தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் செயல்பாடுகள் நாளுக்கு நாள் வேகம் எடுத்து வரும் நிலையில், சேலம் – கோவை பிரதான சாலையில் அமைந்துள்ள மகுடஞ்சாவடியில் அக்கட்சியின் முக்கியப் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக சுமார் 25 ஏக்கர் பரப்பளவிலான பிரம்மாண்ட மைதானத்தில் முன்னேற்பாட்டு பணிகள் தற்போது போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடப்பட்டுள்ளன. ஆனால், பாதுகாப்பு மற்றும் நிர்வாகக் காரணங்களைக் கருத்தில் கொண்டு, இக்கூட்டத்திற்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் காவல்துறை மிக கடுமையான […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
சென்னை நீலாங்கரை கணேஷ் நகரைச் சேர்ந்த திருநாவுக்கரசு (40) என்பவர், ஈஞ்சம்பாக்கம் கடற்கரை பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக சிலம்பம் பயிற்சி அளித்து வருகிறார். அவரிடம் சுமார் 40-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர் சிலம்பம் பயின்று வருகின்றனர். தைப்பூச திருவிழாவையொட்டி ஈஞ்சம்பாக்கம் விநாயகர் கோயிலில் திருநாவுக்கரசு தலைமையில் சிலம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி முடிந்து 10-ஆம் வகுப்பு பயிலும் 15 வயது மாணவி மட்டும் பேருந்துக்காக தனியாக காத்திருந்துள்ளார். இதைப் […]
தமிழகத்தில் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ்மாக் பணியாளர்கள் நாளை (பிப்ரவரி 9, திங்கட்கிழமை) போராட்டத்தை முன்னெடுக்க உள்ளனர். இதன் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகள் மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை, சுமார் 3 மணி நேரம் மூடப்படும் என தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் முன்பாக, கடந்த 5 நாட்களாக […]
தமிழக வெற்றிக் கழக தலைவரான நடிகர் விஜய், 2026 சட்டமன்ற தேர்தலில் முதன்முதலாக எந்த தொகுதியில் போட்டியிடப் போகிறார் என்ற விவாதம் தற்போது ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. பல்வேறு தொகுதிகளின் பெயர்கள் அடிபட்டாலும், விக்கிரவாண்டி தொகுதியே அவரது முதல் தேர்வாக இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விக்கிரவாண்டியை தேர்வு செய்வது ஏன்..? தமிழக வெற்றிக் கழகத்தின் வரலாற்றில் நீங்காத இடம்பிடித்த வி.சாலை மாநாடு நடைபெற்ற இடமே விக்கிரவாண்டி என்பதுதான் இதற்கு […]
தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்ட நிலையில், பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக இடையே வாக்குறுதிப் போர் உச்சத்தை எட்டியுள்ளது. வாக்காளர்களை கவரும் வகையில் இரு தரப்பிலிருந்தும் கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது தேர்தல் பிரச்சாரங்களில் பல்வேறு கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை முன்வைத்து வருகிறார். குறிப்பாக, மாணவர்கள் நீண்டகாலமாக சுமந்து வரும் கல்விக்கடன் சுமையை குறைக்கும் வகையில், […]
அதிமுகவை ஒருங்கிணைக்க கோரி வி.கே.சசிகலா, விடுத்த தொடர் அழைப்புகளை அக்கட்சித் தலைமை கண்டு கொள்ளாத நிலையில், தற்போது தனிப்பாதையில் பயணிப்பது தொடர்பாக ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார். நீண்டகாலமாக அதிமுகவை மீட்கப் போராடி வந்த சசிகலா, தற்போது தனது ஆதரவாளர்களின் விருப்பத்திற்கு இணங்க புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அண்மையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டங்களில், “இனி காத்திருப்பதில் பயனில்லை, நேரடியாக களமிறங்குவதே சரி” என […]
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே, கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த கணவனை, மனைவியே கூலிப்படை ஏவிக் கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாமநத்தம் கிராமத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி செந்தில்குமார், தனது மனைவி காவ்யாவின் நடத்தையில் சந்தேகம் இருப்பதை அறிந்தும், குடும்ப நலன் கருதி அவரை மன்னித்து ஏற்றுக்கொண்டார். ஏற்கனவே அவனியாபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவருடன் காவ்யா வீட்டை விட்டு ஓடியபோது, பெரியோர்கள் முன்னிலையில் சமரசம் பேசி செந்தில்குமார் […]
அரசுப் பணியை ராஜினாமா செய்யும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுமா என்பது குறித்த நீண்டகால சட்டப் போராட்டத்திற்கு, சென்னை உயர் நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது. முன்னதாக, இரண்டு நீதிபதிகள் கொண்ட வெவ்வேறு அமர்வுகள் இந்த விவகாரத்தில் ஒன்றுக்கொன்று மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியதால் ஏற்பட்டிருந்த குழப்பம், தற்போது வழங்கப்பட்டுள்ள இந்த இறுதித் தீர்ப்பின் மூலம் விலகியுள்ளது. முன்னதாக ராஜினாமா செய்தாலும் ஓய்வூதியம் வழங்கலாம் என ஒரு […]
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான அரசியல் சதுரங்க வேட்டை இப்போதே தீவிரமடைந்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது கோட்டையான கொங்கு மண்டலத்தில் கூட்டணி படைகளை திரட்டத் தொடங்கியுள்ளார். இதன் முக்கிய நகர்வாக, கொங்குநாடு முன்னேற்ற கழகத்தின் தலைவர் பெஸ்ட் ராமசாமி, சேலத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து ஆதரவுக்கரம் நீட்டியுள்ளார். வரவிருக்கும் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்காக தனது கட்சி முழுவீச்சில் […]
சென்னை செங்குன்றம் அருகே ஆன்மிகப் பொக்கிஷமாக திகழும் ‘ஞாயிறு’ கிராமத்தில் அமையப்பெற்றுள்ளது அருள்மிகு புஷ்பரதேஸ்வரர் திருக்கோவில். ஒருமுறை பிரம்மதேவர் நடத்திய யாகத்தில் ஏற்பட்ட பிழையினால், சூரிய பகவான் தனது ஒளியை இழந்ததாகவும், இத்தலத்து ஈசனை வழிபட்டு மீண்டும் தனது பிரகாசத்தை மீட்டெடுத்ததாகவும் தல வரலாறு கூறுகிறது. சூரியனே இத்தலத்து இறைவனை நேரில் வந்து வழிபட்டதால், இவ்வூருக்கே ‘ஞாயிறு’ (சூரியன்) என்ற பெயர் நிலைபெற்றுள்ளது. சூரிய ஓரையில் வழிபாட்டின் அற்புதம் : […]

