fbpx

கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தை அடுத்த குப்பநத்தம் புதுக்காலனியைச் சேர்ந்தவர் சாமிக்கண்ணு. இவரது மகன் முருகேசன். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவரான முருகேசனுக்கும், மாற்று சமூகத்தைச் சேர்ந்தவரும், ஊராட்சிமன்றத் தலைவருமான துரைசாமியின் மகள் கண்ணகிக்கும் காதல் மலர்ந்துள்ளது. கடந்த 05.05.2003 அன்று இருவரும் கடலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவுத் திருமணம் செய்துகொண்டனர். பின்னர், அவரவர் வீட்டில் தனித்தனியாக …

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் குறைந்தபட்சம் 160 தொகுதிகளில் போட்டியிட வேண்டுமென அதிமுகவினர் முடிவெடுத்துள்ளனர். மீதமிருக்கும் 74 தொகுதிகளை மட்டும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்ய அதிமுக தலைமை முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் 10 மாதங்களே உள்ளது. இதையடுத்து, தேர்தலுக்கான முன்னோட்டப் பணிகளை அதிமுக இப்போதே …

சிவகங்கை மாவட்டம் சாமியார்பட்டி பகுதியில் நேற்று மாலை பரபரப்பு சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. திமுக விளையாட்டு மேம்பாட்டு பிரிவின் மாவட்ட துணை அமைப்பாளராக பணியாற்றி வந்த பிரவீன் குமார் (27) என்பவர், கொடூரமாக அரிவாளால் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தகவலின்படி, பிரவீன் குமார் சாமியார்பட்டியில் தனது தோப்பில் …

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் பள்ளிகளிலேயே ஆதார் பதிவு மேற்கொள்ளுதல், 5 வயது முதல் 17 வயது வரையுள்ள மாணவர்களுக்கு கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புதுப்பிக்கத் தவறியவர்கள் இ-சேவை மையங்கள் மூலம் செய்து முடிக்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

நாட்டில் ஆதார் கார்டு என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் கார்டு வாங்க பிறப்பு சான்றிதழ் …

நேற்றைய விடுமுறை தினத்தை தொடர்ந்து இன்று காலை அவை தொடங்கியது. சட்டப்பேரவையில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபை விதி எண் 110-ன் கீழ் அரசு ஊழியர்களுக்கு 9 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதனை பின்வருமாறு பார்க்கலாம்..

* கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு சரண் நடைமுறை இந்த நிதியாண்டு முதல் மீண்டும் அமல் …

அங்கன்வாடிகளில் பணியாற்றும் தற்காலிக ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் முதல் தேதியில் ஊதியம் வழங்க தொடக்க கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

தொடக்க கல்வித்துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில், ”தமிழ்நாட்டில் 2022-23ஆம் கல்வியாண்டு முதல் 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடர்ந்து செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இங்கு தற்காலிகமாக …

தமிழ்நாடு அரசின் திட்டங்களில் மிகவும் வரவேற்பு பெற்ற திட்டம் என்றால் அது கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தான். இத்திட்டத்தில் தற்போது 1 கோடியே 6 லட்சம் குடும்ப தலைவிகள் மாதந்தோறும் ரூ.1,000 பெற்று வருகின்றனர். உரிமைத்தொகை கோரி விண்ணப்பித்து பெண்கள் அனைவருக்கும் 3 மாதங்களில் ரூ.1,000 வழங்கப்படும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் …

செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்கும் நிலையில், அவரது ஜாமீன் மனுவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜி 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். ஓராண்டுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், ஜாமீன் கேட்டு பலமுறை …

குரூப் 1 தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் இலவச பயிற்சி வகுப்பில் கலந்துக்கொள்ள 30-ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும்.

குரூப் 1 பதவிகளில் வரும் துணை ஆட்சியர், டிஎஸ்பி, ஊரக மேம்பாடு உதவி இயக்குநர் உள்ளிட்ட 70 காலிப்பணியிடங்களுக்கும், குரூப்-1A பதவிகளில் வரும் 2 வன உதவி பாதுகாவலர் காலிப்பணியிடங்களுக்கும் என மொத்தம் 72 …

மதுரை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரிகளை வரும் ஏப்ரல் 30-ம் தேதிக்குள் செலுத்தினால் 5% (அதிகபட்சம் ரூ.5000) சிறப்பு சலுகை என மாநகராட்சி அறிவித்துள்ளது. வரிகள் செலுத்த வசதியாக மாநகராட்சி வரிவசூல் மையங்கள், விடுமுறை நாட்களில் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சிக்கு குடிநீர், பாதாளச் சாக்கடை, தொழில், குப்பை வரி என, பல்வேறு …