முன்னோர்களின் நினைவாக திதி மற்றும் தர்ப்பணம் செய்வதற்கு மிகவும் புண்ணிய நாளாகக் கருதப்படும் புரட்டாசி மகாளய அமாவாசை, வரும் 2026 அக்டோபர் 10 சனிக்கிழமையன்று வருகிறது. மிக அரிதாக, மகாளய அமாவாசையும் சனி பகவானுக்குரிய சனி அமாவாசையும் (சர்வ பித்ரு அமாவாசை) ஒரே நாளில் இணைந்து வருவது கூடுதல் ஆன்மீக மகத்துவத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நாளில் அதிகாலையிலேயே புனித நீராடி சனி பகவானை வழிபடுவதோடு, முன்னோர்களை மனதார நினைத்து கருப்பு எள், […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல்வர் விஜய்யின் வெற்றியை எதிர்த்து, திமுக வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்கள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகள் தொடரப்பட்டன. வேட்புமனுவில் முழுமையான சொத்து விவரங்கள் முறையாகத் தாக்கல் செய்யப்படவில்லை எனக் கூறி தொடரப்பட்ட இந்த வழக்குகளை ஆரம்பக் கட்டத்திலேயே நிராகரிக்கக் கோரி, விஜய் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு விசாரணைக்கு […]
தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், ஆய்வக உதவியாளர், விற்பனை உதவியாளர், இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் மற்றும் நேர்முக எழுத்தர் உள்ளிட்ட பல்வேறு குரூப் 4 நிலையிலான 6,574 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை நேற்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தேர்வர்கள் வரும் நவம்பர் 5-ஆம் தேதி வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம் […]
கோவை மாவட்டம் இருட்டுப்பள்ளம் வனப்பகுதியை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில தினங்களாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, அப்பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான கோவை குற்றால அருவியில் திடீர் காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் சீறிப்பாய்ந்து கொட்டுவதால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருதி அருவிக்குச் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. சாடிவயல் வனச் சோதனைச் சாவடியில் இருந்து அடர்ந்த காட்டுப் […]
தலைநகர் சென்னை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அண்மைக்காலமாக அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு நீடித்து வருவது பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவு நேரங்களில் நிலவும் மின்தடையால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியல் மற்றும் மின்வாரிய அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டங்களில் ஆங்காங்கே ஈடுபட்டு வருகின்றனர். இந்த திடீர் மின்தடையால் தொழில் மற்றும் விவசாயத்துறைகளும் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. பொதுமக்களின் தொடர் புகார்களை தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 23-ஆம் […]
சமூக வலைதளங்களில் திமுக அரசுக்கு எதிராகத் தொடர்ந்து அவதூறு பரப்பும் வகையில் பதிவிட்டதாக கூறி, அமைச்சர் நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா மற்றும் தவெக தகவல் தொழில்நுட்பப் பிரிவினர் மீது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். திமுக குறித்து விமர்சிக்க அவர்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக ரூ.1 கோடி மானநஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் தனது […]
தமிழ்நாட்டில் திருமணம் செய்துகொள்ளும் மணப்பெண்களின் திருமணச் செலவுகளுக்கு உதவும் வகையில் அறிவிக்கப்பட்ட ‘அண்ணன் சீர்’ திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக, முதற்கட்டமாக ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தகுதியான மணப்பெண்களுக்கு திருமாங்கல்யம் செய்வதற்கு 8 கிராம் (1 சவரன்) தங்க நாணயம் மற்றும் ஒரு உயர்தர பட்டுப்புடவை ஆகியவை சீர்வரிசையாக முழுமையாக இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான நிர்வாக மற்றும் நிதி […]
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. ககன்தீப் சிங் பேடி பிறப்பித்த உத்தரவு : ➟ பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை தொடங்கவுள்ளது. இதனை முன்னிட்டு, மாநகராட்சிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும், மழைநீர் […]
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள 20 தமிழக மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்டுள்ள 270 மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க தூதரக ரீதியிலான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், எல்லையில் தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக சிறைபிடிக்கப்படும் விவகாரத்தில் மத்திய வெளியுறவு அமைச்சகம் தனிக்கவனம் செலுத்தி விரைந்து தீர்வுகாண வேண்டும் என்று முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார். குறிப்பாக, கடந்த அக்டோபர் […]
வீட்டின் பூட்டை உடைத்து 118 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக புகாரளித்து பரபரப்பை ஏற்படுத்திய பிரபல பெண் யூடியூபர் மதுமிதா மீது, திருட்டு புகார் பதிவாகியிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த தொழிலதிபர் வினோத்குமாரின் மனைவி மதுமிதா. சமூக வலைதளங்களில் பல லட்சம் பின்தொடர்பாளர்களை கொண்டுள்ள இவர், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் கட்டுக்கட்டாக பணம், ஆடம்பர ஆடைகள் மற்றும் நகைகளை அணிந்து ரீல்ஸ் வீடியோக்கள் பதிவிட்டுப் பிரபலமானவர். சில ஆண்டுகளுக்கு […]

