வடகிழக்கு பருவமழையின் முதல் இரண்டு சுற்று மழை கடந்த மாதம் இறுதி வரை பெய்த நிலையில், இம்மாத தொடக்கத்தில் மழையின் அளவு குறைந்து காணப்பட்டது. இருப்பினும், இன்று (திங்கட்கிழமை) இரவு முதல் தமிழகத்தில் மீண்டும் பருவமழை தீவிரமடைய உள்ளது என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தென் சீனக் கடலில் இருந்து வரும் கிழக்கு காற்றும், வட இந்தியாவில் இருந்து வரும் வடக்குக் காற்றும் ஒருங்கிணைந்து, நாளை (நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை) […]

2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்து வருவதுடன், அவர்களின் விசைப்படகுகளைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கையும் தொடர்வதால், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நாகப்பட்டினம் மீனவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 14 தமிழக மீனவர்கள், நெடுந்தீவு அருகே […]

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லி செட்டிப்பாளையம் பகுதியில் வசித்து வரும் 39 வயது வடமாநிலப் பெண் ஒருவருக்கு கணவர் இறந்துவிட்ட நிலையில், தனது இரண்டு மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார். இவருடைய வீட்டின் அருகே வசித்து வந்த ரமேஷ்குமார் (34) என்ற ஓட்டுநருக்கும், அந்தப் பெண்ணுக்கும் சுமார் 6 மாதங்களுக்கு முன்பு கள்ளக்காதல் ஏற்பட்டது. இச்சம்பவத்தை அறிந்த ரமேஷ்குமாரின் மனைவி, அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, […]

தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கி வரும் ஆகமப் பயிற்சிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு வழங்கப்படும் மாத ஊக்கத்தொகையை தமிழக அரசு அதிரடியாக உயர்த்தியுள்ளது. இந்த ஊக்கத்தொகை உயர்வு, பாரம்பரியக் கலைகள் மற்றும் ஆகம விதிகளை கற்க விரும்பும் மாணவர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊக்கத்தொகை விவரங்கள் : இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் மொத்தம் 18 பயிற்சிப் பள்ளிகள் (அர்ச்சகர், […]

தமிழகத்தில் உள்ள 12,573 ரேஷன் கடைகளில் கோதுமை இல்லை என்று எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு முன்வைத்த நிலையில், நவ. 15-க்குள் நியாய விலை கடைகளுக்கு கோதுமை 100% அனுப்பப்பட்டுவிடும் என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது நாளிதழில் வந்த செய்தியை வைத்து எடப்பாடி பழனிசாமி 12,573 கடைகளில் கோதுமை இல்லை என்று கூறியிருக்கிறார். ஒன்றிய அரசிடம் தமிழ்நாட்டிற்கு அதிக அளவில் கோதுமை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கேட்டு […]

தமிழகத்தில் இன்று முதல் வரும் 15-ம் தேதி வரை சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழகம் அதையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்குசுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று முதல் வரும்13-ம் தேதி வரை சில இடங்களிலும், வரும் 14, 15-ம் தேதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். […]