இன்றைய பொருளாதார சூழலில், படித்து முடித்துவிட்டு வேலைக்காக காத்திருப்பதை விட, சொந்தமாக தொழில் தொடங்கி முன்னேற நினைக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, உணவு மற்றும் பால் சார்ந்த பொருட்களுக்கான தேவை சந்தையில் எப்போதும் அதிகம் என்பதால், இத்துறையில் ஆர்வம் கொண்டவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இலவச பயிற்சி முகாம் விவரம் : திருவள்ளூர் மாவட்டம், கோடுவள்ளியில் அமைந்துள்ள பால் மற்றும் உணவுத் தொழில்நுட்பக் […]

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவு அமல்படுத்தப்படாததைக் கண்டித்து, அப்பகுதியில் பதற்றம் நிலவியது. கோவில் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், மாவட்ட ஆட்சியர் திடீரென 144 தடை உத்தரவு பிறப்பித்தார். கார்த்திகை தீபத்திருவிழா அன்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று இந்து அமைப்புகள் […]

தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. நேற்றுமுன்தினம் வடதமிழக – புதுவை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மெதுவாக மேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழக பகுதிகளில், […]

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் குறித்து அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ பாஜக RSS ன் கைக்கூலியாக மாறி அண்ணாதிமுகவை அமித்ஷாதிமுக வாக மாற்றிய அடிமை பழனிசாமி, தமிழ்நாட்டு மக்களின் நலனைப் பற்றி துளியும் அக்கறையின்றி அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டில் கலவரம் செய்ய துடிக்கும் கயவர்களுக்குத் துணைபோய் நிற்பது வெட்கக்கேடு. மதப்பிரிவினைவாத சக்திகளும் , அடிமைக் கைக்கூலிகளும் எவ்வளவு முயன்றாலும், மாண்புமிகு […]

கார்த்திகை தீபத் திருநாளில் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என்று மதுரை உயர்நீதின்றக் கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கடந்த 1-ம் தேதி தீர்ப்பு வழக்கினார்.. எனினும் இந்த உத்தரவு நேற்று அமல்படுத்தப்படாத நிலையில், மனுதாரர் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.. அப்போது திருப்பரங்குன்ற மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் இன்றே தீபம் ஏற்ற வேண்டும் என்று நீதிபதி அதிரடி உத்தரவு […]

திருப்பரங்குன்றம் தீப வழக்கில், மலை உச்சியில் இருக்கும் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை தனி நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் கடந்த 1-ம் தேதி உத்தரவிட்டார்.. மேலும் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கான முழு பாதுகாப்பையும் காவல்துறை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.. இதற்கு எதிராக கோயில் நிர்வாகம் சார்பில் செவ்வாய்க் கிழமை மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.. ஆனால் இந்த மனு நேற்று விசாரணைக்கு […]

சென்னை கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் பணியாற்றும் 35 வயது பெண் காவலர் ஒருவரிடம், இன்ஸ்டாகிராம் மூலம் காதலிப்பதாக கூறிப் பழகி, பணம் மற்றும் நகைகளை அபகரித்த இளைஞரை அண்ணா நகர் அனைத்து மகளிர் போலீஸார் கைது செய்துள்ளனர். கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரியும் அந்தப் பெண் காவலர், கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரைப் பிரிந்து, 2 மகள்களுடன் அண்ணா நகர் பகுதியில் தனியாக வசித்து வருகிறார். கடந்த 8 […]

மதுரை, திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் மண்டபம் அருகில் உள்ள மண்டபத்தின் மேல் சுப்பிரமணிய சுவாமி சார்பில் ஆண்டுதோறும் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது.. மலை உச்சியில் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது காலங்காலமாக பின்பற்றப்பட்டு வரும் வழக்கமாகும்.. ஆனால் 2-ம் உலகப் போரின் போது பாதுகாப்பு காரணமாக ஆங்கிலேய அரசு அதனை தடை செய்தது.. அதனால் கோவில் முன்புறம் உள்ள தூணில் தீபம் ஏற்றப்பட்டது.. இதை […]

நெல்லையில் உள்ள கூடங்குளம் அனுமின் நிலையத்திற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக முக்கியப் பிரமுகர்களின் வீடுகளைக் குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கியப் புள்ளிகள் இந்தப் போலி மிரட்டல்களால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் தலைமை செயலகம், உயர்நீதிமன்றம், […]