திமுக எம்பி கனிமொழியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை வாழ்த்தி நாமக்கல்லில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ள சம்பவம் முதல்வர் குடும்பத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவின் வாரிசுகள் அதிகாரப் போட்டியில் இருந்து மு.க.அழகிரி விலகிவிட்டார். இதனால் மு.க.ஸ்டாலின் போட்டியில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறார். இதற்கு அடுத்தபடியாக உதயநிதி ஸ்டாலினுக்கும் போட்டி இருக்க முடியாது என்று சொல்வதற்கில்லை. எந்த நேரத்திலும் போட்டியாக கனிமொழி முன்வந்து நிற்க வாய்ப்பிருக்கிறது என்று அக்கட்சியினரே தெரிவித்துள்ளனர். அதற்கேற்றார் போல் கனிமொழியின் ஒவ்வொரு பிறந்த […]

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி அன்று மத்திய பட்ஜெட் 2023-24ஐ தாக்கல் செய்கிறார். ஒவ்வொரு ஆண்டையும் போல், இந்த வருடமும் மத்திய பட்ஜெட்டில் பொதுமக்கள் மற்றும் பல துறைகள் சார்பாக அதிகமான எதிர்பார்ப்புகள் இருக்கிறது. அதிலும், குறிப்பாக வரி செலுத்துவோருக்கு நடப்பாண்டு பட்ஜெட்டில் அதிக கோரிக்கைகள் இருக்கிறது. வரி விவகாரத்தில் பெரிய அளவிலான முடிவுகள் எடுக்கப்பட்டு சுமார் 9 வருடங்கள் ஆகிவிட்டது. இதனால், நடப்பாண்டு பட்ஜெட் […]

தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி, தனது காதலியுடன் எடுத்ததாக கூறப்படும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மகனும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பேரனுமான இன்பநிதி, ஒரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. இன்பநிதி ஒரு கால்பந்தாட்ட வீரர் ஆவார். அவர் சமீபத்தில் கால்பந்து போட்டியில் பங்கேற்க […]

பாமகவின் தென் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்க வந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மதுரை விமான நிலையத்தில் பத்திரிகையாளரை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “பொதுவாக தமிழகத்தில் தென் மாவட்டங்கள் வளர்ச்சி பெறாத மாவட்டங்களாக உள்ளது. கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டாலும் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை. மதுரை, தூத்துக்குடி தொகுதிகள் வளர்ச்சி பெற்றால் தென் மாவட்டங்கள் வளர்ச்சி பெறும் இதை மத்திய மாநில அரசுகள் […]

சென்ற 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை பொதுத் தேர்தலின்போது அனைத்து அரசியல் கட்சிகளும் மிகத் தீவிரமாக பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்தனர். அதுவும் அப்போதைய ஆளும் கட்சியாக இருந்த அதிமுக தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியைப் பிடிப்பதற்கு பல்வேறு யுத்திகளை கையாண்டது. அதோடு பல கவர்ச்சிகரமான தேர்தல் வாக்குறுதிகளையும் வழங்கியது. இதில் குறிப்பிடத்தக்க வாக்குறுதி என்னவென்றால், மாதம்தோறும் குடும்பத் தடவைகளுக்கு 1500 ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என்று அதிமுக […]

தமிழகத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி பிரதிநிதிகள் மீது அவ்வபோது விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியின் திமுக எம்.எல்.ஏவும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். அதன்படி, சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ எபினேசர் ஆய்வு பணியில் ஈடுபட்ட போது, எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் கார்ப்பரேஷன் ஊழியர் வெறும் கைகளால் சாக்கடை கழிவுகளை அள்ளி சுத்தம் செய்ததாக குறிப்பிடப்பட்ட அந்த […]

பத்திரிகையாளர்களை தொடர்ந்து இழிவுபடுத்தி வரும் அண்ணாமலைக்கு சென்னை பத்திரிகையாளர்கள் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னை கமலாலயத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, செய்தியாளர்களுக்கும் அவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ச்சியாக கேள்விமேல் கேள்வி கேட்டு பரபரப்பான சூழல் நிலவிய நிலையில், அண்ணாமலைக்கும் செய்தியாளர்களுக்கு வாக்குவாதம் முற்றியது. ஒரு கட்டத்தில் யூடியூப் சேனலுக்கு கேள்வி கேட்க என்ன உரிமை இருக்கிறது என ஆவேசமாக கேட்டார். […]

பாஜகவில் இருந்து விலகிய டாக்டர் சரவணன் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று அதிமுகவில் இணைந்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மதுரை மாவட்டம் புதுப்பட்டியைச் சேர்ந்த இராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் போது திமுக-பாஜகவுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, மதுரை விமான நிலையத்தில் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் செருப்பு வீசி தாக்குதல் நடத்தினர். இச்சம்பவம் தொடர்பாக 5-க்கும் மேற்பட்ட […]

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சமீப காலமாகவே, அரசியல் பணிகளில் இருந்து சோனியா காந்தி கொஞ்சம் கொஞ்சமாக விலகி வருகிறார். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக, சோனியா காந்தி காங்கிரஸ் தலைவராக பதவி வகித்து வந்தார். பின்னர், ராகுல் காந்திக்கு அந்த பதவி வழங்கப்பட்டது. ஆனால், 2019 மக்களவை தேர்தல் தோல்வி காரணமாக தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகி, அந்த பதவி […]

ஈவிகேஎஸ் இளங்கோவன் மகனும், காங்கிரஸ் எம்.எல்.ஏ-வுமான திருமகன் ஈவெரா மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 46. காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். முன்னாள் மத்திய அமைச்சரான இவருக்கு திருமகன் ஈவெரா, சஞ்சய் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இதில், திருமகன் ஈவெரா தனது தந்தையை போல அரசியலில் ஈடுபட்டு வந்தார். இவர் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற தொகுதியில் […]