மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற பாஜகவின் பயிற்சி முகாமில், கட்சி தலைவர்களின் சர்ச்சைக்குரிய பேச்சுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முக்கிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் நடந்த சிந்தூர் நிகழ்வைத் தொடர்ந்து, மத்தியப் பிரதேச அரசு அமைச்சர் விஜய் ஷா, இந்திய ராணுவத்தில் பணியாற்றும் கர்னல் சோபியா குரேஷியை “பயங்கரவாதியின் சகோதரி” என குறிப்பிட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து, பயிற்சி முகாமில் பங்கேற்ற அமித் ஷா, […]

உத்தரகாண்டில் டேராடூனில் இருந்து கேதர்நாத் சென்ற ஹெலிகாப்டர், கவுரிகுண்ட் வனப்பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகி இருக்கிறது. இந்த ஹெலிகாப்டரில் 7 பேர் பயணித்த நிலையில், 6 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சார் தம் என்று சொல்லப்படும் கேதர்நாத் யாத்திரையின் 4 புனித தலங்களில் ஒன்றுக்கு அருகில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த ஹெலிகாப்டர் அதிகாலையில் புறப்பட்ட நிலையில், குழந்தை உட்பட 6 பேர் பயணித்துள்ளனர். இந்த ஹெலிகாப்டர் கவுரிகுண்ட் […]

UPI இந்தியர்களின் அன்றாட வாழ்க்கையை மாற்றியுள்ளது, வழக்கமான பரிவர்த்தனைகளுக்கு பணத்தை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியத்தை நீக்கியுள்ளது. அதேபோல் எங்கும் எப்போதும் ஏடிஎம் தேடி அலையாமல் எளிதாக பொருட்களை வாங்குவதற்கு வழிவகுத்தது. UPI-ஐ மேற்பார்வையிடும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI), பயனர் அனுபவத்தை மேம்படுத்த தொடர்ந்து புதிய விதிகளை வெளியிடுகிறது. அந்தவகையில், இந்தியாவில் உள்ள முக்கியமான டிஜிட்டல் பில்லிங் செயலிகள், PhonePe, Google Pay மற்றும் Paytm ஆகியவற்றின் […]

மத்திய பிரதேசத்தில் தேடுதல் வேட்டையின்போது பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 4 நக்சல்கள் பலியாகினர். நாட்டிலிருந்து நக்சலைட்டுகளை ஒழிப்பதற்கான அனைத்து முயற்சிகளும் நடைபெற்று வரும் நிலையில், மத்தியப் பிரதேசத்தின் பாலகாட் மாவட்டத்தில் சனிக்கிழமை பாதுகாப்புப் படையினருடனான ஒரு பெரிய மோதலில் நான்கு நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் ஒரு ஆண் மற்றும் மூன்று பெண் நக்சலைட்டுகள் அடங்குவர். அவர்களிடமிருந்து ஒரு பதுக்கல் ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இப்பகுதியில் பலத்த மழை […]

குஜராத்தில் நடந்த விமான விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கையானது 270 ஆக அதிகரித்துள்ளதாகவும், டிஎன்ஏ சோதனையில் 11 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அகமதாபாத் அரசு மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குஜராத்தின் அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட போயிங் 788 ட்ரீம் லைனர் விமானம் 30 விநாடிகளிலேயே விபத்துக்குள்ளானது. மருத்துவ கல்லூரியின் விடுதியின் மீது விமானம் விழுந்து தீப்பிடித்ததில் விமானத்தில் இருந்தவர்கள் மட்டுமல்லாமல் […]

ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான விசாரணை முடிந்தால் தான் விபத்துக்கான உண்மையான காரணம் தெரிய வரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து குறித்து சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் இன்று ஊடகங்களுக்கு விளக்கம் அளித்தது.. உயிர் இழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தும், விபத்தை ஒரு சோகம் என்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு தனது உரையைத் தொடங்கினார். தொடர்ந்து […]

நீட் இளங்கலை தேர்வு முடிவுகளை தேசிய தேவு முகமை வெளியிட்டுள்ளது. நீட் இளங்கலை தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. தேசிய தேர்வு முகமை (NTA) நீட் இளங்கலை தேர்வு முடிவுகளை இன்று அறிவித்துள்ளது. மருத்துவ நுழைவுத் தேர்வில் கலந்து கொண்ட விண்ணப்பதாரர்கள் தங்கள் தகுதி நிலையை neet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சரிபார்க்கலாம். அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, இந்த ஆண்டு இளங்கலை NEET UG 2025-க்கு கிட்டத்தட்ட 23 லட்சம் […]