கோடை விடுமுறை முடிந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. இதனால், மாணவர்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு ஆர்வமுடன் பள்ளிக்கு சென்றனர். புதிய கல்வியாண்டை தொடங்கும் உற்சாகத்துடன் மாணவர்கள் வகுப்பறைக்குச் சென்றனர். அனைத்து பள்ளிகளிலும் புதிய மாணவர்களை வரவேற்கும் விதமாக ஆசிரியர்கள் இனிப்பு வழங்கினர். பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளே அரசுப் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டது. அதேபோல் பள்ளி வேலை நாட்கள், விடுமுறைகள், […]

அரசுப்பள்ளி மாணவர்களின் ஆங்கில திறனை மேம்படுத்த லெவல் அப் என்ற புதிய திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அமல்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் திறன், கல்வி திறன் ஆகியவற்றை மேம்படுத்தி, அகில இந்திய அளவில் அனைத்து வாய்ப்புகளும் மாணவர்களுக்கு கிடைக்கும் நிலையில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. குறிப்பாக புதுப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம், காலை உணவுத் திட்டம், திறன்கள் திட்டம் உள்ளிட்டவை மாணவர்களிடையே […]

தெற்கு ஆசிய நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வருகிறது. அதேபோல் இந்தியாவிலும் கொரோனா பரவல் மெல்ல அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், தற்போது பரவி வரும் கொரோனா வைரஸால், பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டுமென்றும், கைகளை அடிக்கடி சோப்பு போட்டு […]

2021 சட்டமன்ற தேர்தலில் அளித்த வாக்குறுப்படி, 2023 செப்டம்பர் 15ஆம் தேதி, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை திமுக அரசு தொடங்கியது. அதன்படி, மாதந்தோறும் தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் ஏற்கனவே 1.14 கோடி பெண்கள் பயன்பெற்று வரும் நிலையில், இத்திட்டம் மேலும் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதற்காக நாளை (ஜூன் 4) மாபெரும் முகாம் தமிழ்நாட்டில் நடக்கிறது. மொத்தம் […]

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் சென்னை அல்லிகுளம் வளாகத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி வேறு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதால், இந்த வழக்கு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில் ஞானசேகரனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், செல்போன் உரையாடல்கள் அனைத்தும் குற்றப்பத்திரிகையில் […]

தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் இரண்டு நாள் மேக்கப் மாஸ்டர்கிளாஸ் பயிற்சி வழங்கப்பட்ட உள்ளது. தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் இரண்டு நாள் மேக்கப் மாஸ்டர்கிளாஸ் பயிற்சி வரும் 10.06.2025 முதல் 11.06.2025 வரை காலை 10 மணி முதல் மாலை 5.00 மணி நடைபெற உள்ளது. இப்போது அழகு தொழிலில் அசைக்க முடியாத இடத்தை பிடிக்க, சரியான பயிற்சி தேவை, […]

தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு 07.05.2025 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. இன்று வரை 2,81,266 மாணாக்கர்கள் விண்ணப்பப் பதிவு செய்துள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; கடந்த 07.05.2025 அன்று தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு தொடங்கப்பப்பட்டது. 02.06.2025 மாலை 6 மணி நிலவரப்படி 2,81,266 மாணாக்கர்கள் விண்ணப்பப் பதிவு […]

தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கியது. தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இந்த (2025-26) கல்வி ஆண்டில் இளங்கலை படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த மே 7-ம் தேதி தொடங்கி 27-ம் தேதி முடிவடைந்தது. 2.25 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். அதில், 1.85 லட்சம் பேர் விண்ணப்ப கட்டணமும் செலுத்தி, ஆன்லைன் பதிவை […]

தொழில் பார்ட்னர் சூனியம் வைத்திருப்பதாக கூறி 76 கிராம் தங்கம் நகைகளை மோசடி செய்த கோயில் பூசாரியை போலீசார் கைது செய்தனர். சென்னை மந்தைவெளி ஸ்ரீ வேங்கடட்ம டிரஸ்ட் பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் எஸ்.பி.ஆர்.ரமேஷ் (56). தொழிலதிபரான இவர், ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான தொழில் செய்து வருகிறார். சில நாட்களாக தொழில் சரியாக கைகொடுக்கவில்லை என தனது நண்பரிடம் கூறி வந்துள்ளார். அப்போது அவர், பெரம்பூர் பெரியார் நகரில் […]

தஞ்சை மாவட்டம் பட்டுகோட்டை அருகே மல்லிப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் ஜவாஹிர் என்பவரது மகன் முகமது ஷாம் (வயது 31). இவர், பட்டபடிப்புக்காக கடந்தாண்டு சென்னை சென்றார். அப்போது, அமைந்தக்கரை ஆசாத் நகர் பகுதியைச் சேர்ந்த அபுதாஹிர் என்பவரின் மகள் ரிஸ்வானா (21) என்பவருடன் முகமது ஷாமுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இருவரும் நட்பாக பழகி வந்துள்ளனர். பின்னர், இருவரும் காதலித்து வதனர். காதலித்தபோது இருவரும் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டுள்ளனர். […]