மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் குக்கி – மெய்தி இன மக்கள் இடையே கலவரம் வெடித்தது. இந்த சம்பவத்தின்போது சுமார் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கினர். மேலும், மணிப்பூரில் ட்ரோன்கள், சிறிய ரக விமானங்கள், வெடி மருந்து ராக்கெட்டுகளாலும் தாக்குதல் நடத்தப்பட்டு வந்தது. இதையடுத்து, அம்மாநில முதலமைச்சர் பைரன் சிங் பதவி விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து, மணிப்பூரில் குடியரசுத் தலைவர் […]

டெல்லியில் சாலையின் நடுவே ஆபத்தான முறையில் பைக் ஓட்டிய  இளைஞரை, போலீசார் கைது செய்து, அவருடைய பைக்கை பழைய இரும்பு கடைக்கு ‘பார்ட் பார்ட்டாக’ பிரித்துப் போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யமுனா விகார், கிழக்கு டெல்லி பகுதியில் நடந்த இந்த சம்பவம், சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. வீடியோவில், ஒரு இளைஞர் தன்னுடைய பைக்கில், ஒரு பேருந்தை ஓட்டும் டிரைவரை பயமுறுத்தும் வகையில், திடீரென அவரது கண்ணிமைக்கும் தூரத்தில் வந்து, […]

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி மற்றும் சோனம் என்ற தம்பதி மேகாலயாவை நோக்கி சென்ற ஹனிமூன் பயணம், தற்போது பெரும் மர்மமான வழக்காக மாறியுள்ளது. தம்பதியர் கடந்த மாதம் சில்லாங், சோஹ்ரா பகுதிகளில் ஹனிமூனுக்காக ஹோம் ஸ்டே விடுதிகளில் தங்கி இருந்தனர். மே 23 ஆம் தேதி அவர்கள் தங்கியிருந்த ரூமில் இருந்து செக் அவுட் செய்த பின், சில நிமிடங்களிலேயே அவர்கள் மாயமானது மிகப்பெரும் அதிர்ச்சியை […]

மத்திய சுகாதார அமைச்சகத்தின் சமீபத்திய தரவுகளின்படி, கடந்த இரண்டு நாட்களில் 769 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ள நிலையில், இந்தியாவில் செயலில் உள்ள கோவிட்-19 வழக்குகளின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 6,000 ஐத் தாண்டியது. தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் 6,133 செயலில் உள்ள கோவிட் வழக்குகள் உள்ளன, கடந்த 24 மணி நேரத்தில் ஆறு இறப்புகளை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. கேரளா தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலான செயலில் உள்ள வழக்குகளைப் பதிவு செய்துள்ளது, அதைத் […]

இந்தியா – பாகிஸ்தான் இடையே கடந்த மாதம் நடந்த ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற இராணுவ நடவடிக்கையின் போது, இந்திய விமானப்படை, S-400 வான் பாதுகாப்பு அமைப்புகள், மற்றும் தரையிலிருந்து ஏவப்படும் ஏவுகணைகள் பயன்படுத்தி 6 பாகிஸ்தான் விமானங்களை சுட்டு வீழ்த்தி, 4 முக்கிய ரேடார் மையங்களை அழித்தது என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கையில், இந்த தாக்குதல்களில் இந்தியா ரஃபேல் போர் விமானங்கள், தரையிலிருந்து […]

உயர் கல்வி நிறுவனங்களில் ஒரே நேரத்தில் இரு படிப்புகளைப் பயில்வது தொடர்பாக திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை யுஜிசி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக யுஜிசி செயலாளர் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில்; உயர் கல்வி நிறுவனங்களில் ஒரே நேரத்தில் இரு படிப்புகளைப் பயில்வது தொடர்பாக யுஜிசி சார்பில் சமீபத்தில் நடைபெற்ற 589-வது கூட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இவை ஜூன் 5-ம் தேதி முதல் நடைமுறைக்கு […]

இந்திய நகரங்களில் உள்ள பெரும்பாலான கலாச்சாரங்கள் மற்றும் வழக்கங்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால், கிராமங்களில் உள்ள வித்தியாசமான கலாச்சாரம் குறித்து பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலத்தில் பழங்குடியினர் மக்கள் திருமணம் செய்து கொள்ளாமல், லிவிங் ரிலேஷன் வாழும் முறை காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அப்படி, 70 ஆண்டுகளுக்கு மேல் லிவிங் முறையில் வாழ்ந்த ஒரு காதல் ஜோடிக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் […]

24 வயதுடைய வளர்ப்பு மகளை தந்தையே பல மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ஜலால் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 24 வயது இளம்பெண்ணை அவரது வளர்ப்பு தந்தையே பல மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் தொல்லை தாங்க முடியாததால், ஒருகட்டத்தில் தன்னுடைய தாயிடம் நடந்த விவரங்களை கூறி அழுதுள்ளார். இதைக்கேட்டு […]

இந்திய ரிசர்வ் வங்கி கடந்த சில வாரங்களுக்கு முன்பு தங்க நகைக்கடன் தொடர்பாக புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ரிசர்வ் வங்கி தற்போது ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வங்கிகள் அல்லாத நிறுவனங்களில் வழங்கப்படும் கடன்கள் குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் அரசுத் துறைகளில் […]

நாட்டில் ஆதார் கார்டு என்பது முக்கிய ஆவணமாக உள்ளது. சிம் கார்டு வாங்குவது முதல் வங்கிக் கணக்கு தொடங்குவது வரை என அனைத்திற்குமே ஆதார் கார்டு அவசியம் தேவைப்படுகிறது. மேலும், இந்த ஆதார் கார்டை வைத்து கடனும் உங்களால் வாங்கிக் கொள்ள முடியும். அது எப்படி என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம். அதாவது, ஆதார் கார்டை வைத்து உங்களால் ரூ.10,000 வரை கடன் பெற முடியும். அதுவும், ஒரு சில […]