முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் சுயசரிதை புத்தகத்தை டெல்லியில் பிரதமர் மோடி வெளியிட்டார். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றும்போது, ராம்நாத் கோவிந்தின் சுயசரிதை புத்தகம், இந்திய ஜனநாயகத்தின் பாரம்பரிய அடையாளமாக மாறும் எனக்கூறினார். இளைய தலைமுறையினர் இந்த புத்தகத்தில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. இது ரீல்ஸ் காலம். சோஷியல் மீடியா பிரபலங்கள் இளைஞர்களை வேறு திசையில் ஈர்க்ககூடும். குறுக்கு வழியில் செல்ல நினைப்பவர்கள், ரயில் நிலையங்களில் […]

அரசியல் களத்தில் இறங்க தீவிர ஆர்வம் காட்டி வரும் நடிகர் தனுஷின் நகர்வுகளையும், அவரது ரசிகர் மன்ற செயல்பாடுகளையும் உளவுத்துறை மூலம் தீவிரமாக முதல்வர் விஜய் ரகசியமாக உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. நடிகர் தனுஷ் கடந்த ஓராண்டாகவே அரசியல் பிரவேசம் குறித்து யோசித்து வருவதாகவும், அதன் தொடர்ச்சியாக தனது ரசிகர் மன்றத்தை முழுமையான அரசியல் இயக்கமாக மாற்றும் முயற்சிகளில் இறங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. தனது பிறந்த நாள் விழாவில் பிரத்யேக கொடியை […]

தொகுதி மறுவரையறை நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழகச் சட்டமன்றத்தில் நாளை தனித் தீர்மானம் கொண்டு வரப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு மேற்கொள்ள திட்டமிட்டுள்ள தொகுதி மறுவரையறை விவகாரம் குறித்து ஆலோசிப்பதற்காக, தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தை முதலமைச்சர் விஜய் கூட்டியிருந்தார். அக்கூட்டத்தில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட கருத்துகள் மற்றும் ஆலோசனைகளின் அடிப்படையில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில், தொகுதி மறுவரையறை […]

தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனத்திற்கு பால் விநியோகம் செய்யும் பால் உற்பத்தியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை கருத்தில் கொண்டு, பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்குவது குறித்து தமிழக முதலமைச்சர் விஜய் தீவிரமாக பரிசீலித்து வருவதாக சட்டசபையில் அமைச்சர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் விவாதத்தின் போது பேசிய அவர், ஆவின் நிறுவனத்தின் செயல்பாடுகளை மேம்படுத்தவும், கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் பால் வழங்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து […]

முதல்வர் விஜய், அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து வழக்கு திரும்பப் பெறப்பட்டது தொடர்பான பல்வேறு தகவல்களும் கேள்விகளும் இணையத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் பரவலாக பேசப்பட்டு வருகின்றன. முன்னதாக, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் சங்கீதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த விவாகரத்து மனுவை, கடந்த வாரம் வழக்கு விசாரணைக்கு வந்தபோது திரும்பப் பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அம்மனு முடித்து வைக்கப்பட்டதாக நீதிமன்றம் அறிவித்தது. கணவருடன் இணைந்து வாழ முடியாது என்ற […]

தமிழகத்தில் ஆட்சியமைத்துள்ள புதிய அரசின் வருகைக்கு பிறகு, மாநில அரசியல் களம் பல்வேறு மாற்றங்களை கண்டு வருகிறது. அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் சிலர் தவெகவில் இணைந்துள்ளனர். இதனிடையே, திமுக மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையே எதிர்காலத்தில் கூட்டணி உருவாக வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் கருத்துகள் உலா வந்தன. இது தொடர்பான கேள்விக்கு அண்மையில் பதிலளித்த திமுக எம்பி கனிமொழி சோமு, “அரசியலில் […]

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தனித் தீர்மானம் முன்வைக்கப்பட்டது. இந்தத் தீர்மானத்தை அமைச்சர் அருண் முன்மொழிந்தார். நீட் தேர்வை ரத்து செய்யும் தீர்மானத்துக்கு திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்து பேசினார்கள். அப்போது, நீட் தேர்வு முறைக்கு எதிரான இந்தத் தீர்மானத்தில் பாஜக எம்.எல்.ஏ. போஜராஜன் தனது எதிர்ப்பை பதிவு செய்தார். மேலும், மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் அரசு […]

இந்தியாவில் யுபிஐ தொடங்கபட்ட காலத்திலிருந்தே நுகர்வோருக்கு முற்றிலும் இலவசமாகவே வழஙகபட்டு வருகிறது. எதிர்காலத்திலும் ஒவ்வொரு இந்தியரும் எவ்விதமான பரிவர்த்தனை கட்டணமும் இன்றி இந்த உடனடி டிஜிட்டல் சேவையை தொடர்ந்து பயன்படுத்துவார்கள் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் ‘வரிவிதிப்பு மற்றும் இதர சட்டங்கள் மசோதா 2026’ மீதான விவாதத்தின் போது பேசிய அவர், இந்த மசோதாவானது 2007-ஆம் ஆண்டின் ‘பணம் செலுத்துதல் மற்றும் தீர்வு முறைமைகள் சட்டத்தின்’ […]

சென்னை பட்டினம்பாக்கத்தில் முதல்வர் விஜய்யின் இல்லத்திற்கு அருகாமையிலேயே புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான முதற்கட்ட ஆய்வுப் பணிகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்றது முதல் நிர்வாக ரீதியாகப் பல்வேறு அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள பாரம்பரியமிக்க புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்திருந்த முதலமைச்சரின் அலுவலக அறை, நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடிக்கு அண்மையில் […]

நடிகர் தனுஷ், தனது ரசிகர் நற்பணி மன்றங்களை சட்டமன்றத் தொகுதி வாரியாக விரிவுபடுத்தும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருவது, அவர் விரைவில் அரசியலில் களமிறங்க ஆயத்தமாகிறாரா என்ற விவாதத்தை திரையுலகிலும், அரசியல் வட்டாரத்திலும் கிளப்பியுள்ளது. தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஓம்’ திரைப்படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இப்படத்தில் சாய் பல்லவி, ஸ்ரீலீலா, மம்மூட்டி உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்கள் நடிப்பதுடன், சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இதனைத் தொடர்ந்து, […]