அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக முன்னாள் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் சென்னை அல்லிகுளம் வளாகத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி வேறு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதால், இந்த வழக்கு சென்னை […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
தந்தை – மகனின் மோதலால் பாமகவே இரண்டாக உடையும் நிலை ஏற்பட்டுள்ளது. கட்சியில் யாருக்கு அதிகாரம் என்பது குறித்து ராமதாஸும், மற்றொரு பக்கம் மகன் அன்புமணியும் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து வருகின்றனர். இதற்கிடையே, பாமக தலைவராக நியமிக்கப்பட்ட அன்புமணியின் பதவிக்காலம் முடிந்து விட்டதாக ராமதாஸின் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர். அதாவது, கடந்த 2022 மே 28ஆம் தேதி பொதுக்குழு கூட்டத்தில் பாமக தலைவராக நியமிக்கப்பட்டார். அவரின் 3 […]
தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துகளுக்கான கட்டணம் உயர்த்தப்படாது என அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மூலம் தினசரி 20,508 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில், சுமார் 1.85 கோடி பேர் பயணம் செய்கின்றனர். மேலும், இந்த பேருந்துகளுக்கு தினமும் 17 லட்சம் லிட்டர் டீசல் போடப்படுகிறது. ஆனால் டீசல் விலை, சுங்கச்சாவடி கட்டணம் உயர்வால் செலவு அதிகரித்துள்ளது. தினசரி வருவாய் ரூ.39 கோடியாக உள்ள நிலையில், செலவு […]
தமிழக அரசியலில் புயலை கிளப்பிய டாஸ்மாக் வழக்கை விசாரித்து வரும் ED அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மண்டல அமலாக்கத்துறை இணை இயக்குநர் பியூஸ் குமார் யாதவ் மற்றும் துணை இயக்குநர் கார்த்திக் தசாரி ஆகிய இருவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தையே பரபரப்பு உள்ளாக்கிய வழக்குகளான கனிமவளக் கொள்ளை வழக்கு, டாஸ்மாக் வழக்கு, அமைச்சர் துரைமுருகன் வழக்கு, எம்.பி கதிர் ஆனந்த் வழக்கு, முன்னாள் அமைச்சர் […]
கோடை விடுமுறை முடிந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. இதனால், மாணவர்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு ஆர்வமுடன் பள்ளிக்கு சென்றனர். புதிய கல்வியாண்டை தொடங்கும் உற்சாகத்துடன் மாணவர்கள் வகுப்பறைக்குச் சென்றனர். அனைத்து பள்ளிகளிலும் புதிய மாணவர்களை வரவேற்கும் விதமாக ஆசிரியர்கள் இனிப்பு வழங்கினர். பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளே அரசுப் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டது. அதேபோல் பள்ளி வேலை நாட்கள், விடுமுறைகள், […]
அரசுப்பள்ளி மாணவர்களின் ஆங்கில திறனை மேம்படுத்த லெவல் அப் என்ற புதிய திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அமல்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் திறன், கல்வி திறன் ஆகியவற்றை மேம்படுத்தி, அகில இந்திய அளவில் அனைத்து வாய்ப்புகளும் மாணவர்களுக்கு கிடைக்கும் நிலையில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. குறிப்பாக புதுப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம், காலை உணவுத் திட்டம், திறன்கள் திட்டம் உள்ளிட்டவை மாணவர்களிடையே […]
தெற்கு ஆசிய நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வருகிறது. அதேபோல் இந்தியாவிலும் கொரோனா பரவல் மெல்ல அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், தற்போது பரவி வரும் கொரோனா வைரஸால், பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டுமென்றும், கைகளை அடிக்கடி சோப்பு போட்டு […]
2021 சட்டமன்ற தேர்தலில் அளித்த வாக்குறுப்படி, 2023 செப்டம்பர் 15ஆம் தேதி, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை திமுக அரசு தொடங்கியது. அதன்படி, மாதந்தோறும் தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் ஏற்கனவே 1.14 கோடி பெண்கள் பயன்பெற்று வரும் நிலையில், இத்திட்டம் மேலும் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதற்காக நாளை (ஜூன் 4) மாபெரும் முகாம் தமிழ்நாட்டில் நடக்கிறது. மொத்தம் […]
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் சென்னை அல்லிகுளம் வளாகத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி வேறு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதால், இந்த வழக்கு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில் ஞானசேகரனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், செல்போன் உரையாடல்கள் அனைத்தும் குற்றப்பத்திரிகையில் […]
தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் இரண்டு நாள் மேக்கப் மாஸ்டர்கிளாஸ் பயிற்சி வழங்கப்பட்ட உள்ளது. தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் இரண்டு நாள் மேக்கப் மாஸ்டர்கிளாஸ் பயிற்சி வரும் 10.06.2025 முதல் 11.06.2025 வரை காலை 10 மணி முதல் மாலை 5.00 மணி நடைபெற உள்ளது. இப்போது அழகு தொழிலில் அசைக்க முடியாத இடத்தை பிடிக்க, சரியான பயிற்சி தேவை, […]