இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ தனது நூற்றுக்கணக்கான விமானங்களை ரத்து செய்ததைத் தொடர்ந்து, நாடு முழுவதும் பல விமான நிலையங்களில் ஆயிரக்கணக்கான பயணிகள் சிக்கித் தவித்தனர்.. இந்த நிலையில் விமானப் பணியாளர்களுக்கான வாராந்திர ஓய்வு குறித்த தனது வழிமுறைகளை சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) வெள்ளிக்கிழமை திரும்பப் பெற்றது. தகுதிவாய்ந்த ஆணையத்தின் (CA) ஒப்புதலைத் தொடர்ந்து, முந்தைய உத்தரவு உடனடியாக அமலுக்கு வரும் வகையில் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
இந்தியாவில் திருமணம் செய்வதற்குரிய சட்டப்பூர்வ வயதை (ஆணுக்கு 21, பெண்ணுக்கு 18) இன்னும் எட்டாத நிலையிலும், பரஸ்பர ஒப்புதலுடன் கூடிய வயது வந்த இருவரும் லிவ்-இன் உறவில் சேர்ந்து வாழலாம் என்று ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. ஒருவரின் அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய உரிமைகளை, அவர் திருமண வயதை எட்டவில்லை என்ற காரணத்துக்காக மறுக்க முடியாது என்றும் நீதிமன்றம் திட்டவட்டமாக கூறியுள்ளது. கோட்டாவைச் சேர்ந்த 18 வயது […]
கடந்த செவ்வாய் கிழமை முதல் நாடு முழுவதும் உள்ள பல விமான நிலையங்களில் குழப்பம் தொடரும் நிலையில், இன்னும் இன்டிகோ விமான சேவையைச் சுற்றி செயல்பாட்டு பிரச்சினைகள் நீடித்து வரும் காரணத்தால், கடந்த 3 நாட்களில் 1,000-க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை, சமூக வலைதளங்களில் வந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களில், இண்டிகோ கவுண்டர்களின் முன் நீண்ட வரிசைகள் காணப்பட்டன.பல பயணிகள் தங்கள் விமானங்கள் தாமதமாவது, ரத்து […]
இந்தியாவின் மிகப்பெரிய விமானச் சேவை நிறுவனமான இண்டிகோ (IndiGo), கடந்த நான்கு நாட்களாகத் தொடரும் விமான ரத்து மற்றும் தாமதங்களால் பயணிகளைப் பெரும் சிரமத்திற்கு ஆளாக்கியுள்ளது. இன்றும் (வெள்ளிக்கிழமை) டெல்லி மற்றும் திருவனந்தபுரம் உட்பட பல முக்கிய விமான நிலையங்களில் இருந்து புனே போன்ற நகரங்களுக்குச் செல்லவிருந்த 6E 2343, 6E 2471 மற்றும் 6E 6692 உள்ளிட்ட சுமார் 400 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இண்டிகோவின் இந்தச் செயல்பாட்டுச் […]
ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடினின் இரண்டு நாள் இந்திய பயணத்தின் போது பிரதமர் மோடி அவருக்கு பகவத் கீதையின் பிரதியை அவருக்கு பரிசளித்தார். ஜனாதிபதி புடினுக்கு வழங்கப்பட்ட பிரதி ரஷ்ய மொழியில் எழுதப்பட்டுள்ளது. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி “ரஷ்ய மொழியில் கீதையின் பிரதியை ஜனாதிபதி புடினுக்கு வழங்கினேன். கீதையின் போதனைகள் உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கானவர்களுக்கு உத்வேகம் அளிக்கின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.. விமான […]
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நந்தமூரி பாலகிருஷ்ணா நடிப்பில், இயக்குநர் போயபதி ஶ்ரீனுவின் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த ‘அகண்டா 2’ திரைப்படம், இன்று (டிசம்பர் 5) வெளியாவதாக இருந்த நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பு நிறுவனமான 14 ரீல்ஸ் நிறுவனம் இந்தத் தகவலை உறுதி செய்துள்ளது. “கனத்த இதயத்துடன் இந்தப் painful செய்தியை அறிவிக்கிறோம். தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக, அகண்டா 2 திரைப்படம் […]
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்குச் சரிந்து, தற்போது ரூ.90.43 என்ற உச்சத்தைத் தொட்டிருப்பது இந்தியப் பொருளாதாரத்தில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் ரூபாயின் மதிப்பு பல மடங்கு வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில், இந்த சமீபத்திய சரிவுக்குப் பின்னால் உள்ள காரணங்கள் குறித்துப் பொருளாதார வல்லுநர்கள் விவாதித்து வருகின்றனர். டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு எப்படி வீழ்ச்சி அடைந்துள்ளது என்பதை பின்வரும் […]
தேசிய கல்விக்கொள்கை யின் பரிந்துரைகளின்படி, உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள மாணவர்கள் மேலும் ஒரு இந்தியமொழியை கற்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்’ என பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் யுஜிசி செயலர் அனுப்பிய சுற்றறிக்கையில்; மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை–2020, தேசிய ஒருமைப்பாடு, அனைவருக்கான வளர்ச்சி ஆகியவற்றுக்காக, பன்மொழி திறன் அவசியத்தை வலியுறுத்தி வருகிறது. அதன் ஒருபகுதியாக அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் ‘மேலும் ஒரு இந்திய […]
நடப்பு நிதியாண்டில் உஜ்வாலா திட்டத்தின் கீழ் 25 லட்சம் கூடுதல் சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது மத்திய அரசு உஜ்வாலா திட்டம் (பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா – PMUY) என்பது, இந்தியாவில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்களில் உள்ள பெண்களுக்கு, இலவச சமையல் எரிவாயு (LPG) இணைப்புகளை வழங்குவதற்காக இந்திய அரசால் தொடங்கப்பட்ட ஒரு திட்டமாகும், இதன் முக்கிய நோக்கம், சுத்தமான சமையல் […]
நாடு முழுவதும் புதிய சுங்கக்கட்டணம் முறை நாடு முழுவதும் அமலாகிறது என்ற சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.. மக்களவையில் கேள்வி நேரத்தில் பேசிய அவர் “ புதிய சுங்கக்கட்டண முறை தற்போது 10 இடங்களில் சோதனை முயற்சியாக தொடங்கப்பட்டுள்ளது.. இது ஒரு ஆண்டுக்குள் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும். இந்த புதிய முறையால், வாகனங்களை நிறுத்தி சுங்கக் கட்டணம் வசூலிக்கும் பழைய முறை முடிவுக்கு வரும். […]

