தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் பச்சிளம் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” தொடக்க விழா நடைபெறும் இடம், பாதுகாப்பு காரணங்களால் உசிலம்பட்டியிலிருந்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் மீதான மக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தவும், தமிழர் மரபில் தொன்றுதொட்டு வரும் தாய்மாமன் சீர்முறையைப் பிரதிபலிக்கும் வகையிலும் […]
அரசியல்
political news | Get all the latest news and updates on Tamil Nadu, National and International Politics news only on 1newsnation.com. Read all news including political news, current affairs and news headlines and more…
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மாநிலம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்துவதற்கான பணிகள் குறித்த உயர்நிலைக் கலந்தாய்வுக் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கடலோர மற்றும் டெல்டா மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கிய முதல்வர், கடல் அரிப்பு, கடல் நீர் உட்புகுதல் மற்றும் வெள்ள அபாயம் உள்ள கடலோரப் பகுதிகளை […]
தமிழக அரசியல் களத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், எந்தக் கூட்டணியும் இன்றி தனித்துக் களம் காணும் நாம் தமிழர் கட்சி, தனது முதற்கட்ட பிரச்சார பணிகளை அதிரடியாக முடுக்கிவிட்டுள்ளது. பட்டியலினத்தவருக்காக ஒதுக்கப்பட்ட இந்தத் தனித் தொகுதியில், இம்முறை பாரம்பரியக் கட்சிகளின் கணக்குகளை உடைக்கும் வகையில், இளம் பெண் பட்டதாரியான பொறியாளர் மு.கார்த்திகாவை நாம் தமிழர் கட்சி வேட்பாளராகக் களமிறக்கியுள்ளது. கடந்த தேர்தல்களில் இரு […]
தமிழகத்தில் காலியாக உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில், தனித் தொகுதிகளான மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் மற்றும் இடதுசாரிகள் என 5 முனைப் போட்டி களத்தில் நிலவினாலும், கள யதார்த்தத்தில் அதிமுகவுக்கும் ஆளும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இடையேதான் அங்கு நேரடி அனல் பறக்கும் பலப்பரீட்சை உருவாகியுள்ளது. கடந்த பொதுத்தேர்தலில் அதிமுக […]
தங்களின் ஆதரவை வாபஸ் பெற்றால் அடுத்த கணமே தவெக ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று முத்தரசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) மூத்த தலைவரும், முன்னாள் மாநிலச் செயலாளருமான முத்தரசன், சட்டமன்ற பேரவையில் மக்கள் சந்திக்கும் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்துக் கேள்விகள் எழுப்பப்படும் போது, அதற்கு உரிய விளக்கங்களை அளிக்காமல் முதல்வரும் அவரது அமைச்சர்களும் பிரச்சனைகளை திட்டமிட்டு திசை திருப்பி வருவதாக கூறினார். ஒரு […]
தொழில் முதலீடுகளை ஈர்க்கிறேன் என்ற பெயரில் முதல்வர் விஜய் லண்டனுக்குப் படை திரட்டிச் சென்றிருப்பது காலாவதியான பழைய அரசியல் பாணி என்றும், லண்டன் பொருளாதாரமே தள்ளாடும் நிலையில் அங்கே போய் எதை ஈர்க்க முடியும் என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தனது இயக்கம் மிக விரைவில் முழுமையான அரசியல் கட்சியாக வடிவெடுக்கும் என்பதையும் அவர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, ஒரு கூட்டத்தையே லண்டனுக்கு […]
தமிழ்நாட்டில் காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் சுய மருத்துவம் செய்வதை தவிர்த்து, உடனடியாக அரசு மருத்துவமனைகளை அணுக வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக டெங்கு பாதிப்பு தொடர்ச்சியாக குறைந்து வருவதாக கூறியுள்ளார். அதன்படி, 2023இல் 56,863 ஆக இருந்த பாதிப்பு, 2024இல் 46,971 ஆகவும், 2025இல் 25,585 ஆகவும் குறைந்த நிலையில், நடப்பு 2026-ஆம் […]
தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், மதுராந்தகம் தொகுதி தவெக வேட்பாளரை ஆதரித்துத் தமிழக முதல்வர் விஜய் 2 நாட்கள் தீவிரப் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இவ்விரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வேட்புமனுத் தாக்கல் கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி தொடங்கி 16-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் அக்டோபர் 9-ஆம் தேதி […]
மதுராந்தகத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, திமுக – அதிமுகவை கடுமையாக சாடினார். அவர் பேசுகையில், “அமைச்சராகவோ அல்லது சட்டமன்ற உறுப்பினராகவோ பேசுவதை விட, தவெகவின் ஒரு சாதாரணத் தொண்டனாக மக்கள் மத்தியில் பேசுவதையே நான் பெருமையாக உணர்கிறேன். சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சினைகளைப் பேச எழுந்தாலே, அவை நெறிமுறை என்ற பெயரில் நம்மைப் பேச விடாமல் தடுக்கிறார்கள். திமுக 75 ஆண்டுகாலப் பாரம்பரியம் கொண்ட ஆலமரம் […]
சென்னையில் நடந்த திமுகவின் 75-வது ஆண்டு பவள விழா மற்றும் முப்பெரும் விழாவில் பங்கேற்றுத் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், பெரும்பான்மை பலம் கூட இல்லாமல் கூட்டணிக் கட்சிகளின் தயவில் இயங்கும் தவெக அரசு, அவர்களையே நம்பாமல் குதிரை பேரம் நடத்திக் கொண்டிருப்பதாக குற்றம்சாட்டினார். திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை முடக்குவதும், அவற்றுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதுமே தற்போதைய அரசின் சாதனையாக உள்ளது என்று சுட்டிக்காட்டிய ஸ்டாலின், “முதல்வர் தொடர்ந்து […]

