கடந்த ஐந்து ஆண்டுகளாக தனது உறவினரை பலமுறை கருக்கலைப்பு செய்த குற்றச்சாட்டின் பேரில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். உமேஷ் என்பவர் மீது உறவினர் அளித்த புகாரின் பேரில் மகளிர் காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட பின்னர் அவர் தப்பி ஓடியதாக போலீசார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட நபர் தனது புகாரில், தங்கள் குடும்பத்திற்கு நிலத் தகராறு இருப்பதாகவும், தனது […]

கோவையில் அதிவிரைவு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஜமேஷா முபின் வீட்டின் அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு மேற் கொண்டு வருகின்றனர். சனிக்கிழமை இரவு 11.25 மணிக்கு ஜமேஷா முபின் வீட்டில் இருந்து அவர் உட்பட 5 பேர் மர்ம பொருளை தூக்கி செல்லும் காட்சிகள் வெளியாகியது. மேலும் முபின் வீட்டில் சோதனையிட்ட போது நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதற்குத் தேவையான பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியம், கந்தகம் போன்றவை […]

தமிழகத்தில் 21 மாவட்டத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, அரியலூர், கடலூர், நீலகிரி, கோயம்பத்தூர், திருப்பூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 27-ம் தேதி வரை […]

கோவை உக்கடத்தில் காரில் சிலிண்டர் வெடித்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவையில் நேற்று முன்தினம் நடந்த கார் வெடி விபத்து சம்பவம் தொடர்பாக உக்கடம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வெடிவிபத்தில் உயிரிழந்த நபர் ஜமேசா முபின் என்ற 25 வயதான இளைஞர் என்பது தெரியவந்தது. கார் வெடி விபத்தில் இறந்த ஜமேசா முபின் அவர் வந்த காரில் ஆணிகள், கோலிகுண்டு போன்றவை இருந்தது. ஜமேசா […]

தமிழகத்தில் அரசுக்கு முக்கிய வருவாயை ஈட்டி தரக்கூடிய துறைகளில் ஒன்று மிக முக்கியமானது டாஸ்மார்க் துறையாகும். இந்தத் துறையில் பண்டிகை நாட்களில் மட்டுமே அதிக அளவில் வசூல் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு எத்தனை கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகும் என அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அதற்கான விபரத்தை அரசு வெளியிட்டுள்ளது. கடந்தாண்டு தீபாவளியை ஒட்டி நவம்பர் 3 மற்றும் 4-ம் தேதி 2 […]

தீபாவளியை முன்னிட்டு பள்ளிகள்‌, கல்லூரிகள்‌ மற்றும்‌ அனைத்து நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இதன் பொருட்டு சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும்‌ மாணவர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்களுக்கு ஏதுவாக இன்று ஒரு நாள்‌ மட்டும்‌, தமிழ்நாடு முழுவதும்‌ உள்ள பள்ளிகள்‌, கல்லூரிகள்‌ மற்றும்‌ அனைத்துக்கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும்‌ வகையில்‌ 19.11.2022 அன்று பணி நாளாக அனுசரிக்கவும்‌ […]

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் கடந்த 2 நாட்களில் மட்டும் ரூ.464 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 22ஆம் தேதி அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் 45 கோடி ரூபாய்க்கு மதுவிற்பனை செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்ததாக திருச்சி மண்டலத்தில் 41 கோடி ரூபாய்க்கும், சேலம் மண்டலத்தில் 40 கோடி ரூபாய்க்கும், கோவை மண்டலத்தில் 39 கோடி ரூபாய்க்கும் மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளன. மேலும், சென்னை மண்டலத்தில் 38 […]

ஆரணியில் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்த மகனை ஆத்திரத்தில் அம்மிகல்லால் தாக்கி தந்தையே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் சுப்பிரமணி கோவில் தெருவைச் சேர்ந்தவர்கள் ஓட்டுநர் செந்தில்குமார்-உமாராணி தம்பதி. இவர்களுக்கு மதன் (19), அருண் (16) ஆகிய 2 மகன்களும் ஜீவிதா என்ற ஒரு மகளும் உள்ளனர். செந்தில்குமார் தனியார் பேருந்து நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவருடைய […]

இந்திய ராணுவத்தில் பட்டதாரிகளுக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அணுப்பலாம். Material Assistant பணிக்கு மொத்தமாக 418 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களின் கல்வி தகுதியாக டிப்ளமோ அல்லது ஏதாவது […]

வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று பேச கூடும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இன்று மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 100 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஒடிசா – மேற்கு வங்க கடலோரப் […]