ஈரோடு அன்னை சத்யா நகர் பகுதியைச் சேர்ந்த மாணிக் – மகாலட்சுமி தம்பதியினரின் 5 வயது மகன் சாய்சரண், வாழைப்பழம் சாப்பிட்டபோது மூச்சுக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு, சிறுவன் சாய்சரண் வீட்டில் வாழைப்பழம் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக சிறுவன் திடீரென மூச்சுவிட சிரமப்பட்டுத் திணற ஆரம்பித்தான். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள், அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் சிறுவனை […]

நாமக்கல் மாவட்டம் பாண்டமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 34 வயதான ஸ்ரீதர், பெங்களூரில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவருக்கு வீட்டில் வரன் தேடப்பட்டு வந்த நிலையில், இன்ஸ்டாகிராம் சமூக வலைதளம் மூலமாக மகாஸ்ரீ என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நட்பானது நாளடைவில் காதலாக மலர்ந்தது. தன்னை திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்தவர் என்றும், தனக்கு 30 வயது என்றும் மகாஸ்ரீ ஸ்ரீதரிடம் கூறியுள்ளார். இருவரும் காதலித்து […]

தமிழக அரசியலில் பல்வேறு யூகங்களையும் குழப்பங்களையும் ஏற்படுத்தியிருந்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் திடீரெனச் சந்தித்து அவசர ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பிரச்சாரப் பயணங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில், பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக ஓ.பன்னீர்செல்வம் சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டார். தலைமைக் கழக நிர்வாகிகளுடனான கூட்டத்திற்குப் பிறகு, ஓபிஎஸ் […]

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பியார் சோலா பகுதியைச் சேர்ந்த குழந்தை இயேசு என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அவரது மனைவி பிரிசிலாவின் தாய் மாமன் மகன் பிரேம் என்பவருக்கும் இடையே பல ஆண்டுகளாக நட்பு இருந்துள்ளது. இருவரும் அடிக்கடி ஒன்றாக அமர்ந்து மது அருந்துவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தனர். இதற்கிடையே, பிரேம் வேறு ஒரு பெண்ணுடன் ஏற்பட்ட தொடர்பால் திருப்பூரில் வசித்து வந்துள்ளார். பிரேம் பங்களா வாங்க வேண்டும் என்று கூறி […]

மதுரையில் மின்சாரம் பாய்ந்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.. மதுரை வாடிப்பட்டி அருகே ஆண்டிப்பட்டி பங்களா என்ற இடத்தில் சோமசுந்தரம் என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார்.. இந்த டீக்கடையில் பால முருகன் என்பவர் டீ மாஸ்டராக வேலை செய்து வருகிறார்.. இன்று அதிகாலை பாலமுருகன் டீக்கடையில் வழக்கம் போல் வேலை செய்து கொண்டிருந்த போது, அங்கு அலங்காரத்திற்காக தொங்கவிடப்பட்டிருந்த சீரியல் லைட்டின் வயர் […]

தமிழ்நாடு அரசின் பால்வளத் துறையின் கீழ் செயல்படும் ஆவின் நிறுவனம், தினசரி பால் பாக்கெட்டுகள் மட்டுமின்றி நெய், பன்னீர், தயிர் போன்ற பால் பொருட்களையும் குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், பண்டிகை காலத்திற்காக வழங்கப்பட்ட தள்ளுபடிகளை நிறுத்தியதன் மூலம், ஆவின் நெய் மற்றும் பன்னீர் விலைகள் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளன. இந்த விலை உயர்வு பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2025 செப்டம்பர் மாதம் பண்டிகை காலத்தை ஒட்டி […]

கடந்த ஓராண்டாக தொடர்ந்து உச்சத்தில் பறந்து வந்த தங்கத்தின் விலை, தற்போது சற்று ஆசுவாசமடைந்து நிலையாக உள்ளது. சில நாட்கள் லேசான ஏற்றம் கண்டாலும், பெரியளவிலான விலை உயர்வு இல்லாமல் வர்த்தகமாகி வருகிறது. இந்தச் சூழலில், வரும் காலங்களில் தங்கத்தின் விலை எப்படி இருக்கும், இனியும் அதன் ஏற்றம் தொடருமா என்பது குறித்துப் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் சில முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார். கொரோனாவுக்கு பிறகு தங்கத்தின் […]

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், தகுதியுள்ள மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் என்று நடப்பு ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், 10 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த மாதமே தொடங்கி வைக்க உள்ளார். மாநில அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் […]