ரூ.20 க்கு குறைவான விலை கொண்ட சிகரெட் லைட்டர்களின் இறக்குமதியை மத்திய அரசு தடை செய்துள்ளது. இது குறித்து வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (டிஜிஎஃப்டி) வெளியிட்ட அறிவிப்பில் சிகரெட் லைட்டர்களின் இறக்குமதிக் கொள்கை விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இதுவரை இறக்குமதி இலவசம் என்ற கொள்கை மாற்றியமைக்கப்பட்டு, ரூ.20 க்கு குறைவான விலை கொண்ட சிகரெட் லைட்டர்களின் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரு லைட்டரின் சிஐஎஃப் […]

தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றம் கண்டுள்ளதால் நடுத்தர வாசிகள் அவதியடைந்துள்ளனர். நாடு முழுவதும் தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு போன்ற அத்தியாவசிய காய்கறிகளின் விலையும் அரிசி, கோதுமை, துவரம் பருப்பு ஆகியவற்றின் விலையும் கடந்த ஒரு மாதத்தில் கடுமையாக உயர்ந்துள்ளன. இதனால் ஏழை மக்கள் மற்றும் நடுத்தர குடும்ப மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொள்முதல் விலை உயர்ந்துள்ளதால் சிறிய அளவிலான டீக்கடைகள் மற்றும் சிறு அளவிலான உணவகங்கள் நடத்துபவர்கள் […]

ரயில்களில் ஒவ்வொரு பயணியும் 2 சீல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை எடுத்துச் செல்ல டெல்லி மெட்ரோ நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. டெல்லி மெட்ரோ ரயில் 20 ஆண்டுகளில் நகரத்தின் உயிர்நாடியாக மாறியுள்ளது , போக்குவரத்துக்கு மிகவும் வசதியான வழிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்நிலையில், ஒரு நபர் 2 சீல் வைக்கப்பட்ட மது பாட்டில்களை ரயிலில் எடுத்து செல்லலாம் என்று டெல்லி மெட்ரோ நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. ஆனால், பயணத்தின்போது பயணிகளின் ஆவணங்களை […]

மத்திய அரசின் உத்தரவை பின்பற்றாத ட்விட்டருக்கு ரூ.50 லட்சம் அபராதம் விதித்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் தடை உத்தரவுகளை எதிர்த்து மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டர் தாக்கல் செய்த மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கடந்த 2021-2022ம் ஆண்டுக்கு இடையில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY), சில ட்வீட்கள் மற்றும் கணக்குகளை முடக்குவதற்கு ட்விட்டருக்கு உத்தரவிட்டது. ஆனால், நிறுவனம் மத்திய அரசின் […]

ஆதாருடன் பான் கார்டை இணைப்பதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது. இணைக்காத பான் கார்டுகள் இன்றுமுதல் செல்லாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியர்களின் தனிப்பட்ட அடையாளமாக இருக்கும் ஆதார் எண்ணை குடிமக்களின் முக்கியமான ஆவணங்களுடன் இணைப்பதை கட்டாயமாக்கியுள்ளது மத்திய அரசு. அதன்படி குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பான் கார்டு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். இந்தியாவில் வரி ஏய்ப்பை தடுக்கும் விதமாக பான் கார்டுடன் […]

திருமணமான ஆண்களின் தற்கொலைகள் குறித்து ஆய்வு செய்து, தேசிய ஆணையம் போன்ற ஒரு மன்றத்தை அமைப்பது தொடர்பான மனுவை உச்சநீதிமன்றம் ஜூலை 3-ஆம் தேதி விசாரிக்கிறது. உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் மகேஷ்குமார் திவாரி என்பவர் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தகவல்படி, கடந்த 2021-ம் ஆண்டு, 1 லட்சத்து 64 ஆயிரம் பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அவர்களில் 81 ஆயிரம் பேர் […]

கர்நாடக மாநிலத்தில் அரசுத் துறை பணியாளர்கள் ஊழல் செய்வதை தடுக்கும் நோக்கில் லோக் ஆயுக்தாவின் லஞ்ச ஒழிப்புத்துறை இயங்கி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் இந்த லோக் ஆயுக்தா பிரிவு காவல்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். சுமார் 62 இடங்களில் 15 அரசு அதிகாரிகள் குறிவைக்கப்பட்டு நடத்தப்பட்ட சோதனையில் பல ஊழல் முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்தது. குறிப்பாக, பெங்களூரு கே.ஆர்.புரா தாசில்தார் அஜித் ராய் என்பவருக்கு தொடர்பான இடங்களில் […]

தெலங்கானா மாநிலம் சூர்யா பேட்டை பகுதியில் சந்தோஷ் என்ற இளைஞரை வழிமறித்த 3 பேர், அவரை மாறி மாறி கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றுள்ளனர். பின்னர், 3 பேரில் ஒருவர் சந்தோஷின் தலையில் கல்லை போட்டு கொலை செய்ய முயன்றுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர். பொதுமக்கள் ஒன்று கூடியதை அடுத்து கொலை முயற்சியில் ஈடுபட்ட 3 பேரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இதுகுறித்து […]

மணிப்பூருக்கு இரண்டு நாள் பயணமாக சென்றுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ஒத்த கருத்துடைய கட்சி தலைவர்களை சந்தித்து பேசச உள்ளார். ஐக்கிய நாகா கவுன்சில் (UNC) தலைவர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் உறுப்பினர்கள் ஆகியோரை இம்பாலில் உள்ள விடுதியில் ராகுல் காந்தி இன்று சந்திக்க உள்ளதாக மணிப்பூர் காங்கிரஸ் தலைவர் கெய்ஷாம் மேகசந்திரா தெரிவித்துள்ளார். முன்னதாக, ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து அவர்களின் கேள்விக்கு பதில் […]

உத்திரபிரதேச மாநிலம் உன்னாவோவில் காவல் அதிகாரியாக பணியாற்றுபவர் ரமேஷ் சந்திர சஹானி. இவர் காவல் நிலைய பொறுப்பாளராக பணியாற்று வந்துள்ளார். இவர் தனது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட செல்ஃபியே இவருக்கு எதிராக மாறியுள்ளது. அந்த செல்ஃபியில், தனது வீட்டில் கட்டிலில் தனது மனைவி மற்றும் குழந்தைகள் சூழ உட்கார்ந்து கொண்டு, நடுவில் 500 ரூபாய் தாள்களை பரப்பிவைத்துள்ளார் அவர். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது. அதைத்தொடர்ந்து அவர் மேல் நடவடிக்கை […]