மேகாலயாவிற்கு தேனிலவுக்கு சென்ற ராஜா ரகுவன்ஷி என்பவரை அவரது மனைவி சோனம் கொலை செய்த சம்பவத்தை போன்று தெலுங்கானாவிலும் மற்றொரு பயங்கர திட்டமிட்ட கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருமணமாகி ஒரே மாதத்தில் தேதேஸ்வர் என்ற இளைஞரை அவரது மனைவி ஐஸ்வர்யா தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்த பின்னணி குறித்து பார்க்கலாம். தெலுங்கானா மாநிலம் ஜோகுலம்பா கட்வால் மாவட்டத்தை சேர்ந்தவர் தேஜஸ்வர் (வயது 32) தனியார் […]

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஆறு மாதங்களுக்குப் பிறகு ஜூலை முதல் வாரத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் முக்கிய வரி விகித மாற்றங்கள் குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக 12% ஜிஎஸ்டி வரி அடுக்கை நீக்குவது அல்லது குறைப்பது தொடர்பான விவாதம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி, வருமான வரி மற்றும் சுங்கத் துறைகளின் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். […]

தேசிய குற்றப் பதிவுப் பணியகம் (NCRB) பகுப்பாய்வின்படி, கடந்த இரண்டு தசாப்தங்களாக இந்திய இளைஞர்களிடையே தற்கொலை தான் இறப்புக்கான இரண்டாவது முக்கிய காரணமாக இருந்து வருகிறது. 2020–2022 காலக்கட்டத்தில் மட்டும் தற்கொலைகள் 17.1% இளம் மரணங்களுக்குக் காரணமாக இருக்கின்றன. இதில் சாலை விபத்துகள் முதல் இடத்தையும் தக்கவைத்துள்ளன. ஆனால், நாட்டின் மொத்த இறப்புகளில் தற்கொலை விகிதம் வெறும் 5% மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது. உலகளவில், இளைஞர்களின் மரணத்திற்கு மூன்றாவது பொதுவான […]

இந்திய விமானப்படை அக்னிவீர் விமான ஆட்சேர்ப்பு 2025க்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பங்கள் ஜூலை 11 முதல் தொடங்கும் மற்றும் தேர்வு செப்டம்பர் 25 அன்று நடைபெறும். இந்திய விமானப்படையில் சேர வேண்டும் என்று கனவு காணும் இளைஞர்களுக்கு ஒரு பெரிய செய்தி உள்ளது. அக்னிபத் திட்டத்தின் கீழ் அக்னிவீர் ஏர் இன்டேக் 1/2026க்கான ஆட்சேர்ப்பு செயல்முறை தொடங்குவதாக விமானப்படை அறிவித்துள்ளது. இதன் கீழ், விண்ணப்ப செயல்முறை ஜூலை 11 முதல் […]

கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. மேலும், நாளை மற்றும் நாளை மறுநாள் வரை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், மலப்புரம், வயநாடு மாவட்டங்களுக்கும் நாளை இடுக்கி, கோட்டயம், பத்தனம்திட்டா, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணுார் மாவட்டங்களுக்கும் கன மழைக்கான ‘ ஆரஞ்ச் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. இன்று திருவனந்தபுரம், […]

“மொழி என்பது வெறும் தகவல் பரிமாற்ற சாதனமல்ல; அது ஒரு நாட்டின் ஆன்மா என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும், அலுவல் மொழித்துறையின் பொன்விழா கொண்டாட்டத்தில் அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, “எந்தவொரு வெளிநாட்டு மொழிகளுக்கு எதிர்ப்பு இல்லை. ஆனால், நமது நோக்கம் என்னவென்றால் நமது சொந்த மொழிகளில் சிந்திக்கவும், உரையாடவும், பெருமைப்படுத்தவும் வேண்டும் என்பதே […]

நோவோ நார்டிஸ்க் (Novo Nordisk) நிறுவனம், உடல் எடை குறைக்கும் மருந்தான Wegovy (semaglutide)-வை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை (FDA) நான்கு ஆண்டுகளுக்கு முன் அனுமதி வழங்கியதும், அமெரிக்க நிறுவனமான, Eli Lilly நிறுவனம் தனது Mounjaro மருந்தை கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்தநிலையில், டென்மார்க்கைச் சேர்ந்த மருந்து நிறுவனமான நோவோ நார்டிஸ்க் (Novo Nordisk), உடல் எடையை குறைக்கும் மருந்தான […]

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி அதன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எஸ்பிஐ வங்கியின் நெட் பேங்கிங் சேவை சில நாட்களுக்கு தடைபடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் எஸ்பிஐயின் வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட நேரத்தில் நெட் பேங்கிங் தொடர்பான சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும். எஸ்பிஐ நெட் பேங்கிங் சேவை எஸ்பிஐ தனது வலைத்தளத்தில் இந்தத் தகவலைப் பகிர்ந்து கொண்டுள்ளது. அதன்படி, வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட […]

இன்று ஜம்மு காஷ்மீரில் நடந்த என்கவுண்ட்டரில் 4 ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரிடம் சிக்கியிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை ஏற்பட்டது. ஆபரேஷன் பிஹாலி என்ற குறியீட்டு பெயரிடப்பட்ட இந்த என்கவுண்டர் நடந்து வருவதாக இந்திய ராணும் தெரிவித்திருந்தது. ராணுவம் மற்றும் காவல்துறையினரின் கூட்டு நடவடிக்கையின் இந்த துப்பாக்கிச்சூடு ஏற்பட்டதாக கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் உதம்பூர் மாவட்டத்தில் […]