மின் பகிர்மானக் கழகத் திட்டப் பிரிவு தலைமை பொறியாளர், அனைத்து தலைமை பொறியாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
இதுதொடர்பான சுற்றறிக்கையில், “2024 – 2025ஆம் ஆண்டுக்குள் சுமார் 15 ஆயிரம் விவசாய மின் இணைப்புகளை வழங்க முடிவு செய்யப்பட்டு, தற்போது வரை 11,551 இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சாதாரண பிரிவில் 58 சதவீத இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. …