சேலம் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு மீதான பரிசீலனை, நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  நாடாளுமன்ற தேர்தல், தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில், வேட்புமனு மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது. இந்நிலையில், சேலம் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  வேட்பாளராக போட்டியிடுபவருக்கு இரண்டு இடங்களில் வாக்குரிமை இருப்பது உறுதி செய்யப்பட்டால், மக்கள் […]

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் 6 இடங்களில் மட்டும் பேசி விட்டு பாஜக வேட்பாளர் ராதிகா சென்னைக்கு புறப்பட்டார். கடந்த 2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சமத்துவ மக்கள் கட்சியை சமீபத்தில் பாஜகவில் இணைத்தார் சரத்குமார். அதிமுகவில் இருந்து 2007ஆம் ஆண்டு விலகிய அவர் தனியாகச் சமத்துவ மக்கள் கட்சியைத் தொடங்கினார். சுமார் 17 ஆண்டுகளாகத் அரசியலில் இருந்த சமத்துவ மக்கள் கட்சியின் பயணம் ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்டது. இதையடுத்து, பாஜகவின் விருதுநகர் […]

இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக ஏப்ரல் 19 முதல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. தமிழ்நாடு , புதுச்சேரியில் நேற்றுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்த நிலையில், இன்று 12 மாநிலங்களுக்கான இரண்டாம் கட்ட வேட்பு மனுத் தாக்கல் நடைபெற்று வருகிறது. பாஜகவை பொறுத்த வரை மக்கள் தலைவர்கள், திரை பிரபலங்கள் என புத்தம் புது வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். தமிழிசை சௌந்தரராஜன் கூட, தனது ஆளுனர் பதவியை […]

பிரதமரோடு சிரித்து சிரித்து பேசிவிட்டு எங்களை பார்த்து முதல்வர் கள்ளக் கூட்டணி என சொல்கிறார் சிவாஜி கணேசனையே நடிப்பில் மிஞ்சி விட்டார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் என நெல்லையில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 18வது மக்களவைக்கான பொதுத் தேர்தல் 2024, ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறும். தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. […]

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சமூக வலைத்தளங்களில் ஆட்டுக்குட்டி என்று கிண்டலடித்து கூறுவர். இந்நிலையில் ஆட்டுக்குட்டி, பிரியாணி போன்றவையே கையில் எடுக்கல சமைக்கத்தான் போறேன் என்று அமைச்சர் டி.ஆர்.பி ராஜா கூறியுள்ளார். 18வது மக்களவைக்கான பொதுத் தேர்தல் 2024, ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறும். தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, […]

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தமிழ்நாட்டு மக்களுக்கு நல்ல திட்டங்களை வகுத்து செயல்படுத்தினால், அவரோடு இணைந்து பணியாற்ற தயாராக உள்ளதாக ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் எம்பி கூறியுள்ளார். மேலும், ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வமும், தேனி தொகுதியில் டிடிவி தினகரனும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் நிச்சயம் வெற்றி பெறுவார் என தெரிவித்தார். 2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு தேனி மக்களவை உறுப்பினர் ஆனார் ஓ.பி.ரவீந்திரநாத். ஆனால், வரும் […]

குழந்தைகளுக்கான இலவச மற்றும்‌ கட்டாய கல்வி உரிமைச்‌சட்டம்‌ 2009இன்‌ படி 2024-25ஆம்‌ கல்வி ஆண்டில்‌ 25 விழுக்காடு இட ஒதுக்கீட்டின்‌ கீழ்‌ வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும்‌ நலிவடைந்த பிரிவினரின்‌ குழந்தைகளுக்கு சிறுபான்மையற்ற தனியார்‌ சுயநிதி பள்ளிகளில்‌ எல்கேஜி வகுப்பிலும்‌, 1-ம்‌ வகுப்பு முதல்‌ நடைபெற்று வரும்‌ பள்ளிகளில்‌ மாணவர் சேர்க்கைக்கு ஏப்ரல்‌ 3-வது வாரத்தில் இருந்து rte.tnschool.gov.in என்ற இணையதளம்‌ மூலம்‌ விண்ணப்பிக்கலாம்‌. நிர்ணயிக்கப்பட்ட இடங்களைவிடக்‌ கூடுதலாக விண்ணப்பங்கள்‌ பெறப்பட்டால் […]

ஒரு வாக்காளரும் விடுபடக் கூடாது என்பதே தேர்தல் ஆணையத்தின் நோக்கம் என்றும் இதற்காக பல புதிய முயற்சிகளை ஆணையம் மேற்கொண்டுள்ளது என்றும் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார். மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் தயாரித்த நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தல் 2024 கையேடு வெளியீட்டு விழாவில் இந்தக் கையேட்டினை வெளியிட்டுப் பேசிய அவர், ”தபால் வாக்குகள் பதிவு செய்வதில் பல மாற்றங்கள் […]

நாம் தமிழர் கட்சியின் சின்னத்தை நேற்று அறிவிக்கும்போது திடீரென ”ரத்தக் கொதிப்பு” பாடல் ஒலித்ததால் சீமான் கோபமடைந்தார். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாராளுமன்ற தேர்தலில், ஏற்கனவே தங்கள் கட்சி பயன்படுத்திய கரும்பு விவசாயி சின்னத்தை தரும்படி, தலைமை தேர்தல் ஆணையத்திடம் கேட்டார். ஆனால், அந்த சின்னம் கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதையடுத்து கரும்பு விவசாயி சின்னத்தை கேட்டு உச்சநீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி […]

தேர்தலுக்காக எதிர் அணியினர் 25 பைசா கொடுக்கிறார்களா..? நீங்க 50 பைசா கொடுங்கள் என கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் பேசியது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள குமரகுரு, கள்ளக்குறிச்சி மாவட்டம் எடைக்கல் கிராமத்தை பூர்வீகமாக கொண்ட இவர், தற்போது உளுந்தூர்பேட்டை கந்தசாமி நகரில் வசித்து வருகிறார். தனது 21 வயதில் அதிமுக கிளைக் கழக செயலாளராக கட்சிப் பணியில் ஈடுபட்டவர், […]