ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இன்று இந்தியா வருகை தந்துள்ளார்.. தனி விமானம் மூலம் இன்று மாலை புது தில்லியின் பாலம் விமான நிலையத்தில் தரையிறங்கினார்.. 4 ஆண்டுகளுக்குப் பிறகு புடின் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார்.. உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக வெளிநாட்டு பயணங்களை தவிர்த்து வந்த புடின் தற்போது இந்தியா வந்துள்ளார்.. 23வது ஆண்டு இந்தியா-ரஷ்யா உச்சிமாநாட்டிற்காக வருகை தந்துள்ள புடினை பிரதமர் நரேந்திர மோடி விமான […]

ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வர் அருகே உள்ள ஒரு சிறிய கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் பட்நாயக் (45). இவர், தனது குடும்பத்தின் 97 லட்சம் ரூபாய் கடன் சுமையை அடைப்பதற்காக துபாயில் பல ஆண்டுகளாகக் கடுமையாக உழைத்து வருகிறார். இவரது மனைவி உமா பட்நாயக் (45) மற்றும் மகள் பிரியங்கா (16) ஆகியோர் சொந்த ஊரில் வசித்து வந்தனர். கணவர் வெளிநாட்டில் இருந்ததால், வீட்டு வேலைகளுக்கு உதவ வேண்டி, உறவினர் மகனான […]

உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகரில், பெற்றோர் இல்லாமல் தவித்து வந்த 14 வயது சிறுமியை, சொந்த மாமாவே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முசாபர் நகரைச் சேர்ந்த 14 வயதுச் சிறுமியின் தாயார் சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், சிறுமியின் தந்தையும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். ஆதரவின்றித் தவித்து வந்த சிறுமி, வேறு வழியின்றித் தன்னுடைய உறவினரான […]

சவுதி அரேபியாவின் மதினாவிலிருந்து ஹைதராபாத் நோக்கி வந்த விமானத்தில் வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, மற்றொரு இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.. இந்த விமானம் ஷார்ஜாவில் இருந்து புறப்பட்டு ஹைதராபாத் செல்லும் வழியில் இருந்தது. ஆனால்,நடுத்தர வானில் வெடிகுண்டு மிரட்டல் தகவல் கிடைத்ததால், அது மும்பை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது என தகவல்கள் கூறுகின்றன. விமானம் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் […]

மத்திய ஒளிபரப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மக்களவையில் நடைபெற்ற விவாதத்தின்போது, போலி செய்திகள் மற்றும் டீப் ஃபேக் தொழில்நுட்பத்தால் ஏற்படும் அபாயங்கள் குறித்துக் கவலை தெரிவித்தார். போலி செய்திகள் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்குவதால், அவற்றைத் தடுக்கக் கடும் சட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகளைக் கொண்டு வருவது அவசர தேவை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசுகையில், “அரசியலமைப்புச் சட்டம் மற்றும் நாடாளுமன்றத்தில் […]

ரயில்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும்போது, உண்மையான பயணிகளுக்கு டிக்கெட் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், இந்தியன் ரயில்வே ஒரு முக்கிய பாதுகாப்பு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, இனி தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது ஓடிபி கட்டாயம் என்ற புதிய நடைமுறை அமலுக்கு வரவுள்ளது. நீண்ட தூரப் பயணங்களுக்குப் பெரும்பாலான மக்கள் ரயிலையே நம்பி உள்ளனர். குறிப்பாக பண்டிகை காலங்களில், முன்பதிவு தொடங்கிய சில நொடிகளிலேயே டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிடுகின்றன. […]

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் பல வழிகளில் மனிதர்களுக்கு உதவியாக இருந்தாலும், அதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திச் சைபர் கிரைம் மோசடிகள் தற்போது வேகமாக அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, ஒருவரின் குரலை அவருக்கே தெரியாமல் குளோனிங் செய்யும் தொழில்நுட்பம் மூலம் நடக்கும் நிதி மோசடிகள் இப்போது உச்சத்தில் உள்ளன. சமீபத்தில், ஹைதராபாத்தில் உள்ள 72 வயதான பாட்டி ஒருவர், இது போன்ற மோசடியில் சிக்கிப் பணத்தை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]

அனைத்து பான் மசாலா பொட்டலங்களிலும் சில்லறை விற்பனை விலையைக் குறிப்பிட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அனைத்து பான் மசாலா பொட்டலங்களிலும் சில்லறை விற்பனை விலையை கட்டாயம் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று நுகர்வோர் விவகாரத் துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கான சட்ட அளவீட்டு (பொட்டலப் பொருள்கள்) இரண்டாவது (திருத்தம்) விதிகள், 2025 அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தத் திருத்தப்பட்ட விதிகள் 2026 பிப்ரவரி 1 முதல் நடைமுறைக்கு வருகின்றன. 10 கிராம் அல்லது […]