மார்ச் 2015 முதல் ஆகஸ்ட் 2022 வரை நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொது /துணைத்தேர்வுகள் எழுதிய தனித்தேர்வர்கள் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; மார்ச் 2015 முதல் ஆகஸ்ட் 2022 வரை நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொது /துணைத்தேர்வுகள் எழுதிய தனித்தேர்வர்கள் பலர் தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ்களை இன்று வரை பெற்றுக் கொள்ளமால் உள்ளனர். அத்தகைய […]

மாத சம்பளம் பெறுபவர்கள் சமையல் எரிவாயு சிலிண்டர் (LPG) முன்பதிவு செய்யும்போது முழுத் தொகையையும் செலுத்திவிட்டு, பிறகு அரசு வழங்கும் மானியத் தொகையை தங்கள் வங்கிக் கணக்கில் பெற்று வருகின்றனர். ஒரு வருடத்திற்கு 12 சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலையில் பெற முடியும் என்பதால், மக்கள் சமையல் எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்துகின்றனர். ஆனால், சில சமயங்களில் சிலிண்டர் மானியம் திடீரென வருவது நின்று போகும். பலருக்கு மானியம் வருகிறதா? இல்லையா? […]

மதுரை மாவட்டம் புதூர் அருகே சம்பக்குளம் பகுதியில் வசித்து வந்த வங்கி அதிகாரி வடிவேல் என்பவரது மகன் யுவன் (15). இவர், மேலூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர், துப்பாக்கிச் சுடும் போட்டிகளில் கலந்துகொண்டு பல பரிசுகளை வென்றவர். மேலும், தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்பதற்காக யுவன் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளான். இந்நிலையில், சமீபத்தில் யுவனுக்கும் அவரது பெற்றோருக்கும் இடையே […]

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓடும் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைக்கட்டுக்கு அருகில், 24 மணி நேரமும் வற்றாமல் பொங்கி வழியும் ஒரு அதிசயமாக கருதப்படும் தீர்த்தம் குறித்து பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இந்தத் தீர்த்தம், மனிதர்களின் கர்ம வினைகள் மற்றும் பித்ரு தோஷங்களைப் போக்கும் சக்தி கொண்டது என பக்தர்களால் நம்பப்படுகிறது. இந்த அதிசய தீர்த்தம் அமைந்துள்ள பகுதியில், வரலாற்றுச் சிறப்புமிக்க மார்க்கண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள சிவன், லிங்க […]

தீபாவளி பண்டிகை வரும் 20-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில் பள்ளி மாணவர்கள் பாதுகாப்பாக தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது குறித்து, பள்ளிக் கல்வித் துறை சார்பில் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; தீபாவளி பண்டிகை நாளில் மக்கள் கவனக் குறைவாக பட்டாசு வெடிப்பதால் தீ விபத்து ஏற்படலாம். இது தவிர, உயிர்சேதம், பொருள் சேதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், குழந்தைகளுக்கு தீக்காயங்களும், சில […]

தமிழகத்தில் நாளை முதல் வடகிழக்குப் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில்: தென்மேற்குப் பருவமழை இந்தியப் பகுதிகளிலிருந்து நாளை விலகக்கூடும். அதேநேரத்தில், வடகிழக்குப் பருவமழை தமிழகம்-புதுச்சேரி-காரைக்கால் பகுதிகள், கேரளா-மாஹே, தெற்கு உள் கர்நாடகம், ராயலசீமா, தெற்கு கடலோர ஆந்திர பகுதிகளில் நாளை தொடங்க வாய்ப்புள்ளது. தென்மேற்கு வங்கக்கடல்- பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் […]

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி நிறைவு விழாவில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் “ நாட்டில் பெருமை சேர்க்கும் வகையில் பரிசுகளை வெல்ல உள்ள வீரர், வீராங்கனைகளுக்கு வாழ்த்துகள்.. திமுகவின் திராவிட மாடல் ஆட்சி தமிழ்நாடு விளையாட்டு துறையின் பொற்காலமாக இருக்கிறது.. சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளை நடத்தும் இடத்தில் தமிழ்நாடு உள்ளது.. கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாடு எல்லா […]

நாடு முழுவதும் ஒவ்வொரு தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.. அந்த வகையில் இந்த ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றாலே புத்தாடைகளும், பலகாரங்களும், இனிப்புகளும், பட்டாசுகளும் தான் நம் நினைவுக்கு வரும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சி உடன் கொண்டாடி வருகின்றனர்.. இந்த ஆண்டும் தீபாவளி கொண்டாட மக்கள் மகிழ்ச்சி உடன் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் தீபாவளி […]