இந்திய தேர்தல் ஆணையம் (ECI), தேர்தல் முறையில் ஒழுங்கு மற்றும் பொறுப்புணர்வு கொண்டு வரும் நோக்கில், இந்திய முழுவதும் அல்லது சட்டப்பூர்வ கடமைகளை நிறைவேற்றாததற்காக, 334 பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை (RUPPS) தேர்தல் ஆணையம் சனிக்கிழமை பட்டியலிலிருந்து நீக்கியுள்ளது. இந்த நடவடிக்கையால் தமிழ்நாட்டை சேர்ந்த 22 ககட்சிகளும் தடை செய்யப்பட்டுள்ளது. இக்கட்சிகள் கடந்த 6 ஆண்டுகளில் எந்தவொரு தேர்தலிலும் பங்கேற்காததுடன், தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட முகவரிகளில் அவற்றின் […]

பாமக நிறுவனர் ராமதாஸ் கட்சி தலைவர் அன்புமணி இடையே மோதல் போக்கு உச்சத்தை எட்டி உள்ளது. இருவரும் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர்.. கட்சி நிர்வாகிகளை நீக்கியும், நியமித்தும் இருவரும் மாறி மாறி அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.. இந்த நிலையில் அன்புமணி தலைமையில் மாமல்லபுரத்தில் இன்று பாமகவின் பொதுக்குழு நடைபெற்றது.. ராமதாஸ் இல்லாமல் முதல் முறையாக நடக்கும் கூட்டம் இதுவாகும்.. பொதுக்குழு கூட்ட மேடையில் அன்புமணி உட்பட 40 பேருக்கு இருக்கைகள் […]

ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்கி வரும் பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.128.43 கோடி ஊக்கத்தொகை வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி கடந்த 05.11.2022 முதல் ஆவின் பால் கொள்முதல் விலை பசும்பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.32/-லிருந்து ரூ.35/-ஆகவும், எருமைப் பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.41/-லிருந்து ரூ.44/- ஆகவும் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. பால் உற்பத்தியாளர்களிடையே கறவை […]

சென்னை மாநகராட்சியில் போலி வாக்காளர்களால் தான் திமுக வெற்றி பெறுகிறது. மாநகராட்சி தேர்தலில் கள்ள ஓட்டு போட முயன்றவரை ஜெயக்குமார் பிடித்துக் கொடுத்தார்; ஆர்.கே.நகர், பெரம்பூர் தொகுதிகளில் அதிமுகவின் முயற்சியால் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். ஆட்சியில் இருக்கும் திமுக தான் போலி வாக்காளர்களை சேர்ப்பதில் மும்முரமாக உள்ளது என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரப் பயணத்தில் […]

சென்னையில் தமிழகத்தின் மாநில கல்விக் கொள்கையை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.. துணைவேந்தர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோரின் கருத்துகளை கேட்டு கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.. நீட் தேர்வு கூடாது, கல்வி மாநில பட்டியலுக்கு வர வேண்டும், தொடக்க நிலை முதல் உயர்கல்வி வரை தமிழ் தான் முதன்மை மொழி, ஒவ்வொரு கல்லூரியிலும் ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.. இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் […]

பீகார் வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து எந்த அரசியல் கட்சியும் இதுவரை ஆட்சேபம் தெரிவிக்கவில்லை என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மேற்கொள்ளப்பட்டு ஆகஸ்ட் 7-ம் தேதி அன்று வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து இதுவரை (ஆகஸ்ட் 7 காலை 10 மணி வரை) எந்தவொரு அரசியல் கட்சியும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை என்றும், உரிமை கோரல் தொடர்பான எவ்வித மனுவும் […]