fbpx

திருவண்ணாமலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”விஜய்யிடம் ஆக்கப்பூர்வமான அறிவிப்புகளை மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அவர் பல்வேறு யூகங்களுக்கு விடை சொல்வதிலேயே குறியாக இருந்தார். தனக்கு எதிரான விமர்சனங்களை பற்றி அல்லது இனி செய்யப் போகிற விமர்சனங்களை பற்றி விளக்கம் சொல்வதிலேயே அதிகநேரத்தை எடுத்துக் கொண்டார். …

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழ்நாடு மக்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார். பொதுமக்கள் பாதுகாப்பாக தீபாவளி கொண்டாட வேண்டும் என்றும், தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என்றும், பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதியத்தை முன்கூட்டியே வழங்க வேண்டும் என்றும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்.

அதனைத் தொடர்ந்து தவெக தலைவர் …

சென்னையை அடுத்த சோழிங்கநல்லூர் செம்மஞ்சேரி பேருந்து நிலையம் அருகே அதிமுகவின் 53ஆம் ஆண்டு விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, “அதிமுக ஆட்சியில் காவல்துறையை மரியாதையாக நடத்தினோம். ஆனால், திமுக ஆட்சியில் காவல்துறையால் சுதந்திரமாக செயல்பட முடியாத நிலை இருக்கிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. மக்களின் வரிப்பணத்தில் …

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் உரையாற்றிய கட்சியின் தலைவர் விஜய், “எங்களுடைய கட்சியை A டீம், B டீம் என்று சொல்வது, எங்களுக்கென்று ஏதாவது சாயங்களை பூசுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. எங்கள் கட்சிக் கொடியில் உள்ள வர்ணங்கள் மட்டும்தான் எங்கள் வர்ணம். அதைத் தாண்டி வேறு யாரும் எந்த வர்ணத்தையும் எங்கள் மீது …

தவெக தலைவர் விஜய், திமுகவை நேரடியாக எதிர்க்கத் தொடங்கியுள்ள நிலையில், திருச்சி சூர்யாவின் பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. “புதிதாக கட்சி ஆரம்பிக்கும்போது கவனத்தை ஈர்க்க வேண்டுமென்றால் ஆளுங்கட்சியை விமர்சிக்க வேண்டும். அதற்காகவே திமுகவை விஜய் விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டில் ஒரு குடும்பம் மக்களைச் சுரண்டி ஊழல் செய்து வருகிறது. அதேசமயம், அதிமுகவில் முதலமைச்சராக இருந்தவரே ஊழல் …

ஃபாசிச எதிர்ப்பைக் கிண்டல் செய்வதன் மூலம் பாஜக எதிர்ப்புத் தேவையில்லை என்பதைப் போன்ற தோற்றம் இன்னொரு புறம். இது என்னவகை நிலைப்பாடு? என விஜய்க்கு திருமாவளவன் கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் அவர்கள் 27- 10- 2024 அன்று விக்கிரவாண்டியில் நடைபெற்ற தனது கட்சியின் முதல் மாநாட்டில் ஆற்றிய …

போதை பொருள் கடத்தல் வழக்கில் இயக்குனர் அமீர் உள்ளிட்ட 12 பேருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் திரைப்படத் தயாரிப்பாளரான ஜாபர் சாதிக்கை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் கடந்த மார்ச் மாதம் கைது செய்தனர். இந்நிலையில் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறை அதிகாரிகளும் கடந்த ஜூன் 26-ல் …

த.வெ.க மாநாட்டில் கலந்து கொள்ள வருகை புரிந்து உயிரிழந்த கட்சி தொண்டர்களுக்கு விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

த.வெ.க மாநாட்டில் கலந்து கொள்ள லட்சக்கணக்கானோர் வாகனங்கள் மூலம் வருகை புரிந்தனர். அதில் மாநாட்டிற்காக திருச்சியில் இருந்து வந்த கார் ஒன்று, சாலையில் இருந்த தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில், 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 …

நடிகர் விஜய்யின், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நேற்று (27-10-24) நடைபெற்றது. அந்த கூட்டத்தில் த.வெ.க தலைவர் விஜய் தவெகவின் பெயர்க்காரணம், கட்சியின் கொள்கைப்பாடல், கொடியின் நிறம், தவெகவின் நிலைப்பாடு, கோட்பாடுகள், கட்சியின் கொள்கைகள் போன்றவற்றை அக்கட்சியின் தலைவர் விஜய் கூறியிருந்தார்.

பிரித்தாலும் பிளவுவாத அரசியல் சித்தாந்தம், …

இலங்கை அரசால் கைது செய்யப்பட்டது தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் நேற்று முன்தினம் (26.10.2024) மீன்பிடிக்கச் சென்றிருந்தபோது, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், …