தமிழ்நாட்டின் சமூக நலத்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களின் சிறப்பு ஓய்வூதியத்தை உயர்த்த அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு சமூக நலத்துறை பிறப்பித்த அரசாணைக்கு எதிராக ஓய்வு பெற்ற ஊழியர்களின் ஓய்வூதிய தொகையை ரூபாய் 2,000 என நிர்ணயித்து 3 ஆண்டுகளுக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், ஓய்வூதிய தொகையை உயர்த்த வேண்டும் என்று ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றியதாகவும், ஏப்ரல் […]

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை மேலும் 4 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 21ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைதாகினார். அவரை 28ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அமலாக்கத்துறை காவல் முடிவடைந்ததை தொடர்ந்து இன்று மீண்டும் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, […]

அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த மனு மீது மீண்டும் வாதங்களை முன்வைக்க அனுமதி கோரி செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில், அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை மாவட்ட 3-வது கூடுதல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனுவில் மீண்டும் வாதங்களை முன்வைக்க அனுமதிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, நேற்று புதிய மனுவை தாக்கல் செய்தார். […]

ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சை சின்னத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 5 ஓபிஎஸ்களின் வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. ராமநாதபுரத்தில் ஒ.பன்னீர் செல்வம் என்ற பெயரில் 4 பேர் போட்டியில் குதித்துள்ளது ஓபிஎஸ் டீமை பீதியடைய வைத்துள்ளது. ஓ.பன்னீர் செல்வம் போட்டியிடும் ராமநாதபுரம் தொகுதியில், மதுரை மாவட்டம் மேக்கிலார்பட்டியைச் சேர்ந்த ஒச்சப்பன் மகன் பன்னீர்செல்வம், ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை அருகே தெற்கு காட்டூரைச் சேர்ந்த ஒய்யாரம் மகன் பன்னீர்செல்வம், மதுரை மாவட்டம் திருமங்கலம் […]

மக்களவைத் தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் டி.ஆர்.பாலுவை ஆதரித்து ஸ்ரீபெரும்புதூர் நிலையம் அருகே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ”திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு மாமாவுக்காக வாக்கு சேகரிக்க ஸ்ரீபெரும்புதூர் வந்துள்ளேன். உதயசூரியன் சின்னத்தில் நாம் போடும் ஓட்டு, பிரதமர் மோடியின் தலையில் நாம் குடுக்கும் கொட்டு. குறைந்தது […]

நமது அனைவரையும் கவர்ந்த வில்லேஜ் குக்கிங் சேனலின் தாத்தா பெரிய தம்பி, இதய நோய் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டுள்ளார். தமிழில் யூடியூப்பில் ஏகப்பட்ட குக்கிங் சேனல்கள் இருந்தாலும் வில்லேஜ் குக்கிங் சேனலுக்கு இருக்கும் ரசிகர்கள் தனி. தமிழில் சுமார் 24 மில்லியன், அதாவது 2.4 கோடி சப்ஸ்கிரைபர்ஸ்களை கொண்ட ஒரு சேனலாக இது இருக்கிறது. கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தல் காலகட்டத்தில் காங்கிரஸின் ராகுல் காந்தி கூட […]

சேலம் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு மீதான பரிசீலனை, நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  நாடாளுமன்ற தேர்தல், தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில், வேட்புமனு மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது. இந்நிலையில், சேலம் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  வேட்பாளராக போட்டியிடுபவருக்கு இரண்டு இடங்களில் வாக்குரிமை இருப்பது உறுதி செய்யப்பட்டால், மக்கள் […]

’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் 5-வது சீசன் தொடங்க இருக்கிறது. இதில், செஃப் தாமு மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் இருவரும் நடுவர்களாகக் களமிறங்க இந்த சீசனின் கோமாளிகள் சிலரை அறிமுகப்படுத்தி புரோமோ வெளியிட்டுள்ளது விஜய் டிவி. சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் வரவேற்புப் பெற்ற சமையல் ரியாலிட்டி நிகழ்ச்சியான ’குக் வித் கோமாளி’ சீசன் 5 இன்னும் சில வாரங்களில் தொடங்கவுள்ளது. இந்த நிகழ்ச்சியின் மிகப்பெரிய ஹிட்டே சமையல் தெரியாத கோமாளிகளின் […]

ரயில்களில் பயணம் செய்யும்போது, டிக்கெட் இல்லாமல் பலர் ஏறி சீட்டுகளை ஆக்கிரமிப்பு செய்தால், என்ன செய்வது என்பது குறித்து ரயில்வே நிர்வாகம் விளக்கம் கொடுத்துள்ளது. நாட்டில் மக்கள் பலர் அதிகமாக ரயில் பயணங்களையே அதிகம் விரும்புகின்றனர். தினமும் லட்சக்கணக்கான பயணிகள் ரயில்கள் மூலம் பயணம் செய்கின்றனர். பலர் ரயில்களில் சிரமமின்றி பயணம் செய்ய வேண்டும் என்று டிக்கெட்டுகளை முன்னதாகவே முன்பதிவு செய்கின்றனர். ஆனால், முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகள் அதிகளவில் விற்பனையானால், […]

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் 6 இடங்களில் மட்டும் பேசி விட்டு பாஜக வேட்பாளர் ராதிகா சென்னைக்கு புறப்பட்டார். கடந்த 2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சமத்துவ மக்கள் கட்சியை சமீபத்தில் பாஜகவில் இணைத்தார் சரத்குமார். அதிமுகவில் இருந்து 2007ஆம் ஆண்டு விலகிய அவர் தனியாகச் சமத்துவ மக்கள் கட்சியைத் தொடங்கினார். சுமார் 17 ஆண்டுகளாகத் அரசியலில் இருந்த சமத்துவ மக்கள் கட்சியின் பயணம் ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்டது. இதையடுத்து, பாஜகவின் விருதுநகர் […]