பீகார் சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் போது நிகழ்ந்த ஒரு நெகிழ்ச்சியான தருணம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அரரியா பகுதியில் பிரச்சாரம் செய்யும் போது ஒரு சிறுவனுடன் நடந்த உரையாடலில் ஈடுபட்ட காட்சி தான் இதற்கு காரணம். அந்த வீடியோவில், ராகுல் காந்தி கூட்டத்தில் நடந்து செல்லும்போது, ஒரு சிறுவன் அவரை அணுகி கைகுலுக்குகிறான். பிறகு “நீங்கள் எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள், […]

பீகார் மாநிலம் ஷிவான் மாவட்டத்தை சேர்ந்த முகமது இஸ்ரேல் அக்பர் அலி அன்சாரி என்ற சமீர் பிஹாரி (சமீர்) என்ற கட்டிட தொழிலாளி, கள்ளக்காதல் விவகாரம் காரணமாக தன் மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலனால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீர் பிஹாரி, அவரது மனைவி ரூபி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் கடந்த 5 ஆண்டுகளாக அகமதாபாத்தில் உள்ள அஹமதி ரோ என்ற பகுதியில் வசித்து வந்துள்ளார். […]

2025 ஜூன் 12-ம் தேதி 250-க்கும் மேற்பட்டோரின் உயிரைப் பறித்த ஏர் இந்தியா விமான விபத்தில், விமானிகள் மீது எந்தவித குற்றச்சாட்டும் சுமத்த முடியாது என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெளிவாகக் கூறியுள்ளது. இந்த வழக்கில், விபத்தில் உயிரிழந்த விமானி கேப்டன் சுமித் சபர்வாலின் தந்தை புஷ்கராஜ் சபர்வால் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க நீதிமன்றம் ஒப்புக்கொண்டது. அவர், இந்த விபத்துக்கான விசாரணை நீதிமன்ற கண்காணிப்பில் நடக்க வேண்டும் என்று கோரிக்கை […]

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் (IGIA) வெள்ளிக்கிழமை காலை 150க்கும் மேற்பட்ட விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு (ATC) அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். என்ன கோளாறு? அதிகாரிகள் கூறுகையில், “Automatic Message Switching System (AMSS)” எனப்படும் அமைப்பில் ஏற்பட்ட கோளாறே இதற்குக் காரணம். இது, விமான புறப்பாடு தொடர்பான முக்கிய தரவுகளை “Auto […]

தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம் நவம்பர் 7 இன்று கடைபிடிக்கப்படுகிறது. தெரிந்தோ தெரியாமலோ, சிவப்பு இறைச்சி, சர்க்கரை சார்ந்த பானங்கள், ரொட்டி போன்ற சில உணவுகளை நாம் உட்கொள்கிறோம், அவை புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கின்றன. புற்றுநோய் ஒரு தீவிரமான நோய். சரியான நேரத்தில் கண்டறியப்படாவிட்டால், அது உயிருக்கு ஆபத்தானதாக இருக்கலாம். கடந்த காலங்களை விட இன்று புற்றுநோய் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்குக் காரணம், சில உணவுகளை உட்கொள்வது, […]

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கணக்கிட தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி (Per Capita GDP) ஒரு முக்கிய அளவுகோலாக உள்ளது. இது, ஒரு மாவட்டத்தின் மொத்தப் பொருளாதார உற்பத்தியை மக்கள் தொகையால் வகுப்பதன் மூலம் கணக்கிடப்படுகிறது. சமீபத்தில் வெளியான 2024–25 பொருளாதாரக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் அதிக தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி கொண்ட முதல் 10 மாவட்டங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முதலிடத்தில் ரங்கா ரெட்டி : தெலங்கானாவின் ரங்கா […]

இந்தியாவின் பரபரப்பான நிதித் தலைநகரான மும்பை, 2025 ஆம் ஆண்டிற்கான ஆசியாவின் மகிழ்ச்சியான நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கலாச்சாரம், உணவு, இரவு வாழ்க்கை மற்றும் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தின் அடிப்படையில் நகரங்களை மதிப்பீடு செய்த சமீபத்திய டைம் அவுட் கணக்கெடுப்பிலிருந்து இந்த தரவரிசை வந்துள்ளது. மும்பையைத் தொடர்ந்து, பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்தன. ஆசியாவின் முதல் ஐந்து மகிழ்ச்சியான நகரங்களில் தாய்லாந்தின் சியாங் மாய் […]

இனிமையான குரலால் பல ஆண்டுகள் இந்தி திரையுலகில் கொடிகட்டிப் பறந்த பிரபல பின்னணி பாடகி மற்றும் நடிகை சுலக்ஷனா பண்டிட், மும்பையில் நேற்று (நவ.6) காலமானார். நீண்ட நாட்களாக உடல்நலம் சரியில்லாமல் இருந்த அவர், தனது 71-வது வயதில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது மறைவு பாலிவுட் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இசை குடும்பத்தின் வாரிசு : சுலக்ஷனா பண்டிட், மிகச் சிறந்த இசைக் குடும்பப் பின்னணியை கொண்டவர். உலகப் […]

அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ பட்டம் இல்லாமல் பிசியோதெரபிஸ்டுகள் (physiotherapists) மற்றும் தொழில் நுட்ப சிகிச்சையாளர்(Occupational Therapists) டாக்டர் என்ற பட்டத்தை பயன்படுத்த முடியாது என்று கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சுகாதார அமைப்பிற்குள் பிசியோதெரபிஸ்டுகள் மற்றும் தொழில் சிகிச்சையாளர்கள் ஒரு துணைப் பணிக்கு மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று உத்தரவிடுமாறுஇந்திய உடல் மருத்துவம் மற்றும் மறுவாழ்வு சங்கம் (IAPMR) மனு தாக்கல் செய்தது. மேலும், அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ பட்டம் இல்லாமல் இந்த நிபுணர்கள் “டாக்டர்” […]