அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ மாற்றுக்கட்சிகள் அதிமுக கூட்டணியில் இணையுமா என்பது எனக்கு தெரியாது.. அது பொதுச்செயலாளரின் முடிவு.. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஈரோட்டில் பேசிய போது தவெக கொடியை காட்டுகின்றனர்.. விஜய்க்காக குரல் கொடுத்தவர் தான் எடப்பாடி பழனிசாமி தான் தவெக தொண்டர்கள் கூறுகின்றனர்.. தவெக தொண்டர்கள் தன்னெழுச்சியாக தவெக தொண்டர்கள் வருகின்றனர்.. ஆனால் காழ்ப்புணர்ச்சியில் […]

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது அதிமுக – தவெக கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் “ பாஜகவுக்கு நன்றி உடன் இருப்பதாக கூறும் பழனிசாமி, 2024 மக்களவை தேர்தலில் எதற்காக பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறினார்.. பாஜகவுக்கு முக்கியமான தேர்தலான பாராளுமன்ற தேர்தலின் போது எதற்காக கூட்டணியில் வெளியேறினார்.. பாஜக […]

ஒரே நாளில், டெல்லி முதல் மதுரை வரை, திமுகவின் மனசாட்சியை விட வேகமாக, நீதியும் தர்மமும் திமுகவைத் துரத்திக் கொண்டிருக்கின்றன என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்துக்கும், அரசியல் காழ்ப்புணர்வுக்கும், மாண்புமிகு உச்சநீதிமன்றமும், மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையும், இன்று தகுந்த பாடம் கற்பித்திருக்கிறார்கள். 1) திமுக எம்எல்ஏவுக்குச் சொந்தமான மருத்துவமனைகளுடன் தொடர்புடைய கிட்னி திருட்டு […]

எடப்பாடி பழனிசாமி அதிமுகவை உள் வாடகைக்கு விட்டுள்ளார் என்று உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று சென்னை இந்தியா முழுவதும் பாஜகவுக்கு எதிராக போராடும் அனைவரும் தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் படத்தை வைத்து முழக்கமிடுவதை பார்க்க முடிகிறது.. தந்தை பெரியார் அரசியல் ரீதியாக தமிழ்நாட்டை பக்குவப்படுத்தி வைத்திருக்கிறார்.. அதனால் தான் பாஜகவின் எந்த தில்லுமுல்லு வேலையும் தமிழ்நாட்டில் எடுபடவில்லை.. பாஜகவால் நேரடியாக மக்கள் ஆதரவை […]

போட்டி கட்சிகள், வேட்பாளர்களுக்கு எதிரான காணொலி காட்சிகளுக்கு செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது வழிகாட்டு நெறிமுறைகளை அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பீகார் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் மற்றும் 8 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்த அறிவிக்கை 2025 அக்டோபர் 6 அன்று வெளியிடப்பட்டதை அடுத்து, நடத்தை நெறிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இந்த விதிமுறைகள் வேட்பாளர்கள் மற்றும் அரசியல்கட்சிகளின் சமூக ஊடகம் உட்பட இணைய தளத்தில் […]

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அஇஅதிமுக) என்பது தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதியில் உள்ள ஓர் இந்திய அரசியல் கட்சியாகும். திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து பிரிந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் 17 அக்டோபர் 1972 அன்று மதுரையில் நிறுவப்பட்ட கட்சி ஆகும். அண்ணாதுரை அவர்களின் அடிப்படையிலான சமூக-ஜனநாயக மற்றும் சமூக நீதிக் கொள்கைகளை எம்.ஜி.ஆர் அண்ணாயிசம் என்று கூட்டாக உருவாக்கியது. தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஏழு […]

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 30 மீனவர்கள் நேற்று அதிகாலை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், இதுவரை சிறைபிடிக்கப்பட்ட அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், “ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 30 மீனவர்கள், அக்டோபர் 9 அன்று இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், […]

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கிட்னி முறைகேடு முழுமையாக விசாரிக்கப்பட்டு, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்பதை வலியுறுத்தி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மாநிலம் முழுவதும் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று நாமக்கல்லில் பேசிய அவர்; விசைத்தறி தொழிலாளர்களின் பணத்தாசை காட்டி கிட்னி எடுத்துள்ளனர். திமுக எம்எல்ஏ மருத்துவமனையில் உறுப்பு மாற்று அறுவை […]