திமுக எம்.பி. கனிமொழி இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது பேசிய அவர் “ தமிழ்நாட்டில் மத நல்லிணக்க சூழலை சீர் குலைக்க பாஜக, ஆர்.எஸ்,எஸ் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. நீதிபதி ஜி.ஆர். சாமிநாதன் தமிழக காவல்துறையின் கட்டுப்பாட்டை உடைக்கும் வகையில் தீர்ப்பளித்துள்ளார்.. திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாக மாற்ற பாஜக, ஆர்.எஸ்.எஸ் முயற்சிக்கிறது.. 2014-ல் அளித்த தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள படி, வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றப்பட்டது.. ஆங்கிலேயர் […]

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், சீமான் என இந்த தேர்தலில் 4 முனைப் போட்டி நிலவுகிறது. இதில் திமுக கூட்டணி வலுவாக உள்ளது.. கரூரில் துயர சம்பவத்திற்கு பின் ராகுல் காந்தி தனிப்பட்ட முறையில் விஜய்யை அழைத்து பேசியிருந்தார்.. மறுபுறம் திமுக கூட்டணியில் நாங்கள் தொடர்ந்து பின்னுக்குத் தள்ளப்படுகிறோம் […]

திருப்பரங்குன்றம் தீப வழக்கு விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.. திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான வழக்கில், மதுரை உயர்நீதிமன்ற கிளை தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டார். ஆனால் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்திலேயே தீபம் ஏற்றபட்டது.. இதையடுத்து மனுதாரர் ராம ரவிக்குமார் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தார்.. அதை விசாரித்த ஜி.ஆர். சுவாமிநாதன் மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்களின் […]

தமிழ்நாடு முழுவதும் உள்ள 590 சார் பதிவாளர் அலுவலகங்களில் சொத்துப் பதிவு, திருமணப் பதிவு, உயில் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களைப் பதிவு செய்யக் கூட்டம் நிரம்பி வழியும் நிலையில், இந்தக் கூட்ட நெரிசலை குறைக்கவும், நடைமுறைகளை எளிதாக்கவும் பத்திரப்பதிவுத் துறை புதிய டிஜிட்டல் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ‘ஸ்டார் 3.0’ (STAR 3.0) என்ற பெயரில் புதிய மேம்படுத்தப்பட்டத் திட்டம் விரைவில் மக்களின் பயன்பாட்டுக்கு […]

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்திற்கு பதிலாக மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என்று ராம ரவிக்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற  மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டார். ஆனால் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்திலேயே தீபம் ஏற்றபட்டது.. இதையடுத்து மனுதாரர் […]

விழுப்புரம் அருகே புதுச்சேரி எல்லையில் உள்ள மடுகரை பகுதியில், தன்னுடைய மனைவியுடன் திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்த சக ஊழியரை, கணவரே மது அருந்த அழைத்துச் சென்று கழுத்தைக் கிழித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சுராஜ் குமார் என்பவர், தன் குடும்பத்துடன் தமிழகம் மற்றும் புதுச்சேரி எல்லையான மடுகரை பகுதியில் வசித்து வருகிறார். அதே பகுதியில் உள்ள தனியார் பிளைவுட் […]

2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த மேச்சேரி ஒன்றியத்தில் உள்ள காமனேரி பகுதியில் சாலை அமைக்கும் பணியின்போது, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் மூதாட்டி ஒருவரை கிராம மக்கள் முன்னிலையில் சரமாரியாகத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. காமனேரி பகுதியில் சாலை அமைக்கும் பணி நடந்துகொண்டிருந்தபோது, அங்கு வசிக்கும் சரோஜா என்ற மூதாட்டியின் வீட்டை ஒட்டியே சாலை அமைக்கத் தொழிலாளர்கள் முயன்றுள்ளனர். அப்போது, மூதாட்டி சரோஜா, […]