மேற்கு வங்கத்தில் 48 வயதான அரபிந்து என்பவர் இரண்டு யூடியூப் சேனல்களை நடத்தி வருகிறார். திரைப்படங்கள் மற்றும் நடன வீடியோக்களை பதிவேற்று வந்த இவரது சேனல்களுக்குப் பெருமளவிலான பின்தொடர்பவர்கள் உள்ளனர். அரபிந்தும் அவரது மகனும் இணைந்து ரீல்ஸ் மோகத்தில் இருந்த 9ஆம் வகுப்பு மாணவி ஒருவருடன், பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டனர். ரீல்ஸ் படப்பிடிப்புக்காகப் பல்வேறு இடங்களுக்குச் சிறுமியை அழைத்துச் சென்ற தந்தை-மகன் இருவரும், சிறுமி உடை மாற்றும்போது அதனை ரகசியமாக படம்பிடித்ததாகக் […]

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே அமைந்துள்ளது திருவெள்ளறை பெருமாள் கோயில். 108 திவ்ய தேசங்களில் நான்காவது திருத்தலமாகப் போற்றப்படும், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலில், மேற்பார்வையாளராக (சூப்பர்வைசர்) பணிபுரிந்த சுரேஷ் (54) என்பவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இக்கோயிலுக்குச் சொந்தமான நந்தவனத்தில், சுரேஷ் ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பான வீடியோ ஆதாரங்கள் வெளியாகி இணையத்திலும், பக்தர்களிடையேயும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. விசாரணையில், இந்த சம்பவம் […]

அரசுத்துறை சேவை, திட்டங்களை வீடுகளுக்கே சென்று மக்களுக்கு வழங்கும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் என்ற திட்டத்தை கடந்த ஜூலை மாதம் தமிழக அரசு தொடங்கியது.. இந்த திட்டம் மூலம் ஊரகப் பகுதிகளில் 15 துறைகளின் 46 சேவைகளை பெறலாம்.. நகர்ப்புற பகுதிகளில் 13 துறைகளின் 43 சேவைகள் இந்தத் திட்டத்தில் வழங்கப்பட்டு வருகின்றன.. நகர்ப்புறங்களில் 3,768 முகாம்கள், ஊரகப்பகுதிகளில் 6,232 முகாம்கள் என 10,000 முகாம்கள் நடத்தப்பட உள்ளன. […]

தமிழ்நாட்டின் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல் முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்கில் 41 எஃப்.ஐ.ஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.. வழக்குப் பதிவு செய்ய சொன்னது அரசு தான்.. வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கு […]

கடந்த 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தமிழக அரசு ஒரு நபர் ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டது.. இந்த ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.. அதே போல் சென்னை உயர்நீதிமன்றம் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து உத்தரவிட்டது. இந்தக் குழுவும் […]

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி, புத்தாடைகள் மற்றும் பட்டாசுகள் வாங்குவதில் மக்கள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். பொதுவாக, தரமான மற்றும் மலிவு விலை வெடிகளை வாங்க வேண்டும் என்ற விருப்பத்துடன் பலர் சிவகாசியை நோக்கிப் படையெடுப்பது வழக்கம். ஆனால், தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு அந்த சிரமத்தைத் தவிர்க்கும் வகையில், அரசு கூட்டுறவு பண்டகச் சாலையிலேயே சிவகாசியில் தயாரிக்கப்படும் தரமான பட்டாசுகள் மிகக் குறைந்த விலையில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது, […]

கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் நேற்று சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து, தலைமறைவாக இருந்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோர் மீண்டும் […]

சென்னை திருவான்மியூரில் கடந்த ஆண்டு பரபரப்பை ஏற்படுத்திய வழக்கறிஞர் கௌதம் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய பிரமுகர் ஒருவர், அடையாறில் பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழிவாங்கும் நோக்கில் இந்தக் கொலை நடந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. கொலை செய்யப்பட்டவர் திமுக பிரமுகரும், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தவருமான குணசேகரன் ஆவார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் […]

இந்தியாவின் சாலை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் தீவிரமாக செயல்படும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI), இப்போது தூய்மைப் பணியிலும் ஒரு புரட்சிகரமான முயற்சியைக் கையில் எடுத்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் காணப்படும் பொதுக் கழிவறைகளின் சுகாதாரத் தரத்தை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம். வாகன ஓட்டிகள், பயணிகளை நேரடியாக இந்தப் பணியில் ஈடுபடுத்தும் ஒரு புதுமையான திட்டத்தை NHAI அறிவித்துள்ளது. அதாவது, சுகாதாரமற்ற கழிவறைகள் குறித்துப் புகார் அளிக்கும் […]