தேசிய நெடுஞ்சாலைக் கட்டண (விகிதங்களை நிர்ணயித்தல் மற்றும் வசூலித்தல்) (மூன்றாவது திருத்தம்) விதிகள், 2025, வரும் நவம்பர் 15 முதல் நடைமுறைக்கு வருகிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்ட்டேக் இல்லாத பயனர்களிடையே டிஜிட்டல் முறையிலான கட்டணங்களை ஊக்குவிக்கவும், ரொக்கப் பரிவர்த்தனைகளை முற்றிலுமாக அகற்றும் நோக்கில் தேசிய நெடுஞ்சாலைக் கட்டண (விகிதங்களை நிர்ணயித்தல் மற்றும் வசூலித்தல்) விதிகள், 2008-ல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. புதிய விதியின்படி, செல்லுபடியாகும் மற்றும் செயல்படும் நிலையில் […]

தெலுங்கானாவில் மைர்மெகோபோபியா என்ற உளவியல் நிலையால் பாதிக்கப்பட்ட இளம்பெண், எறும்புகளுக்கு பயந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம் அமீன்பூர் நகராட்சி பகுதியில் உள்ள சர்வா ஹோம்ஸ் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். இவரது மனைவி மனிஷா(25). இவர்களுக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார். இந்தநிலையில், மனிஷாவுக்கு மிர்மெகோபோபியா என்ற ஒரு தீவிரமான உளவியல் நிலை இருந்தது, இது எறும்புகளைப் பற்றிய தாங்க முடியாத பயத்தால் […]

இந்திய ரயில்வே ரயிலில் நடைபெற்ற அதிர்ச்சிகரமான ஒரு சம்பவம் மீண்டும் இணையத்தில் வைரலாகியுள்ளது. ஒரு பயணி ரூ.110 என விலை நிர்ணயிக்கப்பட்ட உணவு தட்டிற்கு (Thali) ரூ.130 செலுத்த மறுத்ததால், உணவக (catering) ஊழியர்கள் அந்தப் பயணியை கொடூரமாக அடித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. வீடியோ பழையதாக இருந்தாலும், இந்த சம்பவம் பயணிகளிடையே கடும் கோபத்தையும், ரயில்வே உணவுப் பிரிவு முறைகேடுகள் மற்றும் பாதுகாப்பு குறித்த கேள்விகளையும் […]

இந்தியாவில் தினமும் கோடிக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்கிறார்கள் — சிலர் வேலைக்கு செல்கின்றனர், சிலர் சுற்றுலா செல்கின்றனர். கூட்டம் நிறைந்த சாதாரண பெட்டியிலிருந்து வசதியான ஏசி பெட்டிவரை, அனைத்து வகை பெட்டிகளிலும் எப்போதும் கூட்டம் நிறைந்ததாகவே கூறப்படுகிறது.. இந்திய ரயில்வே தினமும் ஆயிரக்கணக்கான ரயில்களை இயக்கி நாட்டின் ஒவ்வொரு மூலையையும் இணைக்கிறது. ஆனால் இரவில் ரயிலில் பயணம் செய்யும் போது சிறிய தவறுகள் கூட பெரிய விளைவுகளை ஏற்படுத்தலாம். […]

ராஜஸ்தான் மாநிலம் டோங்க் மாவட்டத்தில் உள்ள துனி பகுதியில் ஒரு தனியார் விடுதியின் உரிமையாளர் 10 வயது சிறுமியை ஒரு மாதம் முழுவதும் கொடூரமாக தாக்கி, பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின்படி, கடந்த ஆண்டு ஜூலை மாதம், தங்களது மகளையும் மகனையும் துனி பகுதியில் இயங்கி வரும் ஒரு தனியார் விடுதியில் படிக்கச் சேர்த்துள்ளனர். இந்த விடுதியை நடத்திய உரிமையாளர், […]

சட்டவிரோத ஆன்லைன் பந்தய தளங்கள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, அமலாக்கத்துறை (ED) முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ் ரெய்னா மற்றும் சிகர் தவான் ஆகியோருக்குச் சொந்தமான ரூ.11.14 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கியுள்ளது. இந்த முடக்கப்பட்ட சொத்துகளில், ரெய்னா பெயரில் ரூ.6.64 கோடி மதிப்பிலான மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் மற்றும் தவானுக்குச் சொந்தமான ரூ.4.5 கோடி மதிப்பிலான நிலச் சொத்தும் அடங்கும். ED வெளியிட்ட அறிக்கையில், “இந்த […]

பீஹார் சட்டசபைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து வரும் நிலையில் போது, லகிசரை தொகுதியில் பதற்றம் நிலவியது.. அந்தத் தொகுதியில் போட்டியிடும் துணை முதல்வர் மற்றும் பாஜக வேட்பாளர் விஜய் குமார் சின்ஹா காரின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.. இதனால் அந்தப்பகுதியில் பரபரப்பு நிலவியது. பாதுகாப்புப் படையினர் விரைந்து வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர். வாக்குச் சாவடியில் நடந்த தாக்குதலை “துரதிர்ஷ்டவசமானது” என்று சின்ஹா தெரிவித்தார். […]

2024 ஆம் ஆண்டில் உலகளவில் ராணுவச் செலவுகள் மிகுந்த அளவில் உயர்ந்துள்ளன. இதற்குக் காரணமாக அரசியல் பதற்றம், பிராந்திய மோதல்கள் மற்றும் அதிகார சமநிலை மாற்றங்கள் குறிப்பிடப்படுகின்றன. இண்டர்நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஃபார் ஸ்ட்ராடஜிக் ஸ்டடீஸ் (IISS) வெளியிட்ட அறிக்கையின்படி, பல பெரிய நாடுகள் தங்களின் நவீன போர் திறன்களை மேம்படுத்துவதற்காக பாதுகாப்பு நிதியை அதிகரித்துள்ளன. இது தொழில்நுட்ப அடிப்படையிலான ஆயுதங்கள், விண்வெளி மற்றும் சைபர் பாதுகாப்பு, எல்லை பாதுகாப்பு, மற்றும் […]

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் கடற்கரைப் பகுதியில் பாலியல் வன்கொடுமை, பணம் பறிப்பு போன்ற குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதை தடுக்க, சீனியர் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் கடலோரப் போலீஸார் ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஆண்டு கடற்கரைப் பகுதியில் நடந்த ஒரு பாலியல் அத்துமீறல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட காவலர் நிரந்தரமாகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தின் பின்னணி […]

கேரளா சின்னத்திரை ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான நடிகையும், ‘ஸ்டார் மேஜிக்’ கேம் ஷோ போட்டியாளருமான ஜஸீலா, தனது முன்னாள் காதலன் மீது முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் சமூக ஊடகங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. நீதி, ஆதரவு மற்றும் வழிகாட்டுதல் தேவைப்படுவதாக கூறி, தான் கடந்து வந்த சோகமான அனுபவத்தை விளக்கி அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள நீண்ட பதிவு பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஜஸீலா தனது பதிவில், “நான் பரிதாபத்திற்காக இந்தப் பதிவை […]