தமிழகத்தில் காலியாகவுள்ள சட்டசபை தொகுதிகளில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கியுள்ள சூழலில், ஆளும் தவெக, பிரதான எதிர்க்கட்சியான திமுக, அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சி என 4 முனைப் போட்டி உறுதியாகியுள்ளது. நாம் தமிழர் தவிர மற்ற 3 கட்சிகளும் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு களப்பணியைத் […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
தமிழ் அறிஞரும், பேராசிரியர், பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா வயது மூப்பால் காலமானார். அவருக்கு வயது 90. 13,000க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி சாதனைப் படைத்த அவர், திருக்குறளுக்கும் உரை எழுதிய சிறப்புக்குரியவர் ஆவார். பேச்சாற்றலாலும் இயல்பான நகைச்சுவையினாலும் பட்டிமன்றக் கலையைத் தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர் சாலமன் பாப்பையா. 1936-ஆம் ஆண்டு பிறந்த இவர், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். குன்றக்குடி அடிகளாரின் […]
தேநீர் மற்றும் காபி போன்ற பானங்களை மிதமான சூட்டில் குடிக்காமல், அதிகப்படியான கொதிக்கும் சூட்டிலேயே தொடர்ந்து அருந்தி வருபவர்களுக்கு உணவுக்குழாய் புற்றுநோய் (esophageal cancer) ஏற்படும் அபாயம் 3 மடங்கு அதிகம் என பிரிட்டனில் நடத்தப்பட்ட புதிய மருத்துவ ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் சுமார் 10 லட்சம் பேரிடம் நடத்திய இந்த விரிவான ஆய்வு முடிவு, புற்றுநோய் தொடர்பான புகழ்பெற்ற சர்வதேச மருத்துவ ஆய்விதழான ‘இன்டர்நேஷனல் ஜர்னல் […]
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க வெட்டுவான் கோவில், பெரும் பாறையை மேலிருந்து கீழாக குடைந்து செதுக்கப்பட்ட தனித்துவமான கட்டட கலை அமைப்பால் ‘தென்னிந்தியாவின் எல்லோரா’ மற்றும் ‘மினி கைலாசா’ என்று போற்றப்படுகிறது. கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் மதுரையை தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்த பாண்டிய மன்னன் மாறஞ்சடையனால் தொடங்கப்பட்ட இந்தக் கோவில், ஏதோ ஒரு காரணத்தால் முழுமையடையாமல் முற்றுப்பெறாத நிலையிலேயே விடப்பட்டது. பண்டைய காலத்தில் ‘அரைமலை’ என்று […]
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் சிங்காடிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தன் (40) மற்றும் அவரது மனைவி தேன்மொழி (35) ஆகியோர், வெள்ளகேட் பகுதியில் உள்ள ஒரு மரக்கிடங்கில் கூலித் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர். இவர்கள் மரக்கிடங்கின் உரிமையாளரான ஆறுமுகம் என்பவரிடம் ரூ.20,000 கடன் வாங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த தேன்மொழிக்கு திடீரென கடுமையான பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அவரை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல […]
கொளத்தூர் தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு திடீர் மூச்சுத்திணறல் மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அண்மையில் நிறைவடைந்த தமிழ்நாடு சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் முழுமையாகப்பங்கேற்றிருந்த எம்எல்ஏ வி.எஸ். பாபுவுக்கு, நேற்று அதிகாலை திடீரென கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை தொடர்பாக […]
சென்னை திருவொற்றியூர் மேற்கு மாட வீதியைச் சேர்ந்த பிரதீப் ராஜ் (26) என்ற இளைஞர், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக காவல்துறையிடம் குடும்பத்துடன் நேரில் சென்று புகாரளித்த அடுத்த நாளே, மர்ம கும்பலால் ஓட ஓட விரட்டி கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்யப்படுவதற்கு முன்பாக, திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்த பிரதீப் ராஜ், காவல்துறையினர் […]
தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய தமிழக வெற்றிக் கழகத்தை மாநில அளவிலான அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் அக்கட்சியின் பிரதான அடையாளமாக விளங்கும் ‘விசில்’ சின்னம் தவெக-வுக்கே நிரந்தரமாக ஒதுக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக களமிறங்கிய தவெக, யாரும் எதிர்பாராத வகையில் 35 சதவீத வாக்குகளை வாரிக் குவித்து அசத்தியது. சுமார் 1.8 கோடிக்கும் அதிகமான […]
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் அத்தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தவெக அறிவித்துள்ளது. சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் சூழல் காரணமாக அதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். அதிமுக எம்எல்ஏ-க்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்தியபாமா, பெருந்துறை ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் […]
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையின் பொருளாதார விவகாரக் குழு (CCEA), ஒன்பது மாநிலங்களில் ரயில்வே கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்காக ரூ.20,800 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான எட்டு புதிய ரயில்வே திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. நெரிசலைக் குறைத்தல், பிணைய இணைப்பை வலுப்படுத்துதல் மற்றும் வலையமைப்புத் திறனை அதிகரிப்பது ஆகியவை இதன் முக்கிய நோக்கங்களாகும். இந்த ஒப்புதல்களின் கீழ், ரூ.10,783 கோடி மதிப்பில் மூன்று பல வழித்தட திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் […]

