினம், புன்னம்மாள் தம்பதிக்கு இளைய மகனாக 1924இல் நாகேஸ்வரராவ் பிறந்தார். இளம் வயதிலேயே நாடகத்துறையில் நுழைந்து பெண் வேடங்களில் நடித்தார். பின்னர் 1940இல் முதன் முதலாக “தர்மபத்தினி” எனும் தெலுங்கு சினிமாவில் நடித்து தனது திரைவாழ்க்கையை தொடங்கினார். இதுவரை அவர் 256 படங்களில் நடித்திருக்கிறார். இதில் ஒரு இந்தி மற்றும் 20-க்கும் மேற்பட்ட தமிழ் படங்களும் அடங்கும். அன்னபூர்ணாவைத் திருமணம் செய்து […]

பிரபல நடிகர் குந்தரா ஜானி உடல் நலக்குறைவால் காலமானார். 1980களில் இருந்து மூன்று தசாப்தங்களாக பல மலையாள படங்களில் வில்லனாக நடித்து முத்திரை பதித்த பிரபல நடிகர் குந்தரா ஜானி, கொல்லத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாரடைப்பால் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 71. மலையாளத் திரையுலகில் 1980கள் மற்றும் 90களில் பல முக்கிய வெற்றிப் படங்களில் நடித்துள்ளார், சண்டை குழுவில் ஒருவராக அங்கீகரிக்கப்படாத […]

லியோ திரைப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”விஜய் படம் என்றாலே ஏதாவதொரு பிரச்சனை வந்துகொண்டே தான் இருக்கும். ட்ரெய்லரில் இடம் பெற்றிருந்த கெட்ட வார்த்தை பிரச்சனையானது. பின் அதை மாற்றினோம். கதாபாத்திரத்திற்கு அது பொருத்தமாக இருந்தது. அதனால்தான் அந்த வார்த்தையை வைத்தோம். அந்த வார்த்தை பேசியது விஜய் கிடையாது. அந்த கதாபாத்திரம் தான். கட்டாயம் அந்த வார்த்தை திரையில் வராது. வன்முறை அதிகமாக […]

2010ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான லீடர் படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார் ரிச்சா கங்கோபத்யாய். பின்னர் தனுஷ் நடிப்பில் வெளியான மயக்கம் என்ன படத்திலும், சிம்பு நடிப்பில் வெளியான ஒஸ்தி படத்திலும் நடித்து பிரபலமானார். சினிமாவில் அறிமுகம் ஆகிய ஒரு சில ஆண்டுகளில் நான் இனிமேல் நடிக்கப் போவதில்லை என்றும், பிடித்த வேலையை செய்யப் போவதாக கூறி திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். சினிமாவில் இருந்து விலகிய காரணம் […]