தமிழ்நாட்டில் நிலவும் பறவைக் காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்த கருத்துக்கள், சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பிய நிலையில், அதற்கு அவரே முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ‘ஹாஃப்-பாயில்’ சாப்பிட வேண்டாம் என்று அவர் அறிவுறுத்தியது முட்டையை குறிப்பிடுவதாகப் பரவலாக புரிந்துகொள்ளப்பட்டது. ஆனால், தனது கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாக அமைச்சர் தற்போது விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பறவைகள் அல்லது […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
திமுகவின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன், உடல்நலக் குறைவு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 87 வயதை கடந்த நிலையில், வயது மூப்பு சார்ந்த உடல்நலப் பிரச்சனைகளை சந்தித்து வரும் அவர், நேற்று (பிப்ரவரி 10) எதிர்பாராத விதமாக தனது இல்லத்தில் தவறி விழுந்துள்ளார். இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டதை தொடர்ந்து, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். வீட்டில் விழுந்ததில் ஏற்பட்ட காயங்களுக்கு […]
மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் தீன்தயாள் அந்தியோதயா யோஜனா – தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் (DAY-NRLM), இந்திய கிராமப்புறப் பெண்களின் பொருளாதார நிலையில் ஒரு மாபெரும் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. கிராமப்புறங்களில் நிலவும் வறுமையை வேரோடு ஒழிப்பதையும், சுமார் 10 கோடி ஏழைக் குடும்பங்களைச் சுயஉதவிக் குழுக்களாக ஒருங்கிணைப்பதையும் இந்தத் திட்டம் தனது முதன்மை நோக்கமாக கொண்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் நிதியுதவி […]
கரூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டத்தில் பேசிய சாட்டை துரைமுருகன், 41 உயிர்கள் பறிபோவதற்குக் காரணமானவர்களை முதல் தகவல் அறிக்கையில் (FIR) சேர்க்காமல் கரூர் காவல்துறை மெத்தனமாக செயல்படுவதாகக் குற்றம் சாட்டினார். “நிஜமான துணிச்சல் இருந்திருந்தால், அந்தத் துயரச் சம்பவத்தின்போது விஜய் கரூரை விட்டு ஓடியிருக்கக் கூடாது” என்று கூறிய அவர், […]
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அடுத்த பேயன்பட்டி ஜீவா நகரைச் சேர்ந்த நந்தகுமார் (26) என்ற வாலிபர், கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி கழுத்தில் குத்தப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். கூலித் தொழிலாளியான இவர், ரத்த வெள்ளத்தில் கிடந்ததைப் பார்த்த பொதுமக்கள் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த ஜெயராமன் கொலை வழக்கில் நந்தகுமார் தொடர்புடையவர் என்பதாலும், அவர் சமீபத்தில்தான் சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்தார் என்பதாலும், பழைய பகையால் […]
தமிழக அரசியல் களத்தில் யாரும் எதிர்பாராத ஒரு திருப்பமாக, அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். இந்நிலையில், தனது நீண்டகால அரசியல் சகாவான செங்கோட்டையனின் இந்த முடிவை, அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மிகுந்த மனவேதனையுடனும், அதேசமயம் கடும் விமர்சனங்களுடனும் சாடியுள்ளார். திண்டுக்கல் சீனிவாசன் இது குறித்துப் பேசுகையில், “அதிமுகவில் அமைச்சராகவும், கட்சியின் அசைக்க முடியாத தூணாகவும், எப்போதும் முதலிடத்தில் இருந்தவர் […]
கலியுக வரதனான முருகப்பெருமான் அழகு, அறிவு, வீரம் என அனைத்து நற்பண்புகளுக்கும் இலக்கணமாக திகழ்பவர். அறுபடை வீடுகளில் வீற்றிருக்கும் அந்தத் தண்டாயுதபாணியை தரிசிப்பவர்களுக்குச் செவ்வாய் தோஷம் உள்ளிட்ட அனைத்து கிரக கோளாறுகளும் நீங்கும் என்பது ஐதீகம். குறிப்பாக, தைப்பூச திருநாளில் முருகனுக்கு விரதமிருந்து காவடி எடுப்பது பக்தர்களுக்குப் பெரும் பேறு. ஆனால், தமிழகத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதி மக்கள் மட்டும் பழனி முருகனை தெய்வமாப் பார்க்காமல், தங்கள் வீட்டு மருமகனாக […]
தமிழக அரசியல் களம் 2026 தேர்தலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், திமுகவின் சீனியர் அமைச்சர்களில் ஒருவரான கே. ராஜகண்ணப்பன் பேசிய பேச்சு, தற்போதைய கூட்டணியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டையில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சியில் பேசிய அவர், கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை மிக கடுமையாகச் சாடியுள்ளார். அமைச்சரின் இந்தப் பேச்சு, குறிப்பாக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையையும், சமீபகாலமாக ‘ஆட்சியில் பங்கு’ கேட்டு […]
தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அதற்காக தயாராகி வருகின்றனர். வழக்கமாக மே மாதத்தில் நடைபெறும் தேர்தல், இந்த ஆண்டு ஒரு மாதம் முன்னதாகவே, அதாவது ஏப்ரல் மாதத்திலேயே நடத்தி முடிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் கசிகின்றன. இதற்கு வலுசேர்க்கும் விதமாக, சென்னையில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் முக்கியத் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. பாஜகவின் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் […]
தமிழக அரசியல் களத்தில் தொகுதிப் பங்கீடு விவகாரம் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, திமுக கூட்டணியில் நிலவும் இழுபறி நிலைக்கு மத்தியில், டெல்லியில் இன்று (பிப்ரவரி 10) ராகுல் காந்தி தலைமையில் நடைபெறவுள்ள ஆலோசனை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர்கள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் பங்கேற்கும் இந்தச் சந்திப்பில், திமுகவுடனான தற்போதைய கூட்டணிச் சிக்கல்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. காங்கிரஸ் தரப்பில் இந்த […]

