fbpx

தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் தலைவர், உறுப்பினர்கள் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு தலைவர் மற்றும் 6 உறுப்பினர்கள் பதவிக்கான நியமனம் தொடர்பாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பப் படிவங்கள் மற்றும் தகுதி விவரங்கள் https://www.tn.gov.in/dept_profile.php?dep_id=MzA= (Social …

தமிழக வெற்றிக் கழக தலைவர் பதவி குறித்து அக்கட்சியின் சட்ட விதிகள் என்ன சொல்கிறது என்பதை தற்போது பார்க்கலாம்.

2026 சட்டமன்ற தேர்தலை குறிவைத்து விஜய், பணியாற்றி வருவதால் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் நிர்வாகிகள் நியமனம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தவெகவில் புதிய மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முக்கிய பதவிகளுக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். …

மின் பற்றாக்குறையை சமாளிக்க யூனிட் ரூ.20க்கு தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்குவதா..? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து அவர் தனது அறிக்கையில்; தமிழ்நாட்டில் பிப்ரவரி மாதத்தில் மாலை நேரத்தில் சுமார் 3 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு மின்பற்றாக்குறை நிலவுவதாகவும், ஏப்ரல் மாதத்தில் இது 4,697 மெகாவாட்டாக அதிகரிக்கும் என்றும் …

சென்னையில் வரும் 19ஆம் தேதி தொழில்முனைவோர், வணிக உரிமையாளர்கள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவுநர்களுக்கான சாட்ஜிபிடி பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிண்டியில் உள்ள தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில் இந்த பயிற்சியானது வழங்கப்பட உள்ளது.

சாட்ஜிபிடி மூலம் வணிக செயல்பாடுகளை எளிமைப்படுத்தி செலவுகளை எப்படி குறைக்கலாம் என்பது குறித்தும், திறன்களை …

சேலம் மாவட்டத்தில் மானிய விலையில் சூரிய சக்தி மின்வேலி அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; விவசாயிகள் தங்கள் விளைநிலங்களிலுள்ள பயிர்களை சேதப்படுத்தும் ஆடு, மாடு, காட்டுப்பன்றி, காட்டெருமை, மான் மற்றும் யானை போன்ற விலங்குகளிடமிருந்து தங்களது பயிர்களை பாதுகாக்கவும், வனவிலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு இடையேயான மோதலை தவிர்க்கவும் வழிவகை …

ஆசிரியர்கள் நியமனம் சான்றிதழ் சரிபார்ப்பு நாளை நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பில்; கடந்த 2012 முதல் 2016 வரை, பள்ளிக் கல்வி உள்ளிட்டவற்றில் காலியாக உள்ள சிறப்பாசிரியர்களில், ஓவிய ஆசிரியர் பணிக்கு நேரடி ஆள் சேர்ப்புக்கு, கடந்த 2017 ஜூலை 26-ல் அறிவிப்பு …

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரே சமீபத்தில் இளம்பெண் ஆட்டோவில் கடத்தப்பட்டு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. இதன் எதிரொலியாக பேருந்து நிலையம் பகுதிகளில் ஓடும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தாம்பரம் காவல்துறை கடும் கட்டுப்பாடு விதித்துள்ளது.

காவல்துறையின் கட்டுப்பாடுகள்

➥ ஆட்டோ ஓட்டுநர்கள் காவல்துறையிடம் அடையாள அட்டை பெற வேண்டும்.

➥ காவல்துறையில் …

அரசுப் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி 7 பேர் காயமடைந்த சம்பவத்தில் ஓட்டுநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருந்து வானவரம் மலை கிராமத்திற்கு சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. இந்த சம்பவத்தில் சாலையோர பள்ளத்தில் அரசுப் பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் 7 பேர் …

கடந்த 2018ஆம் ஆண்டு பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கான உதவி எண் 14417 அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த எண்ணை தொடர்பு கொண்டு பள்ளிக் கல்வித்துறை சார்ந்த திட்டம் தொடர்பான சந்தேகங்கள், தகவல்கள் மற்றும் மனநல ஆலோசனை உள்ளிட்ட வசதிகளை பெறலாம். இந்த எண் தொடங்கப்பட்ட ஆண்டு முதல் மாணவர்கள் மத்தியில் இதுகுறித்த விழிப்புணர்வு சற்று குறைவாகவே இருந்தது.

ஆனால், …

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவர், அங்குள்ள அரசுப் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வரும் நிலையில், அவருக்கு பெற்றோரே திருமணம் செய்து வைத்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவேரிப்பட்டணம் பகுதியைச் சேர்ந்த 25 வயது இளைஞருக்கும், மாணவிக்கும் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள கோயிலில் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில், நேற்று பள்ளிக்கு கழுத்தில் தாலிக்கயிறுடன் …