தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் அஜித்குமாரின் கார் பந்தய பயணத்தை மையமாக வைத்து உருவாகி வரும் ‘கிளாடியேட்டர்ஸ்’ என்ற ஆவணப் படத்தில், முதல்வர் விஜய் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில், ‘டாகு-டிராமா’ (Docu-drama) பாணியில் தயாராகி வரும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். சமீபத்தில் தமிழக திரையரங்குகளில் வெளியான இப்படத்தின் முன்னோட்டம் (டிரைலர்) ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தமிழகத்திற்கான […]

தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் இடதுசாரி கட்சிகள் தனித்துப் போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. அதிமுக சார்பில் வெற்றி பெற்ற தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ.-க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்ததால், இவ்விரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் ஆளுங்கட்சியான தவெக, பிரதான எதிர்க்கட்சியான திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் ஏற்கனவே தங்கள் வேட்பாளர்களை அறிவித்துத் தீவிர […]

டெல்லியில் நடந்த 18-வது பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டில் பங்கேற்க வந்த சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் பாதுகாப்புக்காக பிரத்யேகமாக இந்தியா கொண்டு வரப்பட்டுள்ள ‘ஹாங்கி என்701’ (Hongqi N701) என்ற அதிநவீன கவச சொகுசு கார் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வெளிநாட்டுப் பயணங்களின் போது தனது பிரத்யேக ‘அவுரஸ்’ காரைப் பயன்படுத்துவது போலவே, ஜி ஜின்பிங்கும் சீனா தயாரிப்பான ‘ரெட் பேனர்’ பிராண்டின் […]

ஆபாசம், அவதூறு, தரக்குறைவான பேச்சு, மிரட்டல் இவைதான் அரசியல் ஆயுதங்கள் என்று நினைத்துக்கொண்டு செயல்படும் கட்சி தமிழகத்தில் திமுகவை தவிர வேறு எதுவும் இல்லை என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “ இறைவனுக்குச் சேவை செய்யும் இந்து சமய அறநிலையத்துறையின் அமைச்சராக இருந்த ஒருவர், அந்தப் பதவியின் மாண்பையும், பொது வாழ்க்கைக்கான குறைந்தபட்ச நாகரிகத்தையும் மறந்து, வாய்க்கு வந்தபடி தரக்குறைவாகப் […]

சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான தமிழ்நாடு அரசின் முடிவை கடுமையாக விமர்சித்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்த முடிவை அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். நிதி நெருக்கடியைச் சுட்டிக்காட்டி வாக்குறுதிகளை நிறைவேற்றத் திணறும் தவெக அரசு, ரூ.1200 கோடி செலவில் அவசர கதியில் புதிய தலைமைச் செயலகம் கட்ட முயல்வது கண்டனத்திற்குரியது. செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் இடநெருக்கடி இருப்பதாகக் கூறிவிட்டு, […]

தமிழகத்தில் காலியாகவுள்ள சட்டசபை தொகுதிகளில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கியுள்ள சூழலில், ஆளும் தவெக, பிரதான எதிர்க்கட்சியான திமுக, அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சி என 4 முனைப் போட்டி உறுதியாகியுள்ளது. நாம் தமிழர் தவிர மற்ற 3 கட்சிகளும் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு களப்பணியைத் […]

கொளத்தூர் தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு திடீர் மூச்சுத்திணறல் மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அண்மையில் நிறைவடைந்த தமிழ்நாடு சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் முழுமையாகப்பங்கேற்றிருந்த எம்எல்ஏ வி.எஸ். பாபுவுக்கு, நேற்று அதிகாலை திடீரென கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை தொடர்பாக […]

தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய தமிழக வெற்றிக் கழகத்தை மாநில அளவிலான அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் அக்கட்சியின் பிரதான அடையாளமாக விளங்கும் ‘விசில்’ சின்னம் தவெக-வுக்கே நிரந்தரமாக ஒதுக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக களமிறங்கிய தவெக, யாரும் எதிர்பாராத வகையில் 35 சதவீத வாக்குகளை வாரிக் குவித்து அசத்தியது. சுமார் 1.8 கோடிக்கும் அதிகமான […]

தவெக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றதைத் தொடர்ந்து, இக்கூட்டணிக்கு “மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி” என அதிகாரப்பூர்வமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது. இக்கூட்டணியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக), காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக), மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) ஆகிய 5 கட்சிகள் அதிகாரப்பூர்வமாக இடம்பெற்றுள்ளன. இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் […]

டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் பணம் வசூலிப்பது தற்போது 80 சதவீதம் வரை குறைந்துள்ளதாக டாஸ்மாக் சங்கங்கள் தெரிவித்துள்ளதாக அமைச்சர் விக்னேஷ் கூறியுள்ளார். மீதமுள்ள 20 சதவீத முறைகேடுகள் எங்கு நடக்கிறது என தகவல் தெரிவித்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார். ஒவ்வொரு மாதமும் நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில் கடந்த கால தவறுகள், புதிய மாற்றங்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து […]