தமிழக உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, மாநிலத்திலுள்ள கோடிக்கணக்கான ரேஷன் அட்டைதாரர்களுக்கு மிக முக்கியமான காலக்கெடு ஒன்றை விதித்துள்ளது. ரேஷன் விநியோக முறையில் நிலவும் முறைகேடுகளைக் களைந்து, போலி அட்டைகளை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில், ஒரு ரேஷன் அட்டையில் பெயர் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் அனைவரும் தங்களது கைரேகையை (Biometric) பதிவு செய்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அத்தியாவசியப் […]

தமிழக அரசின் மிக முக்கியமான திட்டமான ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை’ திட்டத்தில் விடுபட்டவர்களை இணைப்பதற்கான பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. ‘உங்களுடன் ஸ்டாலின்’ மற்றும் சிறப்பு முகாம்கள் வாயிலாக விண்ணப்பித்து, தொழில்நுட்ப காரணங்களால் நிராகரிக்கப்பட்ட சுமார் 7 லட்சம் பெண்கள் மேல்முறையீடு செய்திருந்தனர். இவர்களின் மனுக்களை தீர ஆராய்ந்து, தகுதியுள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் அரசின் பலன் சென்றடைவதை உறுதி செய்ய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேல்முறையீடு செய்தவர்களின் […]

தமிழக அரசியலில் ஒரு காலத்தில் மூன்றாவது சக்தியாக உருவெடுத்த தேமுதிக, தற்போது அதன் அடையாளமான ‘முரசு’ சின்னத்தை தக்கவைத்துக் கொள்ளவே பெரும் போராட்டத்தை நடத்தி வருகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் முரசு சின்னம் இன்னும் ஒதுக்கப்படாதது, அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்துக்கு எதிர்பாராத நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த காலத் தேர்தல்களில் போதிய வாக்கு சதவீதத்தை எட்டத் தவறியதால், தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி தேமுதிக தனது ‘அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சி’ என்ற […]

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 2 மாநில சட்டமன்றங்களின் 5 ஆண்டுகால பதவிக்காலம் விரைவில் நிறைவடைய உள்ளது. அதன்படி மேற்கு வங்கம் (மே 7 ), தமிழ்நாடு (மே 10), அசாம், (மே 20), கேரளா (மே 23), புதுச்சேரி (ஜுன் 15) என 5 மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் நிறைவடைய உள்ளது.. இதையடுத்து இந்த 5 மாநிலங்களிலும் சட்டசபை தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் […]

சென்னை நந்தனத்தில் நடைபெறும் திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் நிர்வாகிகள் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.. எஸ்.ஐ.ஆர் பணிகளின் போது திமுக ஐடி விங்கின் பங்கு அளப்பரியது.. களத்தில் கழகத்திற்காக உழைப்பவர்கள் போர் வாள், இணையத்தில் களமாடுபவர்கள் ஃபயர் வாள்.. நாம் தான் கண்டண்ட்-இல் கிங். 75 ஆண்டுகளை கடந்து இன்றும் ஆட்சியில் இருக்கும் மிகப்பெரிய கட்சி தான்.. நாம் செய்துள்ள திட்டங்கள் தான் இந்தியாவிற்கே வழிகாட்டியாக […]

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆளும் திமுக தரப்பில் தொகுதிப் பங்கீடு தொடர்பான காய்நகர்த்தல்கள் தற்போதே தீவிரமடைந்துள்ளன. இந்த முறை கூட்டணிக் கட்சிகளின் தயவை விட, சொந்த பலத்தை நிரூபிப்பதில் திமுக தலைமை உறுதியாக இருப்பதை அறிவாலய வட்டார தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. முன்னெப்போதும் இல்லாத வகையில், சுமார் 165 தொகுதிகளில் திமுக நேரடியாக களமிறங்கி, அறுதிப் பெரும்பான்மையைத் தனித்து ஈட்டுவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வியூகம் வகுத்து வருகிறார். […]

தமிழக அரசியல் களத்தில் பாட்டாளி மக்கள் கட்சி, இன்று அதன் வரலாற்றிலேயே காணாத ஒரு மிகப்பெரிய பிளவைச் சந்தித்துள்ளது. தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றங்களின் சமீபத்திய உத்தரவுகளின்படி, பாமகவின் அதிகாரப்பூர்வ கட்டுப்பாடு மற்றும் ‘மாம்பழம்’ சின்னம் ஆகியவை முழுமையாக அன்புமணி ராமதாஸ் வசமாகியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது விசுவாசிகளை ஒன்றிணைத்து ‘அய்யா பாட்டாளி மக்கள் கட்சி’ என்ற புதிய அமைப்பைத் தொடங்கி, தனது அரசியல் […]

தமிழ்நாட்டில் நிலவி வரும் வானிலை சூழலில் அடுத்த சில நாட்களுக்கு திடீர் மாற்றங்கள் ஏற்படப்போவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது, தற்போது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் படிப்படியாக வலுவிழக்கும் என்று கணிக்கப்பட்டாலும், அதே சமயம் தென்கிழக்கு வங்கக்கடல் […]

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் இன்று சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார்.. அப்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் உடனிருந்தார்.. இன்றுடன் சட்டமன்ற கூட்டத்தொடர் முடிவடைய உள்ள நிலையில் இன்று ஓபிஎஸ் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.. எனினும் முதலமைச்சரை ஓபிஎஸ்-ஐ சந்தித்ததற்கான காரணம் வெளியாகவில்லை.. திமுக உடன் இணைந்து ஓபிஎஸ் தேர்தலை எதிர்கொள்ளப் போகிறாரா? அல்லது தனிக்கட்சியை தொடங்கப் போகிறாரா? அல்லது தவெக உடன் […]

தமிழக நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமனங்களுக்கு லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாகவும், டெண்டர் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பாகவும் அமைச்சர் கே.என். நேரு மீது வழக்குப்பதிவு செய்யக் கூறி அமலாக்கத்துறை சார்பில் தமிழக டிஜிபிக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இந்த நிலையில் இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், நகராட்சி நிர்வாக துறை நியமன முறைகேடு, டெண்டர் முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை வழங்கிய ஆதாராங்களில் முகாந்திரம் உள்ளது என்பதால் அதன் அடிப்படையில் […]