சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து, ரூ..74,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. 2025 ஆம் ஆண்டில் தங்க விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்க்த்தின் தேவை உயர்ந்துள்ளது. தங்கத்தின் தேவை […]

வருங்கால வைப்புநிதி நிறுவனத்தின் “நிதி உங்கள் அருகில்” மற்றும் “சுவிதா சமகம்” குறை தீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் மதுரை மண்டலத்துக்குட்பட்ட 6 மாவட்டங்களில் “நிதி உங்கள் அருகில்” மற்றும் இ.எஸ்.ஐ.சி -சுவிதா சமகம் இணைந்து 2025 ஆகஸ்ட் 28 அன்று காலை 9.00 மணிக்கு குறைதீர்க்கும் முகாமை நடத்துகின்றன. வருங்கால […]

புதிதாக கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் தனி வீடுகளுக்கு முத்திரை தீர்வை மற்றும் பதிவு கட்டணம் நிர்ணயம் செய்யும் வகையில் ஒவ்வொரு வகையான கட்டிடத்துக்கும் மதிப்பு நிர்ணயம் செய்துள்ளது தமிழக அரசு. அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்ட விரும்பும் கட்டுமான நிறுவனத்தினர், இடத்தை விலைக்கு வாங்கி, குடியிருப்பு கட்ட திட்டமிட்டு, அதன்பின் வாங்க வருவோருடன் கட்டுமான ஒப்பந்தம் செய்வது வழக்கம்.குடியிருப்பு வாங்க முன்வருவோரின் பெயர்களில் பத்திரப்பதிவு செய்யும்போது, நிலத்தின் பிரிக்கப்படாத பாக […]

பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெறும் அமைச்சுப் பணியாளர்களின் கல்வித் தகுதியை சரிபார்க்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியில் உள்ள 2 சதவீத காலியிடங்கள் அத்துறையின் அமைச்சுப் பணியாளர்களின் பதவி உயர்வு மூலமாக நிரப்பப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டு அமைச்சுப் பணியாளர்களுக்கு பட்டதாரி ஆசிரியர், தமிழ் ஆசிரியருக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி […]

சென்னை, பெங்களூரு, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகர்கோவில், திருச்சி, தஞ்சாவூர், சிதம்பரம், புதுச்சேரி, திண்டுக்கல், மணப்பாறை, ஓரியூர் மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய ஊர்களிலிருந்து வேளாங்கண்ணிக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இது குறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; ஆண்டுதோறும் வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாதா கோயில் திருவிழாவை யொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அந்த […]

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வையாபுரி என்ற இடத்தில் புதிதாக பெட்ரோல் நிலையம் திறக்கப்பட்டது. இந்த திறப்பு விழாவை ஒட்டி, பெட்ரோல் மற்றும் டீசல் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டது. அதன்படி, 2 லிட்டர் பெட்ரோல் அல்லது டீசல் வாங்கினால் 2 லிட்டர் இலவசம் என்றும், 5 லிட்டர் வாங்கினால் 2.5 லிட்டர் இலவசம் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த தகவல் அப்பகுதி முழுவதும் பரவியதால், இலவசமாக பெட்ரோல் […]

தமிழகத்தில் இன்று டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்; ஒடிசா – மேற்கு வங்க கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில், ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி வரும் ஆகஸ்ட் 25-ம் தேதி உருவாகக்கூடும். தமிழக பகுதிகளின் […]