85 வயதுக்கும் மேற்பட்ட வாக்காளர்கள், குறிப்பிட்ட குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் தபால் வாக்கு மூலம் தங்கள் வாக்குகளை செலுத்தலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பீகார் சட்டப்பேரவை தேர்தல், ஆறு மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசங்களில் 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்த விவரங்களை 2025 அக்டோபர் 06 அன்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ன் பிரிவு 60 (சி)-ன் படி […]

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யுடன், அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தொலைபேசியில் பேசியதாக வெளியான பரபரப்பான தகவல்களுக்கு மத்தியில், அவர் மக்கள் மத்தியில் கூட்டணி குறித்தும், திமுக அரசு குறித்தும் அதிரடியான கருத்துக்களை கூறியுள்ளார். கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுக அமைத்திருப்பது “வெற்றுக் கூட்டணி” என்று விமர்சித்தார். அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமையும் என்று சூளுரைத்த அவர், இந்தக் கூட்டத்தில் தவெக […]

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு குறித்து விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழுவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தவெக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கரூரில் கடந்த செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து நீதிபதி செந்தில்குமார் உத்தரவிட்டார். இந்நிலையில், இந்த […]

டாஸ்மாக் மூலம் நான்கு ஆண்டுகளில் 22 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடித்திருக்கிறார்கள் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்பதை வலியுறுத்தி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மாநிலம் முழுவதும் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று திருச்செங்கோட்டில் பேசிய அவர்; கரூரில் அண்மையில் நடந்த சம்பவம் அனைவருக்கும் தெரியும். வேண்டுமென்றே திட்டமிட்டு அந்தக் கூட்டம் சரியான முறையில் நடைபெறக் கூடாது என்பதற்காக பிரச்சினை உருவாக்கப்பட்டதாக […]

தனக்குத்தானே சிலை வைப்பது, தனக்குத் தானே டாக்டர் பட்டம் கொடுத்துக் கொள்வது என்று உங்கள் தந்தை செய்த நகைச்சுவைகள் போதாதென, தற்போது பொது இடங்களுக்கு அவர் பெயரை வைத்து, அவரை மிஞ்சிக் கொண்டிருக்கிறீர்கள் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே என அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் ஜாதிப்பெயர்களை நீக்க உத்தரவிட்டு தமிழக அரசின் சார்பில் அரசாணை […]

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலை நிறுத்தக் கோரி இன்று சென்னை எழும்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் கண்டன ஆர்ப்பாடம் நடைபெற்றது.. தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசினார்.. அப்போது “ காசாவில் உலகமே பார்க்க இஸ்ரேல் நடத்தி வரும் அப்பட்டமான மனித உரிமை மீறல் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது; உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டியது! எங்கோ நடக்கிறது என்று உலகின் மிகப் பெரும் ஜனநாயகமான இந்தியா இந்த விவகாரத்தில் […]

கடந்த 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையுமே உலுக்கியது.. இந்த தகவல் அறிந்த உடன் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டது.. ஆனால் இந்த பெருந்துயரத்திற்கு காரணமான தவெக தலைவர் விஜய்யோ அல்லது தவெகவினர் கரூருக்கு செல்லவில்லை.. விஜய் தனி விமானத்தில் புறப்பட்டு அன்றிரவே சென்னை வந்தடைந்தார்.. 3 நாட்களுக்கு […]