தமிழகத்தில் இன்று டெல்டா உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரபிக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழந்து,தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியாகநீடிக்கிறது. தெற்கு அந்தமான்கடல், அதையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 24-ம் […]

கும்மிடிப்பூண்டி அதிமுக எம்.எல்.ஏவாகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும் இருந்தவர் சுதர்சனம்.. கடந்த 2005-ம் ஆண்டு, ஜனவரி மாதம் 9-ம் தேதி அதிகாலை 2.45 மணியளவில் சுதர்சனம் பவாரியா கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.. பெரியபாளையம் அருகே தானாகுளத்தில் உள்ள அவரின் வீட்டின் கதவை உடைத்து எம்.எல்.ஏ சுதர்சனத்தை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதுடன், அவரின் மனைவி மகன்களை தாக்கி அவரின் வீட்டில் இருந்து 62 சவரன் நகைகளை […]

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பில்லி சூனியம் இருப்பதாக நம்ப வைத்து, கட்டுமான ஒப்பந்தக்காரர் ஒருவரிடம் நகை மற்றும் பணத்தைப் பறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டிவனம் பல்லாக்குப்பத்தை சேர்ந்த கமல் பாஷா என்பவர், பெரியதச்சூர் கிராமத்தைச் சேர்ந்த ஒப்பந்தக்காரர் தனசேகர் (36) என்பவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமானார். தனசேகரின் குடும்பத்திற்கு “நேரம் இல்லை, பில்லி சூனியம் மற்றும் மாந்திரீகம் உள்ளது” என்று கூறி, அதை […]

தமிழக வெற்றிக்கழக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. கரூர் சம்பவத்தை தொடர்ந்து, ஆதவ் அர்ஜுனா கடந்த செப்டம்பர் 30-ம் தேதி தனது எக்ஸ் பக்கத்தில் வன்முறையை தூண்டும் வகையில் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை போட்டிருந்தார்.. அவரின் பதிவில் “ ஆளும் வர்க்கத்தின் அடிவருடிகளாக காவல்துறை மாறி போனால் மீட்சிக்கு இளைஞர்களின் புரட்சி தான் ஒரே வழி என்றும், […]

அரசியல் கட்சிகளின் கூட்டங்கள், ரோடு ஷோவில் பங்கேற்கும் மக்களின் பாதுகாப்பிற்கு சம்மந்தப்பட்ட அரசியல் கட்சியினரே முழு பொறுப்பு என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அரசியல் கட்சிகளின் ரோடுஷோ பொதுக்கூட்டங்களுக்கான வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தது.. பொதுக்கூட்டங்களை நடத்துவதை முறைப்படுத்தவும், திட்டமிடவும் கண்காணிக்கவும் இந்த வழிகாட்டு நெறிமுறைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.. 5000 பேருக்கு மேலும் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கக்கூடிய பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள், […]

தமிழகத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.. வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ நேற்று தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து, இன்று காலை தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியாக நிலவுகிறது. தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு […]

சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்பிரஸ் அவென்யூ மாலில் உள்ள லிஃப்டில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது.. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதால் பொதுமக்கள் பதறியடித்து ஓட்டம் பிடித்தனர்.. இதனால் அந்த மாலின் 3 மாடிகளிலும் புகைமூட்டமாக காட்சியளிக்கிறது.. தீ விபத்து ஏற்பட்டு புகை மூட்டம் ஏற்பட்டதால் பொதுமக்கள் சிதறி ஓடினர்.. மாலில் 10 மணிக்கு பிறகு தான் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படும்.. எனினும் 8 மணிக்கே […]

சொத்து தொடர்பான உரிமைகள் மற்றும் பரிமாற்ற விவரங்களை தெரிந்துகொள்வதில் பொதுமக்களுக்கு இருந்த சிரமங்களை போக்கும் வகையில், தமிழக அரசின் வருவாய்த்துறை ஒரு புதிய ஆன்லைன் வசதியை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. பத்திரப்பதிவுத் துறையின் வில்லங்கச் சான்றிதழ் போலவே, ஒரு சொத்தின் வரலாற்றை முழுமையாக அறிந்துகொள்ள உதவும் வகையில், ‘பட்டா வரலாறு’ (Patta History) என்ற இந்தச் சேவை அடுத்த வாரம் முதல் சோதனை அடிப்படையில் தொடங்க உள்ளது. முன்பெல்லாம் சொத்துக்குப் […]