கோவை உள்ளிட்ட 7 மாவட்டத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஒரிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வடக்கு திசையில் மெதுவாக நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேற்கு வங்காள வங்கதேச கடலோரப்பகுதிகளில் வலுப்பெற்று, அதே பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் […]

நகைக்கடன் தொடர்பாக ரிசர்வ் வங்கி கொண்டு வரவுள்ள புதிய விதிமுறைகள் தமிழ்நாடு அரசின் கூட்டுறவு வங்கிகளுக்கு பொருந்தாது என்று அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். மக்களுக்கு எளிமையாகவும், விரைவாகவும் கிடைக்கும் கடன் என்றால், அது நகைக்கடன் தான். நகைகளை வங்கியில் வைத்து கடன் வாங்குவது, இந்தியாவில் பொதுவாக உள்ள நடைமுறையாகும். பொருளாதார நெருக்கடி, மருத்துவ தேவை, விவசாய தேவை, சுபகாரியங்கள் என அவரவர் தேவைகளுக்காக நகைகளை அடகு வைக்கிறார்கள். இந்நிலையில் தான், […]

தமிழக அரசின் 7-வது மாநில நிதி ஆணையம் ஓய்வுபெறற ஐஏஎஸ் அதிகாரி கே.அலாவுதீன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக நிதித்துறை செயலாளர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் ; தமிழக அரசு 7-வது மாநில நிதி ஆணையத்தை அமைத்து ஆணையிட்டுள்ளது. இந்த ஆணையம், பல்வேறு நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் நிதி நிலைமை குறித்து ஆய்வு செய்து மாநில அரசு வழங்க வேண்டிய நிதிப்பகிர்வு குறித்து உரிய பரிந்துரைகளை வழங்கும். […]

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு https://www.tngasa.in என்ற முகவரியில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26 ஆம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்வதற்கான பதிவு, விண்ணப்ப கட்டணம், கல்லூரி மற்றும் பாடப்பிரிவினை தேர்வு செய்தல் மற்றும் அச்சிடும் விண்ணப்பம் ஆகியவற்றை ஆன்லைன் மூலம் செய்ய வேண்டும். விண்ணப்ப பதிவுக்கான கடைசி நாள் 27-ம் தேதி முடிந்த […]

தமிழில் இருந்து வந்ததுதான் கன்னடம் என நடிகர் கமல்ஹாசன் சொன்ன கருத்தில் எந்தத் தவறும் இல்லை என சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கூறியுள்ளார்.  ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய கமல்ஹாசன், ‘தமிழ் மொழியில் இருந்து கன்னடம் பிறந்தது’ என்று கூறி இருந்தார். கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு பல்வேறு […]

சித்தா டாக்டர் என்று வந்த ஒருவர் கதை பேசிக்கொணே 2 மணி நேரத்தை இழுத்தடித்துவிட்டார் என ராஜேஷ் தம்பி சத்யன் தெரிவித்துள்ளார். நடிகர் ராஜேஷ் உடல்நலக்குறைவால் இன்று சென்னையில் காலமானார். இவரது உடல் வருகிற ஜூன் 1 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நல்லடக்கம் செய்யப்படும் என குடும்பத்தினர் கூறியுள்ளனர். ராஜேஷின் மகள் அமெரிக்காவிலிருந்து வர வேண்டும் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளனர். அவரது மறைவிற்கு திரைத்துறையினர், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் […]

பாமகவில் ராமதாஸுக்கும் அவரின் மகன் அன்புமணிக்கும் இடையே நிலவும் கருத்து வேறுபாடு இன்று மேலும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ் தனது மகன் அன்புமணி மீதே பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அவர் பேசுகையில், “அன்புமணியை அமைச்சராக்கி தவறு செய்து விட்டேன், தவறு செய்தது அன்புமணி அல்ல 35 வயதில் அவரை மத்திய அமைச்சராக்கி நான்தான் தவறு செய்து விட்டேன். இனிப்பை தவிர்த்து கசப்பான மாத்திரைகளை […]

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், 234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் தேர்வை தீவிரமாக ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2024-ல் தனது அரசியல் கட்சியை தொடங்கி, விக்கிரவாண்டி மாநாடு, சென்னையில் பொதுக்குழு, கோவையில் பூத் மாநாடு என தொடர்ச்சியான செயல்பாடுகளால் இளைஞர்களிடம் வரவேற்பை பெற்ற விஜய், தற்போது மாவட்ட மட்ட கட்டமைப்புகளையும் வலுப்படுத்தி வருகிறார். எனினும், ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையாத நிலையில், முழு நேர அரசியலில் முழுமையாக இறங்காமல் […]

தேமுதிகவிற்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வழங்குவது அதிமுகவின் கடமை என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். ஜூன் 19ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் திமுக தனது கூட்டணி கட்சியான மக்கள் நீதி மையத்திற்கு ஒரு சீட்டை ஒதுக்கி இருக்கிறது. அதன் மூலம் டெல்லி செல்ல இருக்கிறார் கமல்ஹாசன். இந்த நிலையில் கடந்த மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்த தனது மகன் விஜய பிரபாகரனை எம்பி ஆக்கி […]